கல்வி எனும் ஆயுதம்
உலகையே மாற்றும் வலிமை படைத்த மிகப்பெரிய ஆயுதம் கல்வி மட்டுமே. எதிர்காலத்துக்கான திறவுகோல் கல்வியே. நாளைய உலகை ஆள்பவர்கள், இன்றே தயாராக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் அளிக்க வேண்டிய செல்வம் கல்வி செல்வம். கல்வியால் மட்டுமே ஒரு குடும்பம் முன்னேறும். குடும்பங்கள் முன்னேறினால் மட்டுமே அந்த சமூகமும், அந்த சமூகம் சார்ந்த நாடும் முன்னேற்றம் பெற முடியும்.
நுழைவுத் தேர்வுகளின் காலம்
பெரும்பாலான படிப்புகளுக்கும் தனித்தனியாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இனிமேல் பிளஸ் டூ மார்க்குகளை வைத்து மட்டுமே அட்மிஷன் பெற்றுவிட முடியும் என்ற நிலையும் மாறிவிடும். முன்பெல்லாம், பிளஸ் டூ படிப்புக்காக டியூஷன், கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்து, அந்தத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் போதும். ஆனால், போட்டித் தேர்வுகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் உங்கள் பிள்ளைகளின் கனவுப் படிப்பில் சேர நிச்சயம் ஒரு நுழைவு/போட்டித் தேர்வை எழுத வேண்டும். கடைசி நேரத்தில் டியூஷன் அல்லது கோச்சிங் சென்டரில் சேர்ந்து ஒருமுறை மனப்பாடம் செய்து இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுவிட்டால் போதும் என்ற நிலையும் மெல்ல மாறி வருகிறது.
கோச்சிங் ஏன் அவசியம்?
அதேநேரம், நுழைவுத் தேர்வு என்றவுடன் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் இருக்கும் பட்சத்தில் எளிதாக வெற்றிபெற முடியும். அதேபோல், இதுபோன்ற தேர்வுகளை எதிர்க்கொள்ள நமது குழந்தைகளுக்கு சிறுவயது முதலே பயிற்சி கொடுப்பதும் முக்கியமானது. இது அவர்களை மனதளவில் இந்த வகையான தேர்வுகளுக்குத் தயாராக்குவதுடன், அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும். பதற்றம், பயம் இல்லாமல் நமது குழந்தைகள் இந்தத் தேர்வுகளை எதிர்க்கொள்ளும்போது வெற்றியை வசமாக்குவார்கள். இதுபோன்ற போட்டித் தேர்வுகளை வெல்ல மனப்பாடம் செய்யும் திறன் மட்டுமே போதாது. Analytical Skill எனப்படும் பகுப்பாய்வு செய்யும் திறன், Problem Solving Skill எனப்படும் தீர்வு காணும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
கோச்சிங் சென்டரைத் தேர்வு செய்வது எப்படி?
இன்றைய காலகட்டத்தில் கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. நல்ல கோச்சிங் சென்டரைத் தேர்வு செய்வது பாதி வெற்றிக்கு சமம். நமது குழந்தைகளுக்காக ஒரு கோச்சிங் சென்டரைத் தேர்வு செய்யும் முன்னர், அந்த பயிற்சி மையம் பற்றி நன்கு விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். கோச்சிங் சென்டரில் பயிற்றுவிக்கும் முறை, அவர்களின் டிராக் ரெக்கார்டு எனப்படும் முந்தைய வரலாற்றையும் ஆராய வேண்டும். அவர்கள் அளிக்கும் கோர்ஸ்கள் நமக்கு ஏற்றதா என்பதையும் பார்த்து முடிவெடுங்கள். அந்த வகையில் டெல்டா பகுதி மாணவர்களை தேசிய அளவிலான போட்டி/நுழைவுத் தேர்வுகளில் சாதிக்கத் துணைபுரிய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டதுதான் `தாமரை அச்சீவர்ஸ் அகாடமி’ (Thamarai Achievers Academy)
ஏன் தாமரை அச்சீவர்ஸ் அகாடமி?
இதுபோன்ற போட்டித் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்களைப் பொறுத்தவரை, அவை வசூலிக்கும் ஃபீஸ் தொகையானது நடுத்தரக் குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக இருப்பதுண்டு. ஆனால், தாமரை அச்சீவர்ஸ் அகாடமியின் கட்டணமானது பெரும்பான்மையான இந்தியக் குடும்பங்களைக் கருத்தில்கொண்டே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த திறமையான ஆசிரியர்கள் மூலம் ஆன்லைனிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களைக் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டங்கள், 24 மணி நேரமும் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்கத் தயாராக இருக்கும் ஆசிரியர் குழு, ஒவ்வொரு மாணவரையும் பிரத்யேகமாகக் கண்காணித்து, அவர்களின் பலம்/பலவீனம், எந்த பாடத்துக்குக் கூடுதலாக உழைக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான வழிகாட்டுதல்கள், பாடரீதியாகவும் மன அளவிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர் குழு, இத்துடன், மாணவ – மாணவிகளுக்குத் தனித் தனியாக ஏ.சி வசதி கொண்ட ஹாஸ்டல்கள் மற்றும் சுத்தமான, சத்தான உணவு வகைகளுடனான கேண்டீனும் இருக்கிறது. NTSE, IIT JEE, NEET, KVPY, JIPMER, AIIMS, UCEED, IISER, NISER என தேசிய அளவில் நடத்தப்படும் அனைத்து வகையான தேர்வுகளுக்கும் பிரத்யேக பாடத்திட்டத்துடன் சிறந்த வல்லுநர் குழு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேர்வு அச்சம் வேண்டாம்!
போட்டித் தேர்வோ அல்லது நுழைவுத் தேர்வோ அச்சமின்றி எதிர்க்கொள்ள நமது குழந்தைகளை இன்றிலிருந்தே தயார் செய்வோம். முறையான பயிற்சி, திட்டமிடல் மூலம் நாளைய உலகை வெல்ல நம் குழந்தைகளுக்கு நம்பிக்கையையும் வழிகாட்டுதல்களையும் அளிக்கலாம் வாங்க… தாமரை அச்சீவர்ஸ் அகாடமியில் உங்கள் குழந்தைகளை சிறப்பு சலுகை விலையில் சேர்க்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்/ இந்த கூப்பன் கோடைப் பயன்படுத்தி சிறப்பு சலுகையைப் பெறுங்கள்… இது குறுகிய கால சலுகை. முந்துபவர்களுக்கே முன்னுரிமை.. இந்த பொன்னான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.