இப்படியெல்லாம் புரபோஸ் பண்ணிப்பாருங்க.. நிச்சயம் ’Yes’-தான் பதிலாக கிடைக்கும் – 5 ஐடியாக்கள்!

ஒரு பொண்ணை காதலிக்கிறது எவ்வளவு முக்கியமோ, அதை தெரியப்படுத்துறதும் முக்கியம். அதாங்க புரொபோஸ் பண்றது… நீங்க புரொபோஸ் பண்ற யூனிக்கான, கிரியேட்டிவான ஐடியாவை வைச்சே அந்தப் பையனோ, பொண்ணோ உங்களுக்கு ஓகே சொன்னாலும், சொல்ல வாய்ப்பிருக்கு. அந்தப் புரொபோசல், வாழ்க்கை முழுவதும் உங்களோட நினைவுகளின் அடுக்களில் பாதுகாப்பாக இருக்கும். அப்படி இருக்கும்போது அந்தப் புரொபோசலை எவ்வளவு அழகா பண்ணனும்?! அதற்கான சில ஐடியாக்களைதான் இப்போ பார்க்கப்போறோம்.

புரொபோஸ்
புரொபோஸ்

லாங் டிரைவ்ல புரொபோஸ் பண்ணுங்க

இந்த ஐடியா ரொம்பவே க்ளிஷேவா உங்களுக்கு தோணும். ஆனால், கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்னு நம்புங்க. அதுவும் நீங்க லவ் பண்றவங்க டிராவல் விரும்பியா இருந்தா… இந்த ஐடியா வொர்க் அவுட் ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஒரு வாரயிறுதி நாள்ல நீங்க லவ் பண்றவங்கள அவங்களுக்கு ஃபேவரைட்டான லாங்ல இருக்குற இடத்துக்கு கூட்டிட்டு போங்க. போகும்போதே புரொபோஸ் பண்ணிடாதீங்க. போற வழியிலயே ஒரு அழகான ஸ்பாட்டைத் தேர்ந்தெடுத்து வச்சிருங்க. நீங்க போக வேண்டிய இடத்துக்கு போய் அவங்க நல்லாவே எக்ஸ்ப்ளோர் பண்ணட்டும். சந்தோஷமா எஞ்சாய் பண்ணிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது நீங்க முன்னாடியே செலக்ட் பண்ணி வச்ச அந்த அழகான இடத்துல நிறுத்தி உங்களோட எண்ணத்தை அவங்களுக்கு தெரியப்படுத்துங்க.

டிராவல்
டிராவல்

சன்செட் புரொபோஸல்

கடல் அலையோட சப்தத்தையும் சூரியன் மறையுற அந்த ஒளியையும் அனுபவிக்கிற, எஞ்சாய் பண்ற ஒருத்தரா நீங்க நேசிக்கிறவங்க இருந்தா… கொஞ்சம்கூட யோசிக்காதீங்க. அவங்கள உலகத்துலயே அழகான இல்லைனா உங்க ஊர்ல இருக்குற அழகான கடற்கரைக்கு கூட்டிட்டுப் போக முயற்சி பண்ணுங்க. அங்க ஒரு அழகான காதல் உணர்வை உங்களோட காதலரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்க. அலைகள் சப்தம் மட்டுமே நிரம்பி இருக்குற அந்த சூழல்ல அலை ஓசைகளுக்கு நடுவுல காதலோட ரகசியமா அவங்களுக்கு புரொபோஸ் பண்ணுங்க.

சன்செட்
சன்செட்

குடும்பம் மற்றும் நண்பர்கள் முன்னால் புரொபோஸ் பண்ணுங்க

நம்மளோட குழந்தைப் பருவம், டிகிரி வாங்குற நாள், வேலைக்கு சேரும் முதல் நாள் இப்படி நம்ம வாழ்க்கைல எல்லா ஸ்பெஷலான நாள்லயும் நம்மளோட குடும்பம், நண்பர்கள்தான் கூடவே சந்தோஷமா இருப்பாங்க. அவங்க முன்னாடி வைச்சு நீங்க ஏன் புரொபோஸ் பண்ணக்கூடாது?! உங்களோட குடும்பம், நண்பர்கள் இவங்ககூட எங்கயாவது ரொம்ப அழகான இடத்துக்கு சாப்பிடப்போக ஏற்பாடு பண்ணுங்க. அதுக்கு உங்களோட காதலரையும் இன்வைட் பண்ணுங்க. உங்களோட எண்ணத்தை குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு முன்னாடியே சொல்லிடுங்க. ஒரு புரொஜக்டரை ஏற்பாடு பண்ணுங்க. நீங்க நேசிக்கிறவங்கக்கூட இருந்த அழகான மொமன்ட்களை புரொஜக்டர்ல ஷார்ட் ஃபிலிம் மாதிரி போடுங்க. உங்களோட குடும்ப உறுப்பினரை அழைத்து உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்குற ஒற்றுமைகளை சொல்ல சொல்லுங்க. உடனே, புரொபோஸ் பண்ணுங்க. ரொம்பவே உணர்ச்சிகரமானதாகவும் ரொமாண்டிக்காகவும் அந்தத் தருணம் அமையும். இன்னும் சொல்லப்போனால் உங்களோட காதலர் ஆனந்தக் கண்ணீரில்கூட மூழ்கலாம்.

குடும்பம்
குடும்பம்

ரீகல் புரொபோஸல்

நீங்களும் உங்களது காதலரும் ரொம்பவே ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புபவராக இருந்தால் இந்த ஐடியா நிச்சயம் வொர்க் அவுட் ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கு. உலக அதிசயங்கள், பழமையான நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களுக்கு உங்களோட காதலரைக் கூட்டிட்டுப் போங்க. அங்கயே ஒரு ரெண்டு நாள் ஸ்டே பண்ணுங்க. அப்படியே அவங்களுக்கு புரொபோஸும் பண்ணுங்க.

புரொபோஸல்
புரொபோஸல்

ரொமாண்டிக் வாக் புரொபோஸல்

நடக்குறது உங்களோட காதலருக்கு புடிக்கும்னா இது செம ஐடியா. அமைதியான அழகான சாலையில் உங்களோட காதலருடன் நடைபயணம் ஒன்றை மேற்கொள்ளுங்கள். நேர்மையா, அவங்களோட கண்ணைப் பார்த்து உங்களோட காதலை தெரியப்படுத்துங்க. அன்னைக்கு வானிலை, கிளைமேட் உள்ளிட்ட விஷயங்கள் உங்களுக்கு கைக்கொடுத்தால் அந்தத் தருணம் இன்னும் அழகானதாக மாறும்.

ரொமான்டிக் வாக்
ரொமான்டிக் வாக்

உங்கள் அழகான காதல் உங்கள் வாழ்க்கையை இன்னும் அழதானதாக மாற்ற வாழ்த்துகள்!

சரி… நீங்க உங்களோட காதலருக்கு எப்படி புரொபோஸ் பண்ண ஐடியா வைச்சிருந்தீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read: `காதல்னாலே எவர்கிரீன்தானே பாஸ்; வயசெல்லாம் இருக்கா’ – தமிழ் சினிமாவின் `மூத்த’ காதலர்கள்!

1 thought on “இப்படியெல்லாம் புரபோஸ் பண்ணிப்பாருங்க.. நிச்சயம் ’Yes’-தான் பதிலாக கிடைக்கும் – 5 ஐடியாக்கள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top