கமல் – கே.எஸ்.ரவிக்குமார் கரியர்ல முக்கியமான படம் பஞ்சதந்திரம். 2002ல வந்த இந்த முழுநீள காமெடி ரோலர் கோஸ்டர் பயணத்தை ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகணும் மிஸ் பண்ணவே கூடாது… அதற்கான 5 காரணங்களைப் பத்திதான் இந்த வீடியோவுல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
பஞ்சதந்திரம் படத்துல யூகிசேது நடிச்ச வேதம் கேரக்டர்ல நடிக்க பிரபலமான ஒரு கிரிக்கெட் வீரரைத்தான் முதல்ல கமல் அணுகியிருக்காரு. ஆனால், ஒரு சில காரணங்களால அது நடக்காமப் போச்சு. இந்தப் படத்துக்கு ஒரு ஹாலிவுட் கனெக்ஷனும் இருக்கு… அதேமாதிரி முன்னாடி, பின்னாடி காமெடில வர்ற இன்ஸ்பெக்டர் கேரக்டரை முதல்ல பண்ண இருந்தது இன்னொரு நட்சத்திரம். அவரால முடியாமல் போகவே, அதுக்காக பின்னாடி வருத்தப்பட்டிருக்கிறார். அவரைப் பத்தியும் சொல்றேன். வீடியோவை முழுசா பாருங்க..
* கிரேஸி மோகனின் Epic டயலாக்ஸ்
கிரேஸி மோகன் – கமல் கூட்டணியில வந்த படங்கள்ல பஞ்சதந்திரம் படத்துக்கு எப்போதுமே ஸ்பெஷலான இடம் இருக்கும். அந்த அளவுக்கு இந்தப் படத்தோட டயலாக்ஸ்ல பின்னி, பெடலெடுத்திருப்பாரு கிரேஸி மோகன். ரசிகர்களுக்கு காமெடி ரோலர் கோஸ்டர் விருந்தே படைச்சிருப்பாங்க. கமல் உள்பட ஐங்குறுதாடிகளும் பெங்களூர் போனதுக்கு அப்புறம்தான் கதை சூடுபிடிக்க ஆரம்பிக்கும். ஆனா, படம் தொடங்குனதுல இருந்தே காமெடி நெடி தூக்கலாவே இருக்கும். `முன்னாடி, பின்னாடி’ காமெடி, ஐந்து பேரும் போன்ல பேசுற இடம், தேவயானியோட டயலாக்ஸ்னு படம் நெடுக எதையுமே நீங்க மிஸ் பண்ணவே முடியாது. அந்த அளவு வார்த்தை விளையாட்டுல பிச்சிருப்பாரு கிரேஸி மோகன்.
* ஸ்டார் கேஸ்டிங்
படம் முழுக்கவே ஸ்டார்ஸ் நிறைஞ்சிருப்பாங்க. கமல் – சிம்ரன் தொடங்கி, அவரோட நண்பர்களா வர்ற ஜெயராம் (நாயர்), யூகி சேது (வேதம்), ஹனுமந்த ரெட்டி (ஸ்ரீமன்), ரமேஷ் அரவிந்த் (ஹெக்டே), நாகேஷ், மணிவண்ணன், சந்தான பாரதி, விஜயகுமார், ரமேஷ் கண்ணா, ஊர்வசி, ஐஸ்வர்யா, சங்கவி, கோவை சரளா, சிஸர்ஸ் மனோகர், வாசு விக்ரம் என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தை அலங்கரித்திருக்கும். சின்ன சின்ன கேரக்டர்களில்கூட பெரிய நட்சத்திரங்கள் வந்து போவார்கள். கிரேஸி மோகன் டயலாக்குகளை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோனதே இந்த ஸ்டார் கேஸ்டிங்தான்.
