கொரோனா, லாக்டௌன்கள் எல்லாவற்றையும் கடந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக்பாஸ் 5 தொடங்கியுள்ளது. அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பற்றிய தகவல்களை சுருக்கமாக இங்கே தெரிந்துகொள்வோம்.
1) இசைவானி
The Casteless Collective’ மூலமா பிரபலமடைந்த சென்னையைச் சேர்ந்த இசைவானி, சமீபத்தில் சார்பட்டா பரம்பரை’யில் பாடிய `வம்புல தும்புல’ பாடலும் செம ஹிட் ஆனது. இந்தியாவிலேயே முதல் பெண் கானா பாடகர் இசைவானிதான். தன்னுடைய ஆறு வயதிலேயே இசைவானி கானா பாடலை பாடத் தொடங்கிவிட்டார். 10,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் இசைவானி பாடியுள்ளார்.
2) ராஜூ ஜெயமோகன்
கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி சீரியல்ல நடிச்ச ராஜூவுக்கு ஹீரோ ஆகணும்னு ஆசை. திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், நட்புனா என்னனு தெரியுமா படத்துல நடிச்சிருக்காரு. ஸ்கிரிப்ட் எழுதுறதுலயும் ராஜூவுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு. விஜய்க்கு அண்ணாமலை மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் பண்ணனும்னு ஒரு இண்டர்வியூல சொல்லியிருக்காரு. ராஜூ ஜெயமோகன் மிமிக்ரிலயும் பின்னி எடுப்பார்.
3) மதுமிதா
இலங்கைத் தமிழ் பெண்ணான மதுமிதா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஜெர்மனியில்தான். ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மதுமிதாவுக்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஃபேஷன் டிசைனராகவும் மாடலாகவும் இருக்கிறார். நிகழ்ச்சியின்போது கமல்ஹாசனுக்கு கையால் செய்யப்பட்ட டை ஒன்றை மதுமிதா பரிசளித்தார்.
4) அபிஷேக் ராஜா
ஓப்பன் பண்ணா… ஆர்ஜே,விஜே, யூ டியூபர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் அபிஷேக் ராஜா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களுக்கு மதுரையைச் சேர்ந்த அபிஷேக் ராஜாவைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. சமூக வலைதளங்களில் இல்லையா நீங்க? பரவால்ல இனிமேல் இவரைப் பற்றி தெரிஞ்சுப்பீங்க. சமீபத்தில் நடந்த ஐரோப்பிய லீக் கால்பந்து போட்டியில் தமிழ் வருணனையாளர்களாக பணியாற்றியவர்களில் அபிஷேக் ராஜாவும் ஒருவர். இவருக்கு கால்பந்தை சொல்லிக் கொடுப்பதுதான் கான்செப்ட்!
5) நமீதா மாரிமுத்து
சென்னையைச் சேர்ந்த நமீதா மாரிமுத்து, கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போது வீட்டை விட்டு வெளியேறினார். திருநங்கைகளுக்காக நடத்தப்படும் ஃபேஷன் ஷோவில் மிஸ் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய நமீதா, மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2020 விருதை வென்றுள்ளார். பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் திருநங்கை போட்டியாளர், நமீதா மாரிமுத்து. நாடோடிகள் 2 படத்தில் பாட்டுப்பாடிய நமீதா மாரிமுத்து, அப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
6) பிரியங்கா:
விஜய் டி.வி தொகுப்பாளர் பட்டியலைச் சொன்னால் நினைவுக்கு வருபவர்களில் பிரியங்காவும் ஒருவர். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். சென்னை எத்திராஜில் கல்லூரிப் படிப்பை முடித்தவர். ஆரம்பத்தில் தமிழ் பேசுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார், பிரியங்கா.. முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். லாக்டௌன் நேரத்தில் ஷூட்டிங் இல்லாததால் பிரியங்கா யூ டியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்தார். மருத்துவமனையில் அட்மிட் ஆனதைகூட வீடியோ எடுத்து அப்லோட் செய்து பிரியங்கா டிரெண்டிங்கில் இடம்பிடித்தார்.
7) அபினய் வட்டி
ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் அபினய் வட்டி. யங் இந்தியா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழில் ராமானுஜன் என்ற படத்தில் நடித்துள்ளார் அபினய். இந்தப் படம் கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்று படமாகும். டென்னிஸ் விளையாடுவதில் தீவிர ஆர்வம் உள்ளவர், அபினர் வட்டி. அதுமட்டுமல்லாமல் விவசாயத்திலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். சிறிய அளவில் விவசாயம் செய்து வருகிறார், அபினய் வட்டி.
8) பாவனி ரெட்டி
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான சின்ன தம்பி சீரியல் மூலமாக பிரபலமானவர் இவர். ரெட்டைவால் குருவி, பாசமலர், ராசாத்தி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சராசரி பெண்ணாக 23 வயதில் திருமணம் செய்துகொண்டு, கணவர், குழந்தை என வாழ வேண்டும் என நினைத்த பாவனி ரெட்டிக்கு, அது தோல்வியில் முடிந்ததாக நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்டதைக் குறிப்பிட்ட பாவனி, திருமண வாழ்க்கையில் தனக்கு ராசியில்லை என்றும் கூறினார்.
