பீஸ்ட்: `விஜய் – நெல்சன் நேர்காணல்’ – 7 தக் லைஃப் மொமன்ட்ஸ்!

நடிகர் விஜய் நடிப்பில், அனிருத் இசையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘பீஸ்ட்’ படம் வரும் ஏப்ரல் 13 அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் என வெளியான அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தப் படத்துக்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்றதும் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தியை போக்கும் வகையில் சன் டிவியில் நடிகர் விஜய்யின் நேர்காணல் வெளியானது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த நேர்காணலை எடுத்துள்ளார். ரொம்பவே ஜாலியாக அமைந்த அந்த நேர்காணலின் சில தக் லைஃப் சம்பவங்களை இங்கே பார்க்கலாம்.

விஜய் - நெல்சன்
விஜய் – நெல்சன்

1) நெல்சன்: பீஸ்ட் படம் எப்படி வந்துருக்கு? நல்லா வந்துருக்கா?

விஜய்: யாருக்கு தெரியும்? வந்தாதான் தெரியும்.

2) நெல்சன்: ஜார்ஜியா ஷூட்டிங் அப்போ… நீங்க போங்க. நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வறேன்னு சொன்னீங்க. ஏன்னு கேட்டா. சர்ச்சுக்கு போறேன்னு சொன்னீங்க. ஃபாரீன் வந்துட்டு ஒரு ஆள் சர்ச்சுக்கு போறார்னா எவ்வளவு பயங்கரமா இருக்கணும். என்னால நம்ப முடியல ஃபர்ஸ்ட். அதுக்கப்புறம் நீங்க போனதுக்கு அப்புறம் பின்னாடி வந்து பார்த்தா சர்ச்சுல தான் இருந்தீங்க. கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா உங்களுக்கு?

விஜய்: கடவுள் நம்பிக்கைலாம் இருக்கு. கோயில், சர்ச், தர்கா எங்க போனாலும் அந்த நம்பிக்கை இருக்கும். என்னோட அம்மா இந்து, அப்பா கிறிஸ்டியன். அதனால, எங்கப் போனாலும் பிரச்னையில்லை. அதேதான் என்னோட கிட்ஸூக்கும் சொல்லி வளர்த்திருக்கேன். சென்னைல அடிக்கடி போக முடியாது. அதான், அங்க வந்து ஒரு வணக்கத்தைப் போட்டேன்.

நெல்சன்: எனக்கு ஜார்ஜியால இருந்தே டவுட்டு. ஃபோட்டோக்காக நடக்குற விஷயமா? இல்லை நெஜமாவே நீங்க அப்படிதானானு.

விஜய் - நெல்சன்
விஜய் – நெல்சன்

3) நெல்சன்: சுமார் 25 வருஷம் டாப்ல இருக்கீங்க. ஃபேன் பேஸ் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு. உங்களுக்கு எதாவது பிரச்னைனாலும் நல்லதுனாலும் உங்க கூடவே இருக்காங்க. உங்க ஃபேன்ஸ்க்கு எதாவது சொல்லணும்ன்ற மாதிரி இருக்கா?

விஜய்: நம்ம நண்பர்கள் எப்பவும் வேறலெவல்தான். உங்க ஸ்டைல்ல சொல்லணும்னா ‘வேற மாரி, வேற மாரி’. அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் அவ்வளவு பெரிய ஆள்லாம் இல்லைனு சொல்லி எஸ்கேப் ஆக விரும்பல. கிரிக்கெட் மேட்ச் ஒண்ணு நடக்குது. பேட்ஸ்மேன் விளையாடும்போது ஒவ்வொரு பாலையும் சிக்ஸ் அடிக்கதான் டிரை பண்ணுவாரு. அதே ப்ளேயர் ஃபீல்டிங் பண்ணும்போது வர்ற பால் எல்லாத்தையும் கேட்ச் புடிக்கணும்னு ட்ரை பண்ணுவாரு. அடிச்சா சிக்ஸர். புடிச்சா கேட்ச். எதுவா இருந்தாலும் நாமதான் இறங்கி விளையாடடுறவங்களா இருக்கணுமே தவிர, வெளிய இருந்து உற்சாகப்படுத்தி கைதட்றவங்களா இருக்கணுமே தவிர, வெறுமனே சும்மா விமர்சனம் பண்றவங்களா மட்டும் இருக்கக் கூடாது. புடிச்சிருந்தா எடுத்துக்கோங்க. இல்லைனா விட்ருங்க. ஃப்ரீ அட்வைஸ்!.