* காமெடி ரோலர் கோஸ்டர்
படம் ஆரம்பத்தில் இருந்தே நம்மளை சிரிக்கவைக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஒவ்வொரு சீன்லயும் காமெடி அப்படியே கொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சீனுக்கு நீங்க சிரிச்சு முடிக்குறதுக்குள்ள அடுத்த சீன் வந்துடும். இரண்டாவது ஜோக் உங்களுக்குப் புரியுறதுக்குள்ள மூணாவது காமெடி வந்து விழும். இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம். உதாரணமா ஒரே ஒரு சீனை எடுத்துப்போம். ரமேஷ் அரவிந்தோட முன்னாள் காதலி தேவயானி தற்கொலைப் பண்ண டிரை பண்ணும்போது, அவரைக் காப்பாத்த ஹோட்டல் ரூமுக்கு கமல் போவார். அந்த சீன், சுமார் ஒரு 5 நிமிஷம்தான் படத்துல வந்துபோகும். அந்த 5 நிமிஷத்துல 10-க்கும் மேல காமெடி டயலாக்குகள் தெறிச்சிருக்கும். `தமிழ் இனி மெல்லச்சாகும்னு கரெக்டாதான் சொல்லிருக்காங்க’, `எவ்ளோ பெரிய மாத்திரை’, ’அப்படியே என்னைத் தட்டி ஒரு கத சொல்லு ராம்’, ‘ஒரு ஊர்ல ராம்னு ஒரு கேணையன் இருந்தானாம்’னு வரிசையா டயலாக்குகள் வந்து விழுந்துட்டே இருக்கும். இதையெல்லாம் நிச்சயம் நம்மால மிஸ் பண்ண முடியாது மக்களே. முதல்முறையா நீங்க இந்தப் படத்தைப் பார்க்கும்போது பல டீடெய்ல்களை நாம கவனிக்க மறந்துட அதிகமான வாய்ப்பு இருக்கு. காரணம், அந்த அளவுக்கு காமெடி வொர்க் அவுட் ஆகி நம்மளை மறந்து சிரிச்சுட்டு இருப்போம். அடுத்தடுத்த தடவைகள் படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொரு முறையும் ஒரு டீடெய்லை நாம கவனிக்கலாம். அதுதான், பஞ்ச தந்திரம் செஞ்ச மேஜிக்.
* Scripted Look Unscripted
பஞ்சதந்திரம் படத்தோட வெற்றியே கடினமான சூழல்கள்ல ஒவ்வொரு கேரக்டரும், பேசுற சின்ன சின்ன டயலாக்குகளோட ரீச்தான். சுருக்கமா சொல்லணும்னா, Scripted Look Unscripted. அதாவது, எல்லாமே திட்டமிட்டு செய்ததுதான், ஆனால், பெரிய திரையில் பார்க்கும்போது எல்லாமே அந்தந்த சூழ்நிலைகள்ல திட்டமிடாதபடி நிகழ்ற மாதிரி இருக்கும். குறிப்பா ஹீரோ ராம் அண்ட் ப்ரண்ட்ஸ் தப்பிக்கிறப்போ இருக்க பதட்டமான சூழலை காமெடியா கடந்து போறது. உதாரணத்துக்கு, ரமேஷ் அரவிந்தோட வீட்ல நடக்குற உகாதி பங்ஷனுக்கு சிம்ரன் வர்ற சீனை எடுத்துக்கலாம். அந்த சூழ்நிலைல அங்க ரம்யா கிருஷ்ணனும் வந்துடுவாங்க. இவங்க ரெண்டு பேரைப் பத்தியும் சமாளிக்க, கமல் அங்க இருக்க ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு பொய்யைச் சொல்லுவார். தன்னுடைய நண்பர்களின் மனைவிகளிடம் ரம்யாகிருஷ்ணனும் சிம்ரனும் அக்கா, தங்கை என்று Indroduce செய்யும் நிலையில், சிம்ரனிடம் ரம்யா கிருஷ்ணனை, ஸ்ரீமனின் தங்கை என அறிமுகப்படுத்துவார். ப்ளூ கலர் சாரி பற்றி பேச்சு வரும் நிலையில் கமல் பேசும் டயலாக் வெறித்தனமானது. `ரெட்டியோட ப்ளூ சிஸ்டர் (கையில ப்ளூ கலர் பவுல் வைத்திருப்பார்) எனப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெயராம் பச்சை நிற மிளகாயைத் தூக்கிப்போடவே, ’பச்சை டிரைவரோட ஓடிப்போய்ட்டா’ என்று முடிப்பார். `என்னது டிரைவர் பேரு பச்சையா?’ என சிம்ரன் கேட்க, நண்பர்கள் நால்வரும் கமலில் சமாளிபிகேஷனை வியந்து, `அடங்கப்பா’ என்று சொல்ல, அதைப் பிடித்து டிரைவர் பேர் பச்சையப்பா என்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருப்பார் கமல். இப்படி, ஸ்கிரிப்டட் சீன்கள் எல்லாமே நமக்கு நேச்சுரலா அன்ஸ்கிரிப்டடா நிகழ்ற மாதிரியே இருக்கும். அதுதான் பஞ்சதந்திரம் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம்னே சொல்லலாம்.
