மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த சி.எஸ்.கே 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. சி.எஸ்.கே தரப்பில் மொயின் அலி 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
-
1 டூப்ளஸியின் புது முயற்சி
சி.எஸ்.கேவின் தொடக்க வீரர் டூப்ளஸி, தனது வழக்கமான பாணியில் ஆடாமல் ரிஸ்கான ஷாட்கள் மூலம் கவனம் ஈர்த்தார். ஓபனிங் பாட்னர்ஷிப் பெரிதாக அமையாத நிலையில், டூப்ளஸியின் ரிஸ்கான ஷாட்களால் பவர்பிளேவில் ஓரளவு ரன் சேர்த்தது சி.எஸ்.கே. உனத்கட் பந்துவீச்சில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை டூப்ளஸி விளாசினார். பவர்பிளேவின் கடைசி ஓவரில் டூப்ளஸி ஆட்டமிழந்தபோது, சி.எஸ்.கே 45 ரன்கள் சேர்த்திருந்தது. டூப்ளஸி 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களோடு 33 ரன்கள் சேர்த்தார். முதல் இரண்டு மேட்சுகளிலும் சொதப்பிய ருத்துராஜ் கெய்க்வாட், 13 பந்துகளில் 10 ரன்களோடு வெளியேறினார்.
-
2 திணறல் தோனி
தொடக்க வீரர்களை இழந்த சி.எஸ்.கே-வுக்கு அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிய பாட்னர்ஷிப் அமைக்கத் தவறிவிட்டனர். மொயின் அலி 26 ரன்களிலும், ரெய்னா 18 ரன்களிலும் அம்பதி ராயுடு 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தோனி களமிறங்கியபோது சி.எஸ்.கேவின் ஸ்கோர் 125. ஆறு ஓவர்கள் மீதமிருந்தநிலையில், தோனியால் சி.எஸ்.கே பெரிய ஸ்கோரைப் பதிவு செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
கடைசி ஆறு ஓவர்களில் 18 பந்துகளைச் சந்தித்த தோனி எடுத்தது 17 ரன்கள். ராஜஸ்தான் வீரர்கள் பந்துவீச்சில் தோனி, தனது வழக்கமான அதிரடிக்குத் திரும்பவே முடியவில்லை. இறுதியாக இளம் வீரர் சேத்தன் சகாரியா வீசிய ஸ்லோபாலில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தோனியின் அதிரடி மிஸ்ஸாவது சி.எஸ்.கேவுக்குப் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
-
3 பேட்டிங் டெப்த்
பிளேயிங் லெவனில் 10 பேட்ஸ்மேன்களைக் கொண்டிருக்கும் அணி சி.எஸ்.கே. அதனால், மிடில் ஓவர்கள் சொதப்பல் அந்த அணியைப் பெரிதாக பாதிக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் விக்கெட்டைப் பற்றிக் கவலைப்படாமல் வருவதும் போவதுமாக இருந்தார்கள். ரன் அவுட் சி.எஸ்.கேவை ரொம்பவே பாதித்தது. எட்டாவது பேட்ஸ்மேனான சாம் கரண் 6 பந்துகளில் 13 ரன்களும் ஒன்பதாவது பேட்ஸ்மேனான டிவைன் பிராவோ 8 பந்துகளில் 20 ரன்களும் சேர்த்தனர். கடைசி 3 ஓவர்களில் சி.எஸ்.கே 44 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 188-9 என்ற சவாலான ஸ்கோரை அந்த அணியால் எட்டமுடிந்தது.
-
4 பட்லர் போராட்டம்
போன மேட்சில் தனது பவுலிங்கால் பஞ்சாப்பை பஞ்சராக்கிய சி.எஸ்.கே பவுலர் தீபக் சஹார், பவுலிங்கை ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே அடித்து ஆடத் தொடங்கினர். அவர் வீசிய முதல் பந்தையே ஸ்டிரெய்ட் டிரைவ் பவுண்டரியாகத் தொடங்கிய பட்லர், ஸ்ட்ரோக் பிளேவால் அசத்தினார். பவர்பிளேவில் அசத்திய சாம்கரண் தொடக்க வீரர் மனன் வோரா, ஆபத்தான சஞ்சு சாம்சன் என இரண்டு பேரையும் பெவிலியனுக்கு அனுப்பினார். மறுமுனையில் பவுண்டரி, சிக்ஸர்களாக அசத்தினார் பட்லர். பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தது.
-
5 ஜடேஜா - மொயின் அலி மேஜிக்
பவர்பிளேவுக்குப் பின் ராஜஸ்தான் ரன்ரேட்டை சி.எஸ்.கே ஸ்பின்னர்கள் கட்டுப்படுத்தினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பட்லரை 12வது ஓவரின் முதல் பந்தில் வெளியேற்றிய ரவீந்திர ஜடேஜா, கடைசி பந்தில் ஷிவம் துபேவை ஆட்டமிழக்கச் செய்து பிரஷரை ஏற்றினார். மறுமுனையில் தங் பங்குக்கு மொயின் அலியும் மிரட்டினார். அவர் வீசிய 13வது ஓவரில் மில்லர், 15வது ஓவரில் ரியான் பராக், கிறிஸ் மோரிஸ் என 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார் மொயின் அலி. இதனால், 15வது ஓவரிலேயே சி.எஸ்.கே வெற்றியை நெருங்கிவிட்டது. கடைசி 5 ஓவர்களில் 90 ரன்கள் என்ற பரிதாபமான நிலையில் இருந்தது ராஜஸ்தான். ஒரு முனையில் தனி ஆளாகப் போராடிய டீவாட்டியாவால் ராஜஸ்தானைக் கரைசேர்க்க முடியவில்லை. 15 பந்துகளைச் சந்தித்த டீவாட்டியா 2 சிக்ஸர்களோடு 20 ரன்களோடு வெளியேறினார்.
0 Comments