குரலுல குயிலு… அழகுல மயிலு… அட ‘ஜோனிடா காந்தி’தான் உண்மையான மெழுகு டாலு..!

அனிருத்தோட மியூசிக்ல இப்போலாம் எந்த டூயட் பாட்டு வந்தாலும் பாயாசம் எங்கடா’ன்ற மாதிரிஜோனிடா’ எங்கடானுதான் நம்ம பசங்க கேக்குறாங்க. அதுவும், அரபிக்குத்து பாட்டு வந்தப்போ `பூஜா ஹெக்டேவ தூக்கிட்டு ஜோனிடாவ ஹீரோயினா போட சொல்றா ட்ரம்பு’ன்ற அளவுக்கு சோஷியல் மீடியால கத்திக்கிட்டு இருந்தாங்க நம்ம 90’ஸ், 2கே கிட்ஸ்கள். மென்டல் மனதில் பாட்டுல ஆரம்பிச்சு அரபிக் குத்து வரைக்குமான ஜோனிடா காந்தியின் பாடகி பயணம்… ரொம்பவே எளிமையான ஸ்மூத்தான அழகான பயணம். அந்த அழகான பயணத்தில் தேவதையாக வந்து இசையால் நம் இதயத்தில் இடம்பிடித்த ஜோனிடா காந்தி பற்றிதான் இந்த கட்டுரைல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

ஜோனிடா காந்தி
ஜோனிடா காந்தி

ரயில் ஏறி வந்த மயில்

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தோட டைட்டில் சாங் பாடி திரையுலக ரயிலேறின ஜோனிடா காந்தி நேரா சென்னைக்கு வந்துதான் இறங்கினாங்க. சென்னை எக்ஸ்பிரஸ் ஏறி கோலிவுட்டுக்கு வந்த மாதிரி எந்த எக்ஸ்பிரஸும் ஏறாமலே பெங்காலி, தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம்னு சோஷியல் மீடியாக்களில் மில்லியன்களில் லைக்ஸும், நிஜத்தில் மில்லியனோ மில்லியன்களில் ஹார்ட்டுகளும் வாங்கி ஜொலித்துக்கொண்டிருக்கும் வைரல் ராணிதான் ஜோனிடா காந்தி. தமிழைவிட ஹிந்தில ஏகப்பட்ட பாட்டு இவங்க பாடியிருந்தாலும் தமிழ்ல பாடுன ஒவ்வொருப்பாட்டும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துருக்குனு சொல்லலாம்.

ஜோனிடா காந்தி
ஜோனிடா காந்தி

பட்டப்பெயர்

ஜோனிடா காந்திக்கு ஒரு பட்டப்பேர் இருக்கு… என்ன தெரியுமா? Toronto’s Nightingale. ஆமா, ஜோனிடா காந்தி பிறந்தது டெல்லினாலும் வளந்தது கனடாவின் டொரோண்டோவில். ஜோனிடாவின் தந்தை ‘தீபக் காந்தி’ ஒரு மியூசிக் ஸ்டுடியோ வைச்சிருக்காரு. நான்கு வயசிலேயே ஒரு கிறிஸ்துமஸ் தினக்கொண்டாட்ட விழாவில் மேடையேறி அவங்க பாடினப்போ அவங்களுக்கு கிடைச்ச கைதட்டலும் ஆரவாரமும் இன்னைக்கு வர நிக்கவே இல்லை. இன்னொரு விஷயம் என்னனா, நிஜ வாழ்க்கைல அவங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாருமே அவங்களை டிராமா குயின்னுதான் சொல்லுவாங்களாம். ஏன், அனிருத்கூட அப்படிதான் கூப்பிடுவாராம். ரொம்பவே எக்ஸ்பிசிவ்வா இருக்குறதால அப்படி சொல்லுவாங்களாம். `ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளி பெண்ணே, சில்வர் ஸ்பூன் கைய்யோடு, பிறந்தவள் நீயே, ஒரு ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே’ – இந்தப் பாடல் வரிகள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ நிஜ வாழ்க்கைல ஜோனிடா காந்திக்கு அப்படியே பொருந்தும்.

