தங்களின் கனவு வீட்டை வாங்கத் திட்டமிடும் மில்லினியல்ஸ், எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?
ரியல் எஸ்டேட்
கொரோனா பெருந்தொற்று பல்வேறு துறைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், ரியல் எஸ்டேட் துறை முக்கியமானது. கொரோனாவுக்குப் பிந்தைய நிலையில், எல்லாத் துறைகளுக்குப் பிறகு கடைசியாகவே ரியல் எஸ்டேட், அந்தப் பாதிப்பில் இருந்து மீளும் என்பதே வல்லுநர்கள் பலரின் கணிப்பாக இருந்தது. ஆனால், ரியல் எஸ்டேட் துறை யாரும் எதிர்பார்க்காத வகையில், பாதிப்புகளில் இருந்து மீண்டு தன்னை உயிர்ப்போடு வைத்துக் கொண்டிருக்கிறது.
தங்களின் வாழ்நாள் கனவான முதல் வீட்டை வாங்கும் மில்லினியல்ஸ், வீடு வாங்கும்போது எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்?
Time to buy home
வாடகை வீடுகளில் தங்கள் வாழ்வை மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்த மில்லினியல்ஸ், இப்போது சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோமை நோக்கி நகர்ந்திருக்கும் நிலையில், சுத்தமான, சுகாதாரமான சூழலில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் மெல்ல மேலோங்கி வருகிறது. மேலும், அதிக நேரத்தை வீடுகளில் கழிக்க வேண்டிய சூழலில், சொந்த வீடாக இருந்தால் தங்களுக்குப் பிடித்தபடி அதை கஸ்டமைஸ் செய்துகொள்ள முடியும் என்று எண்ணுகிறார்கள்.
வொர்க் ஃப்ரம் ஹோம் அறிவிக்கப்பட்டபோது, பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். இதனால், அவர்களின் ஊதியத்தில் ஒரு பெரும் தொகை மிச்சமாகியிருக்கிறது. அந்தத் தொகையை அவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்கள். அதனால், வீடு வாங்குவதற்கு இதுதான் சரியான சமயம் என்கிறார்கள் இந்தத் துறை வல்லுநர்கள்.
STARTING EARLY
இன்றைய வொர்க் ஃபோர்ஸின் பெரும்பாலான உறுப்பினர்கள் மில்லினியல்ஸாகவே இருக்கிறார்கள். மில்லினியல்களில் பலர் தங்களின் கல்லூரி படிப்பு முடிந்தவுடனேயே, வேலையில் அமர்ந்துவிடுவதுண்டும். இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் அவர்கள், குடும்பப் பொறுப்புகளைச் சுமக்க இன்னும் கொஞ்சம் ஆசுவாசமான காலம் கிட்டும். அந்த மாதிரியான சூழலில் இருக்கும்போது, இதுபோன்ற முதலீடுகளைத் தொடங்கிவிடுவது நலம். அப்படி நீங்கள் சிறுக சிறுக முதலீடு செய்து வைப்பது பிற்காலத்தில் பெரிய அளவுக்குக் கைகொடுக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது மிகப்பெரிய பலன் கொடுக்கும்.
Location
மாறும் சந்தை நிலவரத்தைக் கூர்ந்து கவனித்து, எந்த இடம் அடுத்த லெவலுக்கு வரும் என்பதைக் கணித்து அந்த இடங்களில் முதலீடு செய்யலாம். மில்லினியல்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்க வேண்டும் என்கிற எமோஷனல் பாண்டிங்கில் சிக்கமாட்டார்கள். அவர்கள் புதுப்புது இடங்களை Explore செய்வதில் ஆர்வம் உடையவர்கள். அதேபோல், ஒரு இடத்துக்கான தொலைவை கிலோமீட்டர்களில் கணக்கிடுபவர்கள் அல்ல; மாறாக அந்த இடத்தை அடைய எடுத்துக் கொள்ளும் நேரத்தை வைத்துக் கணக்கிடுபவர்கள். இதனால், புதிய இடங்களில் முதலீடு செய்ய அவர்கள் தயங்க மாட்டார்கள்.
வருமானம்
மில்லினியல்கள் தங்கள் எதிர்கால பாதுகாப்புக்காகவே ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வார்கள் என்று பார்த்தோம். அதேநேரம், ரியல் எஸ்டேட் மூதலீடு என்பது இரண்டாவது வருமானமாக இருக்கும் என்று எண்ணுபவர்களும் உண்டு. இந்த வகை இளம் தலைமுறை முதலீட்டாளர்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் முதலீடு செய்தால் விலை அதிகரிப்பு அல்லது வாடகை ஆகியவை மூலம் விரைவாக அந்தத் தொகையைத் திரும்ப எடுத்துவிடலாம் என்றும் எண்ணுகிறார்கள். தாங்கள் பார்க்கும் வேலையுடன் இவை இரண்டாவது வருமானத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படியான ஐடியாவில் இருப்பவர்கள் பெரிய நகரங்கள் மட்டுமல்ல, சிறிய நகரங்கள், மலைப்பிரதேசங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களிலும் முதலீடு செய்வதுண்டு.
மாறும் சூழல்
சில, பல தசாப்தங்களுக்கு முன்னர், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்கள் நடுத்தர வயதுடையவர்களே அதிகமாக இருப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார சூழலை ஓரளவு சமாளித்து, அதன்பின்னர் இந்தப்பக்கம் தங்களின் கவனத்தை அவர்கள் திருப்புவார்கள். ஆனால், சூழல் இப்போது மாறியிருக்கிறது. உலகின் இளமையான நாடு என்று கருதப்படும் இந்தியாவில், இளம் தலைமுறையினரே அதிக அளவிலான முதலீடுகளைச் செய்து வருகிறார்கள்.
Also Read – உங்கள் கனவு வீட்டைக் கட்டலாம் பாஸ் சிக்கனமா… 5 டிப்ஸ்