நமஸ்தே ட்ரம்ப்: 2 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பதில்… செலவு இவ்வளவா?!

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவிற்கு தனது மனைவி, மகள் மற்றும் மருமகனுடன் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். குஜராத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது வருகைக்காக மோடி அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மோடி
மோடி

அமெரிக்க அதிபராக 2020-ம் ஆண்டு இருந்த ட்ரம்ப் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தபோது அகமதாபாத், டெல்லி மற்றும் ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு முக்கியமான இடங்களை பார்வையிட்டார். அகமதாபாத்தில் சுமார் 3 மணி நேரம் செலவிட்ட ட்ரம்ப் சாலையின் வழியாக 22 கி.மீ பயணம் செய்து சபர்மதி ஆசிரமம் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். மொத்தமாக இந்தியாவில் சுமார் 36 மணி நேரம் செலவிட்டார். இதற்கு எவ்வளவு செலவானது என்பதும் கொரோனா காலகட்டத்தில் மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியதும் சர்ச்சையானது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

மிஷால் பத்தேனா என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ட்ரம்ப் வருகைக்காக ஒன்றிய அரசு அவர்களின் உணவு, பாதுகாப்பு, தங்குமிடம், விமானம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு மொத்தமாக செலவிட்ட தொகை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார். எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது கேள்விக்கு எந்தவித பதிலையும் ஒன்றிய தகவல் ஆணையம் அளிக்கவில்லை.

மோடி - ட்ரம்ப்
மோடி – ட்ரம்ப்

கொரோனாவைக் காரணமாக வைத்து இந்தத் தகவல் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி மிஷால் பத்தேனாவின் கேள்விக்கு ஒன்றிய தகவல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதன்படி, ட்ரம்பின் வருகைக்காக ஒன்றிய அரசு ரூ.38 லட்சம் செலவிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. 36 மணி நேரத்துக்கு ரூ.38 லட்சம் செலவிடப்பட்டுள்ளதா? எனவும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் என்பது மிகவும் குறைந்த மதிப்பு எனவும் ஒன்றிய அரசு தவறுதலாக கணக்கை கூறுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

Also Read: சீன உளவுக் கப்பல் ‘yuan wang 5’ பற்றி இந்த 6 தகவல்கள் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top