செல்லப்பிராணிகள் நமது குழந்தைகளைப் போலவே நம்மை அரவணைக்கும் பண்பு கொண்டவை. உங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வளர்ப்புப் பிராணிகள், மன அழுத்தம், ஆங்ஸைட்டி உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து உங்களை வெளிக்கொண்டு வரும் உற்ற தோழனாகவும் கைகொடுப்பவை. அவற்றோடு கழிக்கும் நேரம் நமக்கு அன்பின் புதிய பரிணாமத்தைக் காட்டிடும்.
புதிதாக செல்லப்பிராணிகளை வளர்க்க பிளான் பண்றீங்களா… அதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களைக் கவனத்தில் வைச்சுக்கோங்க… எக்ஸ்பர்ட்ஸ் சொல்ற ஐந்து விஷயங்கள்
லைஃப்ஸ்டைல்
நீண்ட நேரம் வேலை பார்ப்பவரா நீங்க.. அதேபோல், அடிக்கடி டிராவல் பண்ணுவதில் ஆர்வம் இருக்கவரா… உங்க லைஃப்ஸ்டைலை மாத்தி, செல்லப்பிராணிகளுக்கெனத் தனியாக நேரம் ஒதுக்க முடியுமா உங்களால… செல்லப்பிராணிகளுக்காக வீட்டில் சின்னதா மாற்றங்கள் செய்யவும் அதற்காக செலவழிக்கவும் தயாரா இருக்கீங்களானு முதல்ல யோசிச்சு முடிவெடுங்க.
பட்ஜெட்
செல்லப்பிராணிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான கேர் தேவைப்படும். அதற்கு சத்தான உணவு வகைகள் கொடுப்பது தொடங்கி, சரியான இடைவெளியில் டாக்டர்கிட்ட செக் அப் வரைக்கும் கூட்டிட்டு போக வேண்டி வரும். செல்லப்பிராணிகளோட உடல்நிலையை ஆரோக்கியமாகப் பராமரிக்க இதெல்லாம் தேவைப்படும் சூழல்ல, அதற்கென தனியா குட்டி பட்ஜெட் ஒதுக்க முடியுமான்னு யோசிச்சுக்கோங்க..
என்ன காரணம்?
செல்லப்பிராணிகள் என்பது வீட்டில் புதிதாக வாங்கப்படும் கேட்ஜெட் போல் அல்ல. அவை, நம்மைப் போலவே உயிருடன் இருக்கும் சக உயிரினங்கள். அவற்றை ஸ்டேட்டஸுக்காகவோ அல்லது அலங்காரப் பொருளாகவோ ட்ரீட் பண்ணக் கூடாது. உங்கள் குடும்பத்தில் கூடுதலாக ஒரு உறுப்பினரைச் சேர்ப்பதுபோல் எண்ணினால், செல்லப்பிராணிகளைத் தேர்வு செய்யலாம்.
அலர்ஜி
ஒருசில விஷயங்கள் உங்களுக்கு ஒத்துவராமல் ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியால் பாதிக்கப்படக் கூடியவரா நீங்கள்.. ஆம், என்றால் Poodle அல்லது Poodle மிக்ஸ் இன நாய்களை செலெக்ட் செய்வது சாலச்சிறந்தது. முடி உதிர்தல் போன்ற பெரிய பிரச்னை இல்லாத நாய் இனங்கள் என்பதால், உங்களுக்கும் அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
பாதுகாப்பு – வீட்டின் அளவு
நாய்களை வளர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் வீட்டில் அவற்றுக்கு பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். லூஸான எலெக்ட்ரின் ஒயர், தரையில் சிதறிக் கிடக்கும் சின்ன சின்ன பொருள்கள் போன்றவை அவற்றுக்குப் பிரச்னையை ஏற்படுத்தலாம். திறந்த ஜன்னல்கள், மாடிகள் போன்றவை இருப்பின் அதற்கேற்றபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதேபோல், நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகள் விளையாட உங்கள் வீட்டில் போதுமான இட வசதி இருக்கிறதா என்பதைப் பற்றியும் சிந்தித்துக் கொள்ளுங்கள் மக்களே…
இதுதவிர வேற எதாவது பாயிண்ட்ஸ் இருக்குன்னா கமெண்ட்ல சொல்லுங்க நண்பர்களே!
Also Read – இதை சாப்பிட எந்த கில்டும் வேண்டாம்… 100 கலோரிக்கும் குறைவான 5 ஹெல்தி ஸ்நாக்ஸ்!