* இன்ட்ர்ஸ்டிங்கான பெயர் காரணம்
குழந்தைகளை நல்வழிப்படுத்த சொல்லப்படும் பஞ்சதந்திரக் கதைகளில் இருந்து படத்தின் தலைப்பு எடுக்கப்பட்டிருக்கும். இதைக் குறிப்பால் உணர்த்தும் பொருட்டே, மைதிலி கேரக்டர், தனது குழந்தைக்குக் கதை சொல்வது போன்று படம் தொடங்கும். அதேபோல், பஞ்ச பாண்டவர்களை நினைவுபடுத்தும் விதமாக கமல், யூகி சேது, ஜெயராம், ஸ்ரீமன், அரவிந்த் ரமேஷ் என ஐந்து கேரக்டர்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல், ராமாயணத்தில் வரும் ராமரின் முழுப் பெயரான ராமச்சந்திர மூர்த்திதான் ஹீரோவின் கேரக்டர் பெயர். ஹீரோயின் மைதிலி என்கிற பெயர் சீதா தேவியின் மற்றொரு பெயராகும்.
பஞ்சதந்திரம் படத்துல வர்ற ராமோட ஃப்ரண்ட் வேதம் கேரக்டர்ல யூகி சேதுவுக்குப் பதிலா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நடிக்க இருந்தது. இதுக்காக, ஸ்ரீகாந்த் கிட்ட கமல் பேசி, அவர் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், ஒருசில காரணங்களால், அந்த கேரக்டரில் அவரால் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. 1983 பட விழாவில் இதுபற்றி கமலும், ஸ்ரீகாந்தும் பேசியிருந்தார்கள். அதேமாதிரி ஸ்கார்லட் ஜோஹான்சன் நடிச்சு 2017ல வந்த Rough Night படத்தோட கதையும் இதேமாதிரிதான் இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் இங்க ஐங்குறுதாடிகள் போல, அங்க தன்னோட தோழிகளோட பேச்சுலரேட் பார்ட்டி கொண்டாட ஸ்கார்லட் ஹோஹான்ஸன் மயாமிக்குப் போவாங்க. இங்க மேகி கொலை செய்யப்பட்டு, அந்த உடலை மறைக்க நண்பர்கள் பாடுபடுற மாதிரி, அங்க ஒரு Stripper இறக்கவே, அந்த டெட் பாடியை மறைக்க தோழிகள் ஐந்துபேரும் போராடுவாங்க. முன்னாடி, பின்னாடி காமெடில வர்ற இன்ஸ்பெக்டர் வாசு விக்ரம் கேரக்டர்ல முதல்ல நடிக்குறதா இருந்தது டயலாக் ரைட்டரான கிரேஸி மோகன்தானாம். அவர் நடித்தால் நன்றாக இருக்குமென டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரும் விருப்பப்பட்டிருக்கிறார். ஆனால், அவரால் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இதனால், பின்னாடி அவர் ரொம்பவே வருத்தப்பட்டதா ஒரு பேட்டில சொல்லியிருப்பார்.
சரி, பஞ்சதந்திரம் படத்துல எந்த காமெடி உங்களோட ஃபேவரைட்டுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.