ஒரு பெரிய லெஜெண்ட் இருக்குற இடத்துல யார் என்ன பண்ணாலும் மொத்த வெளிச்சமும் அந்த லெஜெண்டுக்குத்தான போகும். அந்த மாதிரி கண்டுகொள்ளப்படாம போன ஒரு சிங்கர்தான் மனோ. இவர் ஒரிஜினல் பேர் இது கிடையாது. இவருக்கு எப்படி இந்த பேர் வந்ததுனு தெரிஞ்சுக்க முழு வீடியோ பாருங்க.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, பெங்காலி இப்படி 7 மொழிகள்ல 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். ஆந்திரால ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திரால இருக்குற முஸ்லீம்கள் நிறையபேர் நாகூர் தர்காவுக்கு வருவது வழக்கம். குழந்தைகளுக்கு பேர் வைக்கும்போதும் நாகூர்னு சேத்துக்குவாங்க. மனோவோட ஒரிஜினல் பெயர்கூட நாகூர் பாபுதான். இஸ்லாமியக் குடும்பம்னாலும் மனோவோட தாத்தா, அப்பா எல்லாருமே கோயில் திருவிழாக்கள்ல நாதஸ்வரம் வாசிப்பாங்க. சின்ன வயசுல இருந்தே நாடகங்கள்ல நடிக்குறதும் பாடுறதுமா வளர்ந்தாரு மனோ.
ஆரம்பத்துல டிராக் சிங்கரா சினிமாவுக்குள்ள வர்றாரு மனோ. அதாவது ஒரு பாட்டு உருவானதும் இவங்களை வச்சி ரெக்கார்டு பண்ணிடுவாங்க. அப்பறம் எஸ்.பி.பியோ யேசுதாஸோ வந்து அதைக் கேட்டுட்டு பாடி ரெக்கார்டு பண்ணுவாங்க. அவங்க வாய்ஸ்ல அந்த பாட்டு ரிலீஸ் ஆகும். இப்படி போயிட்டு இருக்கும்போது 1986-ல இளையராஜாவைச் சந்திச்சு நாகூர் பாபுனு தன்னோட பெயரைச் சொல்லி அறிமுகமாகுறாரு. சினிமால ஏற்கனவே நாகூர் ஹனிபா பிரபலமா இருந்ததால உனக்கு வேற பேரு வைக்கலாம் மனோ ஓகேவானு இளையராஜா கேட்கிறார். எதுவானாலும் ஓக்கேனு மனோ சொல்ல பாடகர் மனோ உருவாகுறாரு. பூவிலி வாசலிலே படத்தோட டைட்டில் சாங்கான ‘அண்ணே அண்ணே’ பாடல் மூலமா அறிமுகமாகுறாரு.
இரண்டாவதா இவர் பாடின பாட்டு இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போனது அதுதான் வேலைக்காரன் படத்துல, ‘வேலை இல்லாதவன்தான். இந்தப் பாட்டை பாடும்போது இது ரஜினிக்காகத் தான் பாடுறோம்னு முதல்ல மனோவுக்குத் தெரியாதாம். தெரிஞ்சதும் சூப்பர் ஸ்டாருக்கு பாடுறோமானு ரொம்பவே உற்சாகமாகிருக்காரு. தொடர்ந்து ரஜினிக்கு நிறைய பாடல்கள் பாடி எஸ்.பி.பிக்கு அடுத்தபடியா ரஜினியோட ஆஸ்தான பின்னணி பாடகரா வந்தாரு. அன்னைக்கு தொடங்கி வீரால மலைக்கோவில் வாசலிலே, உழைப்பாளில ஒரு மைனா மைனாக்குருவி, ராஜாதி ராஜால மலையாளக் கரையோரம் இப்படி கடைசியா லிங்கால மோனா கேசோலினா வரைக்கும் தொடர்ந்தது இந்தக் காம்போ.
இவருடைய குரல் எஸ்.பி.பி குரல் மாதிரியே இருப்பதுதான் இவருடைய ப்ளஸ் மைனஸ் ரெண்டுமே. எஸ்.பி.பியால் பாட முடியாத நேரங்களில் அந்தப் பாடல் இவருக்கு போவதும், இவர் பாடிய பல பாடல்களை எஸ்.பி.பி பாடியதாக நினைப்பதும் சகஜம். அதே நேரம் எஸ்.பி.பியும் இவரும் அண்ணன் தம்பியைப் போல பழகி வந்ததை சூப்பர் சிங்கரில் நாம் நேரடியாக பார்த்திருப்போம். மனோவின் திருமணத்தை நடத்தி வைத்தது எஸ்.பி.பிதான். அந்த அளவிற்கு இவர்களுக்குள் நெருக்கம் இருந்தது.
பாடலின் தன்மைக்கு ஏற்றார்போல குரலை மாற்றிப் பாடுவதில் ஜித்து ஜில்லாடி மனோ. கவ்பாய் ஸ்டைலில் முக்காலா முக்காபுலா பாடுறது, கவுண்டமணி குரலில் அழகிய லைலா, கர்ணா படத்தில் ஏ சபா ஏ சபா, சூரசம்ஹாரம் படத்தில் வேதாளம் வந்து, தில்லானா தில்லானா இப்படி விதவிதமா குரலை மாத்திப் பாடுவார். எஸ்.பி.பி போலவே எந்த ஹீரோவுக்கு பாடுறோமோ அவங்களுக்கு ஏத்த மாதிரியான குரலில் பாடுவார். கமலுக்கு ஒரு மாதிரி குரலிலும் ராமராஜனுக்கு ஒரு மாதிரியான குரலிலும் பாடுவார். சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கமலுடன் இணைந்து சிங்காரவேலன் படத்தில் நடித்திருப்பார். ரஜினியின் நிறைய படங்களுக்கு தெலுங்கில் டப்பிங்கும் பேசியிருக்கிறார்.