காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தைப் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல. ஆனால், அதுல வர்ற கண்மணியும் கதீஜாவும் இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்காங்க. ரெண்டு பேர்ல யார் பெஸ்ட்னு கேட்டு… ரெண்டு பேரோட ஃபேன்ஸூம் சோஷியல் மீடியால அடிச்சிக்கிட்டு இருக்காங்க. திரிஷா ஃபேன்ஸ்லாம் யாரு ஃபேன்ஸ் பெருசுனு பலமா அடிச்சிக்காட்டுங்கய்யானு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்காங்க. சரி, ரெண்டுபேரும் நடிச்ச படங்களை வைச்சு கம்பேர் பண்ணி யாரு வின்னர்னு பார்த்துருவோமா?!
கரியர் கிராஃப்
2003 ல ‘மனசினக்கரே’ படம் மூலமா அறிமுகமான நயன்தாரா, 2005 ல ஐயா படம் மூலமா தமிழுக்கு வந்தாங்க. நடிக்க வந்து கிட்டத்தட்ட 20 வருசம் ஆகப்போகுது. இத்தனை வருசத்துல 75 படங்களுக்கு மேல நடிச்சிருக்காங்க நயன். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதினு எல்லா பெரிய ஹீரோக்களோடவும் நடிச்சு ‘ லேடி சூப்பர் ஸ்டார்’ சொல்ற அளவுக்கு இருக்கு நயன்தாராவோட கரியர் கிராஃப்.
சமந்தா ‘ஏ மாயா சேசாவா’ படத்துல தமிழ்ல விண்ணைத்தாண்டி வருவாயால அறிமுகமாகி 12 வருசம் ஆகுது. இத்தனை வருச்சத்துல 45 படங்களுக்கு மேல நடிச்சிருக்காங்க. தெலுங்குல பல முன்னணி ஹீரோக்களோட நடிச்சிட்ட சமந்தா தமிழ்ல விஜய், சூர்யா சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதினு ரொம்ப கம்மியான ஆட்களோடதான் நடிச்சிருக்காங்க. இத்தனை வருசத்துல இவங்களுக்கு ஒரு அடைமொழிகூட வரலைங்குறது.. என்ன காரணம்.. யார் செய்த தாமதம்?!
அதனால இப்போதைக்கு – நயன்தாரா -1 சமந்தா – 0
கேரக்டர் வெரைட்டி
பில்லாவில் பிகினி டிரெஸ் போட்டு இளைஞர்களை ஜொள்ளுவிட வைப்பார். ‘யாரடி நீ மோகினி’யில் சிவப்பு சேலை கட்டி இளசுகளின் மனசைக் கொள்ளையடிப்பார். வல்லவன் ஜாலி காதலியாக லிப்லாக் சீனும் செய்வார், ராஜா ராணியில் கோவக்கார மனைவியாக ஊடலும் செய்வார். இப்படி நடிப்பின் எல்லா எல்லையையும் தொட்டு வந்திருக்கிறார் நயன்தாரா.
அட பிகினி என்னங்க சேலைகட்டியே நாங்க கிளாமர் காட்டுவோம் என்று ரங்கஸ்தலத்தில் செய்துகாட்டினார் சமந்தா. பாவமான காதலி, கோவமான காதலி, குழப்பான காதலி, லூசுத்தனமான காதலி என்று சமந்தாவுக்கு அமைந்ததெல்லாம் இப்படியான ரோல்தான். இருந்தாலும் கொஞ்சம் முக்கியமான ரோல்ஸூம் சமந்தாவுக்கு சில படங்கள்ல கிடைச்சிருக்கு.
இந்த விஷயத்தில் இவங்க ரெண்டு பேருக்குமே ஒரு பாயிண்ட் கொடுக்கலாம்.
நயன்தாரா -2 சமந்தா – 1
Famale Centric படங்கள்
நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார்னு கொண்டாடுறதுக்கு காரணமே அவங்க நடிச்சு ஹிட்டான ஃபீமேல் செண்ட்ரிக் படங்கள்தான். மாயா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண் – இப்படி நயன்தாரா பண்ண பல வுமன் செண்ட்ரிக் படங்களைப் பார்த்து சிங்கப் பெண்கள் எல்லாம் சில்லறைய சிதறவிட்ருக்காங்க. இப்பக்கூட ஓ2 அப்ன்ற படத்துல நடிச்சிட்டு இருக்காங்க.
பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், மனம், பத்து என்றதுக்குள்ள, ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், ஜானு இப்படி சில பெண் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்குற கதாபாத்திரங்கள்ல சமந்தா நடிச்சிருந்தாலும் வுமன் செண்ட்ரிக்னு பார்த்தா யுடர்ன், ஓ பேபி இப்படி ரெண்டே படங்கள்லதான் நடிச்சிருக்காங்க.
இதை கணக்குப் பண்ணி பார்த்தா இதுவரைக்கும் நயன்தாரா – 3, சமந்தா – 1
ஹிட்டு பாட்டு
நயந்தாராவ நமக்கு முதல்ல அறிமுகப்படுத்துன பாட்டே ஐயா படத்துல வர்ற ‘அத்திரி பத்திரி’ பாட்டுதான். அந்த படத்துல வந்த ‘ஒரு வார்த்த கேட்க’ ஒரு வருஷம்’ பாட்டும், ஐயோ என்னா அழகுயான்னு சொல்ல வைச்சுச்சு. அதுக்கப்புறம் சொல்லவா வேணும், ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், கோடம்பாக்க ஏரியா, யம்மாடி ஆத்தாடி, வெண்மேகம் பெண்ணாக, வாராயோ வாராயோ, வாடா மாப்பிள்ளை, யார் இந்த பெண்தான், கண்ணால கண்ணால, தங்கமே, இறைவா, கல்யாண வயசு, நீயும் நானும் அன்பே, டக்னு டக்னு பாட்டு எல்லாம் நயன்தாராவை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்துச்சு.
கோரே கோரே, நீதானே என் பொன்வசந்தம்ல எல்லாப் பாட்டும், செல்ஃபி புள்ள, ஆனாலும் இந்த மயக்கம், உன்னாலே என்னாளும், நீதானே, தி கர்மா தீம் எல்லாமே சமந்தாக்கு செம ஹிட்டு. ஆனால், இதையேல்லாம் தாண்டி ஊ சொல்றியா மாமா ஹிட்டு ஆச்சு பாருங்க. அமுக்கு டுமுக்கு அமால் டுமால் ஹிட்டு அதெல்லாம். அந்தப் பாட்டுக்காகவே புஷ்பா படம் பார்க்கப்போனவங்கலாம் இருக்காங்கனா பார்த்துக்கோங்க.
இரண்டு பேருக்குமே ஏகப்பட்ட பாட்டு ஹிட்டுன்றதால ரெண்டு பேருக்கும் ஒரு பாயிண்ட் கொடுத்தர்லாம்.
சோ, நயன்தாரா – 4, சமந்தா – 2
டம்மி ரோல்கள்
ஏகன், வில்லு, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, மாஸ் என்கிற மாசிலாமணி, திருநாள், விஸ்வாசம், அண்ணாத்தே, பிகில், தர்பார் இதுமாதிரியா படங்கள்ல நயன்தாராவோட பல கேரக்டர்கள் டம்மியாதான் இருக்கும். அதாவது அந்த கேரக்டருக்கு நயன்தாராதான் வேணும்னு இல்லை. யார் வேணும்னாலும் அந்த கேரக்டரை பண்ணலாம். பெரும்பாலும் நயன்தாரா நடிச்ச வுமன் செண்ட்ரிக் படங்களை தவிர்த்துட்டுப் பார்த்தா அவங்க ரோல் எல்லாமே இப்படித்தான் இருக்கும்.
அஞ்சான், கத்தி, தங்கமகன், மெர்சல், மகாநடி, இரும்புத்திரை, சீமராஜா இப்படி சமந்தா ஹீரோயினா பண்ண பல கேரக்டர்ஸூம் டம்மியாதான் இருக்கும். இந்த கேரக்டர்ஸூக்குலாம்கூட சமந்தாதான் கண்டிப்பா வேணும்னு அவசியம் இல்லை. இப்படி டம்மி ரோல்களை எடுத்துப் பார்த்தோம்னா ரெண்டு பேருமே நிறைய பண்ணியிருக்காங்க. இதுக்கு ரெண்டு பேருக்கும் ஒரு பாயிண்ட் கொடுக்கலாம்.
கடைசியா நயன்தாராவுக்கு 5 பாயிண்ட், சமந்தாவுக்கு 3 பாயிண்ட்.
நயன்தாரா Vs சமந்தா கம்பேரிஸன்ல வின்னர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராதான். ஒரு வருத்தமான விஷயம் என்னனா நான் சமந்தா ஃபேன்!