தமிழ் சினிமால எந்தப் படம் வந்தாலும் ‘ப்ளூ சட்டை மாறன்’ என்ன சொல்லியிருக்காருப்பா! அப்டினுதான், சினிமா செலிபிரிட்டிகள்ல இருந்து கடைக்கோடில இருக்குற சினிமா ரசிகன் வரைக்கும் எல்லாருமே அவர் விமர்சனத்தை தவறாமல் பார்ப்பாங்க. மேக்ஸிமம் எல்லாப் படத்துக்கும் நெகட்டிவ் ரிவியூதான் கொடுப்பாரு, ப்ளூ சட்டை மாறன். எவ்வளவு பெரிய நடிகர்களோட படம் வந்தாலும் அதை வைச்சு செய்து தக் லைஃப் மொமண்ட கிரியேட் பண்ணிடுவாரு. இதுவரைக்கும் என்னலாம் தக்லைஃப் சம்பவங்களை ப்ளூ சட்டை மாறன் பண்ணியிருக்காரு? முதல்ல எப்படி அவர் விமர்சனத்துக்குள்ள வந்தாரு? எப்பவும் அவர் ப்ளூ சட்டை போடுறதுக்கு காரணம் என்ன? எப்பப்பாரு நெகட்டிவ் ரிவியூஸ் கொடுக்குறாரே, அதுக்கு காரணம் தெரியுமா? கே.எஸ்.ரவிகுமார்கிட்ட இருந்து ஒரு விஷயத்தை ப்ளூ சட்டை மாறன் தூக்கிட்டு வந்துட்டாரு. அது என்ன? இந்த வீடியோல அதையெல்லாம் பத்திதான் தெரிஞ்சுக்கப்போறோம்.
மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர்தான், ப்ளூ சட்டை மாறன். ஆனால், படிச்சு வளர்ந்ததுலாம் சென்னை, புதுப்பேட்டைலதான். எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்காரு. படிப்பு அவருக்கு சுத்தமா மண்டைல ஏறல. அதனால, அதோட ஸ்கூல் போறத நிறுத்திட்டாரு. அப்புறம் அவங்க அப்பா, ஃபிலிம் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனில வேலைக்கு மாறனை அனுப்பிருக்காரு. ஒரு 15 வருஷம் அந்த ஃபில்டுலதான் வேலை செய்தாரு. ஒரு கட்டத்துக்கு அப்புறம் நிறைய கார்ப்பரேட் கம்பெனிகள் வர ஆரம்பிச்சிருக்கு. தொழில் சரியா இல்லைனு அதுல இருந்து வெளிய வந்துருக்காரு. ஆனால், சினிமாலதான் இருக்கணும்னு நினைச்சிருக்காரு. அதனால, புரொடக்ஷன் மேனேஜரா இருக்கலாம்னு முடிவு பண்ணி, அதுல சில வருஷம் வேலை பார்த்துருக்காரு. அதுவும் அவருக்கு சரியா வொர்க் அவுட் ஆகலை. அந்த நேரத்துல மாறனுக்கு நெருக்கமான ரெண்டு பேர், “சினிமாலயே இருக்கீங்க. சினிமா சம்பந்தமா எதாவது பிஸினஸ் பண்ணுவோம்”னு சொல்லியிருக்காங்க.
பொதுவா சினிமால பணம் போட்டா பணம் போய்டும். அதனால, பணம் போடாம எதாவது தொழில் பண்ணலாம்னு மாறன் அவங்க டீம்கூட சேர்ந்து டிஸ்கஸ் பண்ணியிருக்காரு. முதல்ல ஒரு வெப்ஸைட் ஸ்டார்ட் பண்னியிருக்காரு. அதுல சினிமா சம்பந்தமான நியூஸ்லாம் போட்டுட்டு இருந்துருக்காரு. அப்புறம், யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம்னு அவங்க டீம் சொல்லியிருக்காங்க. அப்போதான் மாறன், “யூடியூப்னா என்ன?”னு கேட்ருக்காரு. உடனே அவரோட டீம், “வெளிநாட்டுலயெல்லாம் அது ரொம்ப ஃபேமஸ். சினிமா மேக்கிங் வீடியோ. படத்தோட ரிவியூ வீடியோ எல்லாமே அதுல போடுறாங்க. அதேமாதிரி நாமளும் பண்ணுவோம்” அப்டினு சொல்லியிருக்காங்க. உடனே, ஒரு ஆஃபீஸ், கிரீன் மேட் ஸ்டுடியோ, கேமரா எல்லாம் வாங்கி ரெடி பண்ணியிருக்காங்க. மாறன், வி.ஜே ஆனதே ஒரு ஆக்ஸிடண்ட் அப்டினு சொல்லலாம்.
