இதுவரை திரைப்படங்கள் திரையரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் தற்போது ஓடிடி தளங்களிலும் வந்திருக்கின்றன; வந்து கொண்டும் இருக்கின்றன. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக உள்ளங்கையில் உள்ள செல்போனையே தியேட்டர்களாக மாற்றி தமிழ் திரையுல வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு திரைப்படங்களை மக்கள் பார்த்து ரசிக்கும் வண்ணம் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றுள்ளது.
இதன் முதல்படியாக மூவி டு மொபைல் (MTM) என்ற பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளிவந்த யாஷிகா ஆனந்த், அசோக், சத்யன், சேஷு, வாவிக்ரம், மாறன், அம்பானி சங்கர், பயில்வான் ரங்கநாதன், ஆகியோர் நடித்த ரங்கா இயக்கிய, சாரதிராஜா தயாரித்த, திரைப்படம் வரும் ஜூலை 13-ம் தேதி மொபைல் போனில் நேரடியாக ரீலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ரூ.30 டிக்கெட் கட்டணம் செலுத்தி பார்க்கலாம். அதற்கான செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சௌந்தரபாண்டியன், என்.விஜயமுரளி, விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன், கில்ட் தலைவர் ஜாகுவார் தங்கம், நடிகர் இமான் அண்ணாச்சி, இதன் தமிழ்நாடு பாண்டிச்சேரி விநியோகஸ்தர் கோவிந்தராஜ், சின்னத்திரை இயக்குனர் சங்க தலைவர் தளபதி, இயக்குனரும் நடிகருமான சி.ரங்கநாதன், தயாரிப்பாளர் தங்கம் சேகர், MTM-இயக்குனர்கள் விஜயசேகரன், தயானந்தன், உட்பட ஏராளமான தயாரிப்பாளர்களும் திரையுலகை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த செயலி வாயிலாக மாதம் தோறும் இரண்டு திரைப்படங்கள் மொபைல் திரையரங்கில் பார்க்கலாம் என மேடையில் பேசியவர்கள் கூறினார்கள்.
Also Read –