கலையரசன் தான் நடிச்ச பெரும்பாலாம படங்கள்ல சின்ன கேரக்டர்கள்லதான் வருவாரு. ஆனால், அந்த கேரக்டர்கள் எல்லாமே செமயா பேசப்படும். ஆரம்பத்துல சோஷியல் மீடியாலலாம் “2nd Half தாண்டுவ நீ”னு அவரை பயங்கரமா கலாய்ப்பாங்க. அது அப்படியே மாறி, இன்னைக்கு கலையரசன் ஸ்கிரீன்ல வந்தாலே ஏதோ தரமான சம்பவம் பண்ணப்போறாருனு தோணும். அவர் பண்ண பெஸ்ட் கேரக்டர்கள் என்னென்ன? மிஷ்கினை, கலையரசன் முதல் தடவை பார்க்கும்போது செம ஃபன்னான ஒரு சம்பவம் நடந்தது. அது என்ன? சினிமாக்குள்ள வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தாரு? இப்படி அவரைப் பத்தின இன்ட்ரஸ்டிங்கான விஷயங்களைதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

இன்னைக்கு வரைக்கும் நடிகர் கலையரசன்னு சொன்னா நிறைய பேருக்கு தெரியாது. ஆனால், மெட்ராஸ் அன்பு-னு சொன்னா ‘ஓ அவரா’ அப்டினு டக்னு சொல்லுவாங்க. அவரோட பெயரே அன்புனுதான் நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு மெட்ராஸ் படம் மக்கள் மத்தில அவரை பிரபலம் ஆக்கிச்சு. அவரோட வாழ்க்கையைவே மாத்திச்சு. அட்டக்கத்தில சின்ன கேரக்டர்ல நடிச்சதுக்கு அப்புறம், மெட்ராஸ் படத்துக்கு ரஞ்சித் அவரை கூப்பிட்டு அன்பு, விஜி ரெண்டு கேரக்டருக்கும் ஸ்கீன் டெஸ்ட் எடுத்துருக்காரு. கடைசில அன்பு கேரக்டர் கொடுத்துருக்காரு. படம் ரிலீஸ் ஆனப்பிறகு ஆல்பர்ட் தியேட்டருக்கு படம் பார்க்க போய்ருக்காரு. அங்க ஒரு பெரிய ஹீரோக்கு பௌன்ஸர்ஸ் பாதுகாப்பு கொடுக்குற மாதிரி இவருக்கு கொடுத்துருக்காங்க.
அன்பு அண்ணா, ஆட்டோகிராஃப் கொடுங்க, செல்ஃபி கொடுங்க-னு கேட்ருக்காங்க. அங்க இருந்த மக்கள் எல்லாரும் இவரைப் பார்த்து ‘அன்பு அண்ணா… அன்பு அண்ணா’னு கத்தியிருக்காங்க. இதெல்லாம் பார்த்து ரொம்பவே எமோஷனலாயிருக்காரு. அவரால மறக்க முடியாத ஒரு சம்பவம்னா, ஒருநாள் தூய்மைப் பணியாளர்கள் அவர் வீட்டுக்கு முன்னாடி கிளீன் பண்ணிட்டு இருந்துருக்காங்க. அப்போ, அங்க வேலை பார்த்துட்டு இருந்து ஒரு அக்கா இவரைப் பார்த்து, “அய்யோ… நம்ம வீட்டுப் புள்ள உன்னைப் போய் கொன்னுட்டாங்களேப்பா”னு பயங்கரமா அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். அவங்களை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் சமாதானப்படுத்தி அனுப்பி வைச்சிருக்காரு. அந்த அளவுக்கு அந்த கேரக்டர் எமோஷனால மக்கள் மத்தியில கனெக்ட் ஆகியிருக்கு.