ஜோனிடா காந்தி
ஜோனிடா காந்தி

அந்நிய உச்சரிப்பா..?

கனடாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து திரையுலகத்தை கலக்க ஆரம்பித்த ஆரம்ப கால கட்டங்களில் ஜோனிடாவின் உச்சரிப்பில் ஆங்கில வாடை ஓவராவே அடிக்குறதால ஒரு அந்நியத்தன்மை இருக்குறதா விமர்சனம் எழுந்தது. அதுல இருந்து எப்படி வெளியே வந்தேன்னு ஒரு பேட்டியில் அவங்களே சொல்லி இருக்காங்க. “ஹிந்தி பாடல்களை சின்ன வயசுல இருந்தே நான் பாடிட்டுத்தான் இருந்தேன். தமிழ், தெலுங்குல நிறைய பாடல்கள் பாட ஆரம்பிக்கும் போது சிக்கல் இருந்தது. நான் முடிஞ்ச வரைக்கும் பாடலோட மெலடியோட கனெக்ட் பண்ணிப்பேன். அது என் வேலையை சுலபமாக்கிடும். அவ்வளவுதான்!” அப்டினு சொல்லியிருப்பாங்க. இப்பவும் நிறைய இண்டர்வியூல கொஞ்சும் தமிழ்ல பேசுவாங்க. அவங்களோட தமிழ் உச்சரிப்பே தனி அழகுதான் போங்க. என்னதான் இருந்தாலும் ஒருநாள் இல்லை ஒருநாள் தமிழை சரியா கத்துட்டு வருவேன்னு அண்ணாமலை ரஜினி மாதிரி சபதம் எடுத்துருக்காங்க. வீ ஆர் வெயிட்டிங் ஜோனிடா.

ஜோனிடா காந்தி
ஜோனிடா காந்தி

ஒரு வேளை பாடகி ஆகலைன்னா…

ஜோனிட்டா ஒரு பேட்டியில் அவங்க ஒரு Corporate Banker ஆகனும்னு ஆசைப்பட்டதா சொல்லிருக்காங்க. அப்படி ஆகியிருந்தா கோடிகள்ல டிரான்ஸேக்ஸன் பண்ணியிருந்திருப்பாங்க. ஆனா, ஒரு பாடகியாகி கோடிக்கணக்கான ரசிகர்களோட மனங்களை கொள்ளயடிச்சுகிட்டிருக்காங்க.

ஜோனிடா காந்தி
ஜோனிடா காந்தி

ஸஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்

சின்ன வயசுலயே பாட்டுப் பாட தொடங்கிய ஜோனிடாவை யூ டியூப்ல பார்த்து ரஹ்மான் தன்னோட பாட்டு மூலமாக தமிழ்ல அறிமுகப்படுத்தியிருக்காரு. இப்போ அந்தப் பாட்டுல வர்ற காட்சிகளைப் பார்த்து இயக்குநர் விநாயக் தன்னோட `வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ படத்துல ஹீரோயினா அறிமுகப்படுத்தியிருக்காரு. இந்தப் படத்தை நயன்தாரா தயாரிக்காங்க. பாட்டுல வந்த 20, 30 செகண்ட் காட்சிகளைப் பார்த்து சில்லறையை சிதற விட்ட நம்ம பசங்க படம் ரிலீஸ் ஆகும்போது என்னலாம் பண்ண காத்துருக்காங்களோ. வெயிட் பண்ணி பார்ப்போம்.

ஜோனிடா காந்தி
ஜோனிடா காந்தி

`மெழுகு டாலு நீ, அழகு ஸ்கூலு நீ’ அப்டினு ஏகப்பட்ட பேரைப் பார்த்து இந்தப் பாடலைப் பாடினாலும் உண்மையிலேயே மெழுகு டாலு மாதிரி இருக்குறது, ஜோனிடா காந்திதான். அவங்களை உங்களுக்கு ஏன் புடிக்கும்ன்றதுக்கான காரணத்தை மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: `இன்னசெண்ட் இதயம், நாசுக்கான நடிப்பு, தக்லைஃப் தங்கம்மா’ – பிரியங்கா மோகனை ஏன் பிடிக்கும்… அழகான 5 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top