தங்கத்தோட விலை முன்ன எப்போயும் இல்லாத அளவுக்கு உச்சத்துல போய்ட்டு இருக்கு. போன வாரத்துல ஏற்ற இறக்கத்தோட இருந்த தங்கத்தோட விலை இப்போ சவரனுக்கு ரூ.46,000-ங்குற வரலாறு காணாத விலையை எட்டியிருக்கு…
எதனால தங்கம் விலை ஏறுது?
பொதுவா சர்வதேச நிலவரத்தை வைச்சுதான் இந்தியாவுல தங்கத்தோட விலை மாறுபடும். பணவீக்கமும் இதுல முக்கியமான பங்காற்றும். உலக அளவுல பெரும்பாலான பணபரிமாற்றங்கள் அமெரிக்க டாலர்லதான் நடக்குது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துறதுக்காக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மறுபடியும் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியிருக்காங்க. இப்படியான சூழல்ல பங்குச் சந்தைகள்ல நிலையில்லாத தன்மை நிலவுறதால, தங்கத்துல முதலீடு செய்றதும் அதிகரிச்சுருக்கு. சப்ளை அண்ட் டிமாண்ட் அடிப்படைலதான் தங்கத்தோட விலை ஏற்றமும் இருக்கும். இப்போ டிமாண்ட் அதிகரிச்சிருக்கதாலதான் இப்படி விலையும் தொடர்ந்து அதிகரிச்சுட்டு வருதுனு நிபுணர்கள் சொல்றாங்க.
எந்தளவுக்கு விலை ஏறியிருக்கு?
மே முதல் வாரத்துல சவரனுக்கு ரூ.1,280 ரூபாய் தங்கத்தோட விலை கூடுச்சு. அட்சயதிரிதியை சமயத்துல தங்கத்தோட விலை சவரனுக்கு ரூ.400 அளவுக்குக் குறைஞ்சிருந்த நிலைல இப்படி திடீர் விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குச்சு. அதுவும் குறிப்பா கடந்த ஒரு வருஷத்துல தங்கத்தோட விலை தாறுமாறா எகிறிட்டு இருக்கு. 2022 ஜனவரில ஒரு சவரன் தங்கத்தோட விலை ரூ.37,000-ங்குற அளவுலதான் இருந்துச்சு. இதுவே 2023 ஜனவரி தொடக்கத்துல ரூ.40,000-த்தை நெருங்குச்சு. ஆனா, 2023 மே மாசத் தொடக்கத்துலேயே இந்த விலை ரூ.45,000-த்தை கடந்துருச்சு. அதுவும் குறிப்பா 2023 மே 5-ம் தேதி நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தோட விலை ரூ.46,200. சராசரியா மாசத்துக்கு ஆயிரம் ரூபாய்னு இந்த 5 மாசத்துல மட்டுமே தங்கத்தோட விலை சவரனுக்கு ரூ.5,000 அளவுக்கு எகிறியிருக்கு. இப்படி தொடர்ச்சியா விலை ஏறுறதுனாலதான் தங்கத்து மேலான முதலீடுகளும் அதிகரிக்குது. இப்படி முதலீடுகள் அதிகரிக்கும்போது, டிமாண்டும் அதிகமாகும். அதுக்கு ஏத்த மாதிரி சப்ளை இல்லாதபட்சத்துல இயல்பாவே அதோட விலையும் உச்சத்தைத் தொடுது. இதுதான் தங்கத்தோட விலை ஏற்றத்துக்குப் பின்னாடி இருக்க முக்கியமான காரணம்.
இந்த சூழலில் குறைவான விலையில் தங்கம் வாங்குவது எப்படி?
சந்தை நிலவரம் மட்டுமில்ல, நீங்க எங்க வாங்குறீங்க என்பதும் விலையை தீர்மானிக்கும். பொதுவா தங்க நகைக்கடைகள்ல தங்கம் வாங்கும்போது அந்த கடையோட வாடகைல ஆரம்பிச்சு பல விஷயங்களும் அந்த நகையோட விலையிலதான் போய் சேரும். கம்மியான விலையில தங்கம் வாங்கணும்னு நினைச்சீங்கன்னா உங்களுக்கான சரியான சாய்ஸ் பிரில்லியண்ட் கட். மற்ற ஷோரூம்களைவிட இங்க தங்கத்தோட விலை 20% வரை குறைவா இருக்கும். உதாரணத்துக்கு ஒரு சவரன் நகை வாங்குறப்போ கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சேமிக்க முடியும். வைர நகைகள் 30% வரை விலை குறைவு இருக்கும். ஏன்னா பிரில்லியண்ட் கடை நகையை உற்பத்தி செய்யுற இடம்ங்குறதால இங்க எந்த எக்ஸ்ட்ரா விலையும் கிடையாது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல உங்களோட பழைய தங்க நகைகளைக் கொடுத்து இன்றைய தங்கம் விலைக்கே பணமா வாங்கிக்கலாம். நீங்க வாங்குற தங்கத்தோட தரத்தை அங்கேயே சோதனை பண்ணி வாங்கிக்கலாம். அதனால தங்கம் வாங்கணும்னு நினைச்சா பிரில்லியண்ட் கட்ல வாங்குறது உங்களுக்கு லாபகரமா இருக்கும்.
பிரில்லியண்ட் கட் பத்தி மேலும் விபரங்கள் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சீங்கன்னா 98402 29990 இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!