9) சின்ன பொண்ணு
சிவகங்கையைச் சேர்ந்த சின்ன பொண்ணு, தமிழில் கிராமியப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். சந்திரமுகி படத்துல வாழ்த்துறேன்.. வாழ்த்துறேன்..’ பாடலை பாடியிருப்பாங்க.நாக்கு முக்கா’ பாடல் இவங்க பாடியதுதான். 13 வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கிய சின்ன பொண்ணு, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி அனிருத் வரைக்கும் பல மியூசிக் டைரக்டர்கிட்ட பாடியிருக்காங்க.
10) நதியா
மலேசியாவைச் சேர்ந்த டிக்டாக் கலைஞர் நதியா. `மிஸஸ் மலேசியா வேர்ல்டு 2016’ உள்பட பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். யூடியூபில் இவரின் சேனலுக்கு 56,900 சப்ஸ்கிரைபர்களும், இன்ஸ்டாவில் 35,700 ஃபாலேயர்களும் இருக்கிறார்கள்.
11) நிரூப்
மாடலாக இருந்து நடிகராக முயற்சி செய்துகொண்டிருப்பவர்தான் நிரூப். உயரம் காரணமாக நிறைய ஆடிஷன்களில் நிராகரிக்கப்பட்டதாக ஷோவில் சொல்லியிருந்தார். சமீபத்தில் விபத்துக்குள்ளான யாஷிகாவின் நெருங்கிய நண்பர்தான் நிரூப். யாஷிகாவும் ஐஷ்வர்யா தத்தாவும் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கே லைவ் என்று தெரியாமல் ஒரு நபர் வந்து `அப்படி இப்படி’ இருந்த வீடியோ ஒன்று அந்த சீசன் 2 முடிந்த சமயம் வைரல் ஆனது. அந்த நபர்தான் நிரூப்.
12) சிபி
மாஸ்டர் படத்தில் ஜேடியின் மாணவராக நடித்தவர் சிபி புவனசந்திரன். இதற்கு முன் வஞ்சகர் உலகம் படத்தின் லீடு ரோலில் நடித்து கவனம் பெற்றார். தவிர சூர்யா – பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெளிநாட்டில் படித்து அங்கேயே பல லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர்தான் சிபி. ஆனால், சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து அங்கிருந்த வேலையை விட்டுவிட்டு கோடம்பாக்கம் வந்தாராம்.
13) தாமரைச் செல்வி
திருவிழா சமயத்தில் ஊர் பக்கம் நடக்கும் ஆடல் பாடல், நாடக நிகழ்ச்சிகள் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு பலரும் அடிமை. அப்படியான நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் கலைஞர்தான் தாமரை செல்வி. திண்டுக்கலைச் சேர்ந்த இவர், அந்த ஊரை சுற்றி உள்ள பல ஊர்களின் நாடகங்களில் இவர் நடித்திருக்கிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
14) ஐக்கி பெர்ரி
தஞ்சாவூரைச் சேர்ந்த ராப் பாடகி ஐக்கி பெர்ரி. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் ரம்யாவிடம் ஆரம்பகாலத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் ரஹ்மானுக்கு சொந்தமான KM கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். ஆடை பட சமயத்தில் அமலா பால் மீது மிகுந்த சர்ச்சை உருவானது. அந்த சமயம் கதை வலியுறுத்துவதால் அவர்கள் அதை பண்ணார்கள் ஒரு நடிகருக்கு உண்டான விஷயம்தான் அது. ஸோ, அவங்க பண்ணது தப்பு இல்ல என்று தனது கருத்தை தெரிவித்தார் இக்கி பெர்ரி.
15) அக்ஷரா
சென்னையைச் சேர்ந்த மாடல் அழகி அக்ஷரா. மாடலிங் மட்டுமல்லாது சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். போக, பில்கேட்ஸ்’ என்ற கன்னட படத்திலும் நடித்திருக்கிறார்.சூப்பர் குளோப் 2019′ பட்டமும் வென்றுள்ளார். 2018 சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் எனும் ஷோவில் கலந்து கொண்டு அதற்கான டைட்டில் பரிசையும் இவர் வென்றார்.
16) சுருதி
சேலத்தை சேர்ந்தவர் சுருதி. இவர் மாடலிங் துறையைச் சேர்ந்தவர். Dark is divine campaign மூலம் பிரபலமாவன இவர் 2020-ல் நடந்த மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் டாப் 20-க்குள் இடம்பெற்றார். சுருதி பேஸ்கெட் பால் விளையாட்டு வீரரும்கூட.
17) இமான் அண்ணாச்சி
தற்போது பல்வேறு படங்களில் சின்ன கேரக்டர் ஏற்று நடிப்பதோடு சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கும் முன் இமான் அண்ணாச்சி, தள்ளுவண்டியில் காய்கறி விற்றுக்கொண்டிருந்தவர். பல வருட உழைப்புக்குப் பிறகே திரைத்துறையில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்.
18) வருண்
தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வருபவர் வருண். ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்தில் அவருக்கு அசிஸ்டென்ட்டாக பணியாற்றினார். அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் சொந்தக்காரரான இவர், கௌதம் மேனன் இயக்கிய `ஜோஷுவா: இமைபோல் காக்க’ படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
Also Read : தமிழக சுங்கச் சாவடி ஊழல்; குறைக்கப்பட்ட வாகன எண்ணிக்கை – ஃபாஸ்டேக்கால் வெளியான அதிர்ச்சி!