வீட்டு கரண்ட் பில் ஷாக்கடிக்கிறதா… அதை எப்படியெல்லாம் குறைக்கலாம்.. அதற்கான 5 ஈஸி டிப்ஸ்களைப் பத்திதான் நாம இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப் போறோம்.
கரண்ட் பில்
சம்மர் வெயில் காட்டு காட்டுனு காட்டத் தொடங்கிருச்சு. ஃபேன், ஏர்கூலர், ஏசிகளும் ஓவர் டைம் பார்க்க வேண்டிய நிலை வந்துவிட்டது. இதனால், கரண்ட் பில்லும் எகிறும் நிலை. வீட்டோட கரண்ட் பில்லை எப்படியெல்லாம் குறைக்கலாம்.. அதற்கான 5 ஈஸி டிப்ஸ்..
பழைய பல்புகளுக்கு குட்பை சொல்லுங்க…
உங்க வீட்ல இருக்க பழைய பல்புகளை எல்லாம் மாற்றிவிட்டு எல்.ஈ.டி பல்புகளுக்கு மாறுங்கள். இது எனர்ஜி சேவிங் மட்டுமில்லீங்க, உங்க வீட்டோட நைட் லுக்கையும் ஃப்ரெஷ்ஷாக்கும். மின்சாரப் பயன்பாட்டைப் பொறுத்தவரை 100 வாட்ஸ் filament bulb, 10 மணி நேரம் பயன்படுத்தினாலே ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதேநேரம், 15 வாட் சி.எஃப்.எல் பல்பை நீங்கள் 66.5 மணி நேரமும், 9 வாட் எல்.ஈ.டி பல்பை 111 மணி நேரமும் பயன்படுத்தினால்தான் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.
ரேட்டிங் முக்கியம் பாஸ்!
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கும்போது அவற்றுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் எனர்ஜி ரேட்டிங்குகளில் தனி கவனம் செலுத்துங்கள். சிக்கனமான மின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஃபிரிட்ஜ்கள், ஏசிகள் போன்றவற்றுக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருப்பார்கள். முடிந்தவரை 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட பொருட்களைத் தேர்வு செய்யுங்கள். இந்த வகை எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், உங்கள் கரண்ட் பில் கம்மியாகவே வரும். ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத்திய பிறகு, நீங்கள் அதிகம் செலவழித்த தொகையை கரண்ட் பில் வழியாக மிச்சப்படுத்தலாம்.
ஆஃப் அவசியம்
பயன்பாடு முடிந்தபிறகு அல்லது பயன்படுத்தாத நிலையில் எலெக்ட்ரானிக் பொருட்களை ஆஃப் செய்து வைக்க வேண்டும் என்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு ரூமை விட்டு வெளியேறுகையில் அந்த ரூமில் இருக்கும் ஃபேன், லைட் மற்றும் ஏசி போன்றவற்றை அணைத்துவிட்டு வெளியேறுங்கள். இதனால், மின்சாரம் தேவையில்லாமல் விரையமாவதைத் தடுக்க முடியும். அத்தோடு, கரண்ட் பில்லிலும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க முடியும்.
ஏசி எப்போதும் 24 டிகிரியிலேயே இருக்கட்டும்!
ஏசி எப்போதும் 24 டிகிரியிலேயே வைக்க வேண்டும் என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள். இதனால், அறை எப்போதும் கூலாகவே இருப்பதோடு, கரண்ட் பில் என்கிற வகையில் பாக்கெட்டையும் இது பெரிதாக பதம் பார்க்காது என்பதுதான் காரணம். இதோடு, டைமர் செட்டிங்கையும் நீங்கள் பயன்படுத்தலாம். தேவையான டெம்பரேச்சரை அறை வெப்பநிலை எட்டியதும், ஏசி தாமாகவே ஆஃப் ஆகிவிடும்படியாக டைமரை செட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால், கரண்ட் பில் என்கிற வகையில் கணிசமான தொகையை நீங்கள் மிச்சப்படுத்தலாம்.
பவர் ஸ்ட்ரைப்ஸ்
உங்கள் வீட்டில் நிறைய எலெக்ட்ரானிக் பொருட்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவற்றை பிளக் செய்ய பவர் ஸ்ட்ரைப்ஸ்களைப் பயன்படுத்துங்கள். பயன்பாடு முடிந்தபிறகு ஒரே ஒரு ஸ்விட்ச் மூலமாக எல்லாவற்றையும் நீங்கள் அணைக்க முடியும். இதனால், குறிப்பிட்ட அளவு மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.
Also Read –