மாறன், சினிமால ரொம்ப வருஷமா இருக்குறதால் நிறைய ஆங்கர் பண்றவங்களைத் தெரியும். அதனால, அவங்களை பேச வைக்கலாம்னுதான் முதல்ல முடிவு பண்ணியிருக்காரு. நிறைய பேர் வருவாங்களா, வாய்ஸ் டெஸ்ட் எடுப்பாங்களாம், கன்டென்ட் கொடுத்து பேச வைப்பாராம், ஆனால், கன்டென்ட் பார்த்துட்டு ஓடி போய்டுவாங்களாம். இப்படியே ஆறு மாசம் போய்ருக்கு. சரி, கடைசில நம்ம டீம்ல இருந்து யாராவது தான் கேமரா முன்னாடி வரணும்னு முடிவு பண்ணியிருக்காங்க. ஆனால், இவங்க டீம்ல இருந்த மத்த 2 பேரும் சாஃப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்ணதால, அவங்க வரமுடியாதுனு சொல்லியிருக்காங்க. வேற வழி இல்லாமல் மாறன் வி.ஜேவா மாறியிருக்காரு. வெள்ளையா இருக்குறவங்கதான் வி.ஜே பண்ணனும் அப்டின்ற கான்செப்டை உடைச்சு, கன்டன்ட்தான் முக்கியம்னு கன்டன்ட் மேல பாரத்தைப் போட்டு வி.ஜே பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்காரு. தமிழ் டாக்கீஸ்னு யூடியூப் சேனலை 2012ல மாறன் ஆரம்பிச்சிருக்காரு.
ஆரம்பத்துல வீட்டுல உள்ளவங்களுக்கே இவர் இப்படிலாம் பண்றாருனு தெரியாதாம். அப்புறம் ஒரு நாள் முகமூடி விமர்சனத்தை அவர் அண்ணன் பையன் பார்த்துட்டு வீட்டுல போட்டு விட்டுட்டாராம். உடனே, எல்லாரும், “எதுக்கு உனக்கு வேண்டாத வேலை. ஏன், இப்படிலாம் பண்ற?”னு கத்திருக்காங்க. சினிமா துறைக்குள்ள இருந்தே பலரும் இதுக்கு எதிரா பேசியிருக்காங்க. “நான் ஒரு விஷயத்தைப் பண்றதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிப்பேன். ஆனால், பண்ணதுக்கு அப்புறம் ஒரு தடவைகூட யோசிக்க மாட்டேன்”னு தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சிட்டாரு. சேனல் நல்லா போகலைனா விட்டர்லாம்னுதான் மாறன் நினைச்சிருக்காரு. ஆனால், மக்கள் நிறைய பேர் இவர் விமர்சனத்துக்கு ஆதரவா பல கமெண்டுகளைப் போட்ருக்காங்க. அதுமட்டுமில்ல, ட்ரோலும் பண்ணியிருக்காங்க. அதனால, சப்ஸ்கிரைபர்ஸ் அதிகமாகி இன்னைக்கு வரைக்கும் சேனல் செமயா வளர்ந்துட்டு இருக்கு.
