சிலர் என்னை சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சிதான். மற்றவர்கள் உழைப்புக்கு முன் நான் சின்னவன்தான்’ என்று தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பேசியது வைரலாகி வருகிறது. இந்த வீடியோல நாம பார்க்கப்போறது ஆஃப் ஸ்கிரீன்ல உதயநிதி ஸ்டாலின் செஞ்ச 5 சிறப்பான சம்பவங்களைப் பத்திதான்.
* எய்ம்ஸ் செங்கல்
இது, 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தப்ப நடந்தது. அந்தத் தேர்தலில் கையில் ஒரு செங்கலை எடுத்துச் சென்று பிரசாரம் செய்தார் உதயநிதி. `மதுரைல அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து மூணு வருஷத்துக்கு முன்னாடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுனாங்கல… அது நியாபகம் இருக்கா.. அதை கையோட எடுத்துட்டு வந்துட்டேன்’னு அவர் பேசுனதுக்கு மக்களிடம் பெரிய ரெஸ்ஃபான்ஸ் இருந்தது. அதுவே தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது.
* கமலாலயம் மட்டும் போய்டாதீங்க!
கடந்த ஏப்ரலில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, கூட்டத்தொடர் முடிந்து ஒருநாள் வெளியே கார் ஏற வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தவறுதலாக உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏறப்போவார். பதறிப்போன காவலர்கள், அதை அவருக்கு சுட்டிக்காட்டவே, ’ஓ அந்த வண்டியா சாரி..ஏன்பா நம்ம வண்டிக்கு கரெக்டா கூட்டிட்டு போக மாட்டீங்களா’ என்றபடி காரில் ஏறி புறப்படுவார். இதைப்பற்றி அடுத்த நாள் கூட்டத்தொடரில் பேசிய உதயநிதி, `நான்கூட மூன்று நாளைக்கு முன்னர் உங்க கார்ல ஏறப்போய்டேன். அடுத்த முறை நீங்கள் தாரளமாக என்னுடைய காரை எடுத்துச் செல்லலாம். ஆனால், தயவுசெஞ்சு கமலாலயம் சென்று விடாதீர்கள்’ என்று கவுண்டர் கொடுத்திருப்பார். அதற்கு எதிர்கட்சி வரிசையில் இருந்து ஓபிஎஸ் எழுந்து, `எங்கள் கார் எம்.ஜி.ஆர் மாளிகைக்கு மட்டும்தான் செல்லும்’ என்று பதில் சொன்னார். இது சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
* மோடிக்குப் பதிலடி
2021 தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளராக உதயநிதி அறிவிக்கப்பட்டார். அதையடுத்து, தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, `திமுகவுடைய Young Crown Prince, அந்தக் கட்சியோட நிறைய சீனியர்களை ஓரங்கட்டிட்டார். அத்தோட, பயங்கரமான கருத்துகளையும் சொல்லிட்டு வர்றார்’னு அட்டாக் பண்ணார். மோடியோட இந்த விமர்சனத்துக்கு அவிநாசி தொகுதி பிரசாரத்துல உதயநிதி பதிலடி கொடுத்தார். `பி.ஜே.பில அத்வானினு ஒருத்தர் இருந்தாரு. ரத யாத்திரைலாம் போனாரு. அடுத்த பிரதமரா அத்வானிதான் வரப்போறார்னு சொன்னாங்க. இப்போ அத்வானி எங்க இருக்கார்னு யாருக்குத் தெரியும்? யாருக்கும் தெரியாது. ஓரங்கட்டிட்டாரு. யஷ்வந்த் சின்ஹானு ஒருத்தர் இருந்தாரு… மோடியோட டார்ச்சர் தாங்காம வெளியபோய்ட்டார். வெங்கய்ய நாயுடுனு ஒருத்தர் இருந்தாரு. அவர்தான் அடுத்த பிரதமர்னாங்க.. அவரையும் ஓரங்கட்டிட்டாங்க.
* நியூஸ் ஜே மைக்
மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கை பற்றி ஒரு பிரஸ்மீட்டில் உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த பிரஸ்மீட்டில் பல்வேறு ஊடகங்களின் மைக்குகளும் அவர் முன்னை நீட்டப்பட்டன. அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சேனலான நியூஸ் ஜே மைக்கும் நீட்டப்பட்டது. அப்போது, அந்த மைக் அவர் கையில் விழவே, இதை நான் புடிச்சுக்கவா… ரைட்டு என அசால்டு காட்டியிருப்பார். அதோடு, இதையெல்லாம் போடமாட்டாங்க என்ற கமெண்டோடு கேள்விகளுக்கும் பதிலளிப்பார். அப்போது, திமுகவின் பி டீமா ஓபிஎஸ்னு ஒரு கேள்வி கேப்பாங்க. `திமுகல ஏ டீம், பி டீம்லாம் கிடையாது. ஒரே டீம்தான். அது தலைவர் டீம்தான்’னும் பதில் சொல்லிருப்பாரு.
* விக்ரம் பட பஞ்சாயத்து
கமல் தயாரித்து நடித்திருந்த விக்ரம் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அப்போது, ஆளுங்கட்சியாக திமுக இருப்பதால், கமலை மிரட்டி விக்ரம் படத்தை வாங்கியதாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்த விமர்சனத்துக்கு விக்ரம் ஆடியோ லாஞ்ச் ஈவெண்டில் கமல்ஹாசன் முன்னிலையிலேயே உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், `இப்போ ரிலீஸ் பண்ற எல்லாப் படங்களையும் ரெட் ஜெயண்ட்தான் பண்றாங்க. ரெட் ஜெயண்ட் வந்து மிரட்டி எல்லாத்தையும் வாங்கிடுறாங்கனு சொல்றாங்க. ஆனா, நான் அப்படிலாம் வாங்கலைங்க. நீங்களே சொல்லுங்க கமல் சாரை யாராவது மிரட்ட முடியுமா.. மிரட்டுனாதான் அவரு பயந்துடுவாரா?’னு கமல் முன்னிலையிலேயே அந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார் உதயநிதி.
உதயநிதி ஸ்டாலின் பண்ணதுலயே சிறப்பான சம்பவம்னு எதைச் சொல்வீங்க… மறக்காம அதை கமெண்ட்ல சொல்லுங்க.
Also Read -தமிழ் சினிமாவுக்கு பா.இரஞ்சித் ரொம்ப முக்கியம்… ஏன்?