ஒருநாள் போட்டிகளில் கபில் தேவுக்குப் பின்னர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன், முதல் டி20 கோப்பையைக் கையில் ஏந்திய கேப்டன், ஐசிசி நடத்திய மூன்றுவிதமான தொடர்களிலும் சாம்பியன், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் என தோனி தலைமையில் இந்திய அணி புதிய உச்சம் தொட்டது.
2019ல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆன தருணம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் மறக்க நினைக்கும் மொமண்ட். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டாலும், இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே-வுக்காகக் களமிறங்க இருக்கிறார் தோனி. உலக அளவில் தோனிக்கு இருக்கும் ரசிகர் படை மிகப்பெரியது.
நீங்கள் தோனி ரசிகரா… அவரைப் பற்றி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்? வாங்க பார்க்கலாம்.
[zombify_post]