யூடியூப் ஆரம்பிக்கும்போது இவரோட பேர் யாருக்கும் தெரியாது. அப்போ, சட்டையும் நிறைய கலர்ல போடுவாரு. வாரம் வாரம் படம் வருது. ஒவ்வொரு வாரமும் புதிய சட்டையை போட முடியாது. போட்ட சட்டையை ரிபீட் பண்ணாலும் நல்லாருக்காது அப்டினு யோசிச்சிருக்காரு. சரி, அப்போ யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலர்ல சட்டையை போட்ரலாம்னு அந்த ப்ளூ சட்டையவே போட ஆரம்பிச்சிட்டாரு. பேர் தெரியாததால ப்ளூ சட்டைனு பேரும் வைச்சிட்டாங்க. அப்புறம் பேர் தெரிஞ்சதும் ப்ளூ சட்டை மாறன்னு பிரபலம் ஆயிட்டாரு. ஆரம்பத்துல இருந்தே சினிமால இருக்குறதால படம் எடுக்கணும்ன்றது அவருக்கு ஒரு ஆசை. ஆனால், யார்கிட்டயும் கதை சொன்னது இல்லை. ஒரு கதை ஒருத்தர்கிட்ட சொல்லியிருக்காரு. அந்த கதை ஓகே ஆகி படமாகவும் தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. அதுதான் ‘ஆன்டி இந்தியன்’ படம். அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுச்சு. பெரும்பான்மையான ரசிகர்கள் அந்தப் படத்தை வைச்சு செய்தாங்க. ஆனால், பாரதிராஜா போன்ற பெரிய இயக்குநர்கள் எல்லாருமே பயங்கரமா பாராட்டுனாங்க.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்கூட ஒரு படத்துல ப்ளூ சட்டை மாறன் முன்னாடி வொர்க் பண்ணியிருக்காரு. அவர்கிட்ட இருந்து எடுத்துட்ட விஷயமா ஒண்ணு சொல்லுவாரு. அது என்னனா, “நான் எப்பவும் படம் பண்றதா இருந்தா, முதல்ல ஹீரோவுக்கு அந்த ஸ்கிரிப் புடிச்சுதானு பார்ப்பேன். அப்புறம், புரொடியூஸர்க்கு இந்த பட்ஜெட் கரெக்டா செட் ஆகுதானு பார்ப்பேன். மூணாவதா, எனக்கு அந்தப் படத்துல உடன்பாடு இருக்கானு பார்ப்பேன். அப்போதான் அந்தப் படத்துல வேலை செய்வேன். இல்லைனா, மூணு பேருக்கும் படம் நல்லா போகலைனா மனஸ்தாபம் வரும்”னு ரவிக்குமார் சொன்ன அந்த மேட்டரை மண்டைல ஏத்திட்டு மாறன் வந்துருக்காரு. அதைதான் படம் எடுக்கும்போது இன்னைக்கும் ஃபாலோ பண்றாரு.
“இன்னைக்கு சினிமாக்குள்ள வந்து ஜெயிக்கிறது அப்டின்றது ரொம்பவே கஷ்டமான விஷயம். ஆனால், அதுக்கு வாய்ப்பு கிடைச்சும் பலர் அதை சரியா பயன்படுத்துறது இல்லை. மக்களை முட்டாளாக்க நினைக்கிறாங்க. மக்கள் முட்டாள் இல்லை. மக்கள் ரொம்பவே அறிவாளி. இதனாலதான் நான் படம் மொக்கையா இருந்தா நான் அப்படி விமர்சனம் பண்றேன். எல்லாப் படத்தையும் நான் விமர்சிக்கலை. ரொம்ப மொக்கையா இருக்குற படங்களைதான் நான் விமர்சனம் பண்றேன். குறைந்தபட்சம் படத்துல உண்மைத்தன்மை இருக்கணும்” மாறன் நெகட்டிவ் ரிவியூ சொல்றதுக்கு விளக்கம் கொடுப்பாரு. படத்துக்கு பாஸிட்டிவா விமர்சனம் பண்ணுங்கனு நிறைய பேர் காசுலாம் கொடுக்க வந்துருக்காங்க. ஆனால், கொண்ட கொள்கைல மாறன் உறுதியா இருக்குறதால இன்னைக்கு வரைக்கும் எல்லா விமர்சன வீடியோவையும் நேர்மையாதான் பண்ணியிருக்காராம். “மேற்கு தொடர்ச்சி மலை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, குப்பத்து ராஜா, ஜெய் பீம்” இந்த மாதிரி சின்னப் படங்கள் எல்லாம் மாறனுக்கு ரொம்பவே பிடிச்ச படங்களாம். அதே மாதிரி மலையாள படங்களும் மாறனுக்கு ரொம்பவே புடிக்கும்.