4) நெல்சன்: பீஸ்ட் நல்லாப் போகுதுனா… அப்போ, உங்களுக்கு தோணும்ல… நம்ம டீம் எல்லாம் எதாவது ஒரு ஊருக்கு கூட்டிட்டுப்போகலாம். அப்டினா… தோணும்ல? தோணாதா?

விஜய்: நான் போய்க்கிறேன் தனியா. நீங்க போங்க தனியா!

விஜய் - நெல்சன்
விஜய் – நெல்சன்

5) நெல்சன்: உங்க ஃபேவரைட் பிளேஸ்க்கு போனா என்ன பண்ணுவீங்க?

விஜய்: பிளானிங்லாம் ஒண்ணும் இருக்காது. என்னோட அதிகபட்ச தேவையே, ஒரு நல்ல ஹோட்டல். அந்த ரூம்ல ஸ்கிரீனை திறந்தா நல்ல வியூ ஒண்ணு வேணும். அங்க ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்த ஃபுல்டேகூட அப்படியே இருப்பேன்.

நெல்சன்: இங்க இருந்து அமெரிக்கா போய், ஒரு ரூம்ல சேர் போட்டு கர்ட்டனைத் திறந்து உட்கார்ந்துப்பீங்களா? இப்போ நாங்களும் வந்தா பக்கத்து பக்கத்துல சேர் போட்டு உட்கார்ந்துக்கணுமா? பீஸ்ட் நல்லாப்போனா நீங்களே போய்ட்டு வாங்க.

6) நெல்சன்: படம்லாம் ஓகே ஆனதுக்கப்புறம் ஒருநாள் டின்னர் சாப்பிட கூப்பிட்டீங்க. நான் ஃபுட் லவ்வர். இன்னைக்கு பயங்கரமா சாப்பிடப்போறோம்னு கம்மியா சாப்பிட்டுட்டு வந்தேன். பேசி முடிச்சதுக்கு அப்புறம் சாப்பிடலாமானு கேட்டீங்க. சரினு சொன்னதும் ஒரு பிளாஸ்டிக் கவர்ல 100 ரூபாய் பிரியாணி பாக்கெட்டை எடுத்து வைச்சீங்க. இதை சாப்பிடவா வந்தோம்னு ஆயிடுச்சு.

விஜய்: அதுலாம் பயங்கர டேஸ்ட்டா இருக்கும்.

நெல்சன்: அது கரெக்டுதான் சார். விஜய் சார்க்கூட சாப்பிடப்போனா ராஜபோக விருந்து இருக்கும்னு நினைச்சேன். ஆனால், கவர் எடுத்ததும் டோட்டல் ஆஃப்.

7) நெல்சன்: ரீசண்டா கெட் டூகெதர் ஒண்ணு மீட் பண்ணோம்ல சார். நான், லோகேஷ், அட்லீ எல்லாரும் இருந்தாங்க. முடியும்போது மெமெரிக்காக ஃபோட்டோ எடுத்தோம். அந்த ஃபோட்டோவை நீங்க பார்க்கும்போது உங்களுக்கு ஒண்ணு தோணும்ல. அது என்ன?

விஜய்: நீங்க தானாடா அது. நீங்க மூணு பேரும் உட்கார்ந்து சீரியஸா பேசிட்டு இருந்தீங்க. என்னதான் பேசுறீங்கனு பார்க்க அப்ப்டியே வந்தேன். காதுகொடுத்து கேட்டா, அடுத்த படத்துக்கு என்ன சம்பளம் வாங்கலாம்னு பேசிட்டு இருக்கீங்க. மூணு பேரையும் நல்ல ஒழுங்கா ஒரு கதை பண்ணுங்கடானா சம்பளத்தைப் பத்தி பேசிட்டு இருக்கானுங்க. இவனுங்கள வைச்சிட்டு என்ன பண்றது.

Also Read: ஸ்வர்ணலதா.. ஒரு புல்லாங்குழலின் நீங்காத சோகம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top