சினிமாக்குள்ள போய் நடிகனாகனும்றதுதான் கலையரசனோட கனவாவே இருந்துச்சு. அதுக்காக நிறைய வாய்ப்புகளை ஆரம்பத்துல இருந்தே தேடிகிட்டு இருந்துருக்காரு. படிக்கும்போது கனா காணும் காலங்கள் சீரியல்ல நடிக்க ட்ரை பண்னியிருக்காரு அது நடக்கல. படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போகணும் அப்டின்ற சிச்சுவேஷனால ஐ.டி கம்பெனில ஜாயின் பண்ணி வேலை பார்த்துட்டு இருந்துருக்காரு. அதே நேரத்துல சினிமாக்கான வாய்ப்புகளையும் தேடிட்டு இருந்துருக்காரு. அப்போ, நண்பர் ஒருத்தர் மூலமா மிஷ்கின் கான்டாக்ட் கிடைச்சிருக்கு. முதல் நாள் ஆஃபிஸ் போய்ருக்காரு. “மிஷ்கின் யார் நீ?”னு வழக்கமா கேக்குற மாதிரி கேட்ருக்காரு. உடனே, கலையரசன் “உங்களை சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்” அப்டினு சொல்லியிருக்காரு. “பார்த்துட்டேல கிளம்பு”னு மிஷ்கின் கலாய்ச்சு விட்ருக்காரு. திரும்பவும் ஒரு நாள் ஆஃபிஸ் போய்ருக்காரு. “உனக்கு என்ன வேணும்?”னு மிஷ்கின் கேட்டுட்டு கூப்பிட்டு உட்கார வைச்சு பேசியிருக்காரு. அப்புறம் நந்தலாலா படத்துல சின்ன கேரக்டர் ஒண்ணையும் கொடுத்துருக்காரு. ஸ்கிரீன்ல கலையரசன் சினிமா பயணம் தொடங்குனது இங்கதான். ஆனால், அதுக்கு முன்னாடியே அர்ஜூனன் காதலி அப்டினு ஒரு படத்துல நடிச்சாரு. அந்தப் படம் ரிலீஸ் ஆகலை.
நந்தலாலா, அட்டக்கத்தி, முகமூடி, மதயானைக் கூட்டம்-னு பல படங்கள்ல குட்டி குட்டி கேரக்டர் பண்னியிருந்தாலும் மெட்ராஸ் அவரோட பெஞ்ச மார்ட்க். மெட்ராஸ் படத்துல அன்பு ரொமான்ஸ் சீன் பார்த்துட்டு அவர் மனைவி ரியாக்ஷன் என்னவா இருந்துச்சு? வெயிட் பண்ணுங்க சொல்றேன்.
முதல் படம் ரிலீஸ் ஆகலை. அடுத்தடுத்து சின்ன சின்ன ரோல்கள். இப்படிலாம் இருக்கும்போது அவரோட ஃபேமில எல்லாரும் ‘என்ன இவன் இப்படியே போய்டுவானோ’னு பயந்துட்டாங்களாம். அப்போதான். மெட்ராஸ் படம் வந்து ‘சரி, என்னமோ உருப்படியா பண்றான்’னு குடும்பத்துல உள்ளவங்க நினைச்சிருக்காங்க. அப்புறம், ரொம்ப நாள் சரியான கேரக்டர்கள் இவருக்கு கிடைக்கலைனுதான் நினைக்கிறேன். ஆனால், வெரைட்டியான கேரக்டர்கள் பண்ணாரு. டார்லிங், உறுமீன், ராஜா மந்திரி, கபாலி, அதே கண்கள், எய்தவன், உரு, தானா சேர்ந்த கூட்டம், காலக்கூத்து, ஐரா, ஜகமே தந்திரம் இப்படி பல கேரக்டர்கள் நடிச்சாரு. இந்த கேரக்டர்கள் நிறைய சரியா வொர்க் அவுட் ஆகலைனே சொல்லலாம். ஆனால், பெர்ஃபாமரா ஒவ்வொரு கேரக்டரையுமே பின்னியிருப்பாரு. அப்புறம் முக்கியமான ஒரு படம் ‘சார்பட்டா பரம்பரை’.

சார்பட்டா பரம்பரைல, ‘நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா?’னு கேக்குற மாதிரியான ஒரு கேரக்டர்தான். ஆனால், ஒரு எதார்த்தமான கேரக்டர். அதை ரொம்பவே அழகா ஹேண்டில் பண்ணியிருப்பாரு. படத்தோட இண்டர்வெல் சீனுக்கு அப்புறமும் இவர் வருவாருனு எல்லாத்தையும் நம்ப வைச்சது இந்தப் படத்துலதான். இந்தப் படத்தோட பிரிவியூ பார்த்துட்டு இருக்கும்போது அவங்களுக்குள்ளயே கலாய்ச்சாங்களாம். என்னனா, படத்துல கொஞ்சம் நேரம் ஆள காணோம்னு சொன்னதும் “முன்னாடி ஒரு ஃபௌட் சீன் நடந்துச்சுல. அதுல அவரை கொன்னுட்டாங்கப்பா”னு சொல்லி சிரிச்சாங்களாம். அது மீம்ஸா வந்ததை நினைச்சு ரொம்பவே சந்தோஷமும்பட்டாராம். ஒரு ஸ்பெஷல் என்னானா, நிஜமாவே அவருக்கு ஓரளவுக்கு பாக்ஸிங் தெரியுமாம்.
‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் கலையரசன் வாழ்க்கைல இன்னொரு பெஞ்ச் மார்க்னு சொல்லலாம். ஏன்னா, அந்தப் படத்துல துஷாராவுக்கு அடுத்து எல்லாரையும் கவனிக்க வைச்சது கலையரசன்தான். பொதுவான ஒரு புத்தியை வெளிப்படுத்துற கேரக்டர்தான் அர்ஜூன். அதைப் புரிஞ்சிக்கிட்டு வெளிப்படுத்துறது ரொம்ப சவாலான விஷயம். அதை அழகா உள்வாங்கி பண்ணியிருப்பாரு. சரக்கடிச்சிட்டு சண்டை போடுற சீன், ஹோட்டல்ல டிரெஸ் ரிலேட்டடா போகுற உரையாடல், வீட்டுல அம்மாக்கூட நடக்குற எமோஷனல் பிளாக் மெய்ல் சீன் எல்லாமே செமயா இருக்கு. இந்தப் படம் முழுக்கவே காதல் பத்தின ஒரு உரையாடல்தான். பா.ரஞ்சித்கிட்ட இருந்து கலையரசன் அதிகமா திட்டு வாங்குறதும் இந்த காதல் காட்சிகள் ஷூட் போகும் போதுதானாம்.

மெட்ராஸ் படத்துல ரொமான்ஸ் சீனுக்குதான் அதிகமா டேக் வாங்குனாராம். இன்னைக்கும் பா.ரஞ்சித் கலைக்கிட்ட சொல்லுவாராம் “மெட்ராஸ்ல ரொமான்ஸ் சீன் