முதலில் பேட் செய்த கே.கே.ஆர் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய எஸ்.ஆர்.ஹெச் அணியால், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
SRHvsKKR மேட்சின் மிஸ் பண்ணக்கூடாத 4 தருணங்கள்!
-
1 கொல்கத்தாவின் 100-வது வெற்றி
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் 100-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் (120), சென்னை சூப்பர்கிங்ஸ் (106) அணிகளுக்குப் பின்னர் மூன்றாவது அணியாக 100 வெற்றிகளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பதிவு செய்திருக்கிறது.
-
2 ராணாவின் விநோத சாதனை
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் நிதீஷ் ராணா, இந்தப் போட்டியில் தனது 12-வது ஐபிஎல் அரைசதத்தை அடித்தார். 56 பந்துகளில் 80 ரன்கள் எடுத்த அவர், சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா அணியின் இரண்டாவது தனிநபர் ஹைஸ்கோரைப் பதிவு செய்தார். 2016 ஐபிஎல் தொடரில் 60 பந்துகளில் 90 ரன்கள் அடித்த கௌதம் காம்பீர் முதலிடத்தில் இருக்கிறார்.
நிதீஷ் ராணா, கடைசியாக விளையாடிய 6 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 3 முறை 80 ரன்கள் அல்லது அதற்கு மேல் குவித்திருக்கும் நிலையில், மற்ற 3 இன்னிங்ஸ்களில் டக் அவுட்டானார். அந்த மூன்று இன்னிங்ஸ்களிலுமே தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டானார் ராணா. -
3 அதிக வெற்றி
சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா பதிவு செய்த 13-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணி என்ற சாதனையை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் படைத்தது.
-
4 ஹைஸ்கோர்
சன்ரைசர்ஸுக்கு எதிராக இந்தப் போட்டியில் எடுத்த ஸ்கோரே (187/6) அந்த அணிக்கெதிராக நைட்ரைடர்ஸின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 2019 ஐபிஎல் தொடரில் எடுத்த 183/4 என்ற ஸ்கோரே அதிகபட்சமாக இருந்தது.
0 Comments