ப்ளூ சட்டை மாறன் முதல் முதல்ல பில்லா 2 படத்துக்குதான் ரிவியூ பண்ணியிருக்காரு. அதுக்கப்புறம் பல வீடியோக்கள்ல தக் லைஃப் சம்பவங்களை மனுஷன் பண்ணியிருக்காரு. எக்ஸாம்பிள்க்கு சில வீடியோகளை சொல்றேன். “இன்னைக்கு நான் இரண்டு படங்களை பார்த்தேன். ஒண்ணு, ஒரு குப்பைக் கதை. இன்னொன்னு, செம. வெளிய ஒருத்தர் கோபமா வந்தாரு. 2 படத்தையும் பத்தி உங்க கருத்து என்ன?னு கேட்டதுக்கு, அவர் சொன்னாரு, “இந்தப் படத்தோட டைட்டிலை அந்தப் படத்துக்கு வைச்சிருக்கணும். அந்தப் படத்தோட டைட்டிலை இதுக்கு வைச்சிருக்கணும்” அப்டினு. பிகில் படம் பத்தின விமர்சனத்துல, “எல்லா படத்துலயும் ஹீரோ நல்ல ரௌடி. நல்ல ரௌடினா ஹீரோ சோத்துக்கு என்ன பண்ணுவான்?” அப்டின்னுவாரு. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் ரிவியூக்கு, “இந்தப் படத்தோட கதையை இதுவரை ஓரளவு சரியாதான் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன். மாத்தி சொல்லியிருந்தாலும் இதை தப்புனுலாம் நீங்க சொல்ல முடியாது. ஏன்னா, கதை டைரக்டருக்கே தெரியுமானு தெரியலை” அப்டின்னுவாரு. ஹைலைட் என்னனா, “படம் விளம்பரத்துக்காக இந்த படத்தோட கதையை சொல்றவங்களுக்கு ஒரு கோடி ரூபாய்னு படக்குழு அறிவிக்கலாம்”னு சொல்லுவாரு. கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
விவேகம் படம் தொடர்பா அவர் பண்ண விமர்சனம் ரொம்பவே சர்ச்சையை கிளப்பிச்சு. “விவேகம் படத்தோட கதையை பத்தி பாத்தோம்னா..” அப்டினு ஆரம்பிப்பாரு. “ஏலேய், நீயும்தான பார்த்த வந்த கதையை சொல்லு”னு தக் லைஃபோடதான் ஆரம்பிப்பாரு. “இப்படி ஒரு படம் எடுத்துட்டு அவங்களே வெக்கம் இல்லாம சுத்துறாங்க”னு அடுத்து ஒரு கவுண்டர் போடிவாரு. ஹீரோயின்ல தொடங்கி வில்லன் வரைக்கும் டோட்டல் டேமேஜ் பண்ணியிருப்பாங்க. புலி படத்துக்கு வேறலெவல்ல விமர்சனம் கொடுத்துருப்பாரு. “படம் எப்படி இருக்குனு கேட்டோம். உள்ள ரசிகர்கள் விசில் அடிச்சு கொண்டாடிட்டு இருக்காங்கனு சொன்னாங்க. அவ்வளவு நல்லா இருக்கானு கேட்டோம். பார்த்தா அஜித் ரசிகர்கள் கொண்டாடிடு இருக்காங்கன்னாங்க” அப்டின்னாரு. “யோவ் வேறலெவல்யா நீ”னு தோணிச்சு. பல மிரட்டல்களைக் கடந்து மாறன் இன்னைக்கு ரிவியூ போடுறாரு. ஆனால், ரிவியூவை கொஞ்சம் டீசன்டா பண்ணா ரொம்ப நல்லாருக்கும்.
மாறன் இந்த விஷயத்தை மாத்திக்கலாம்னு நீங்க நினைக்கிற விஷயம் என்ன?
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/ES_la/register?ref=T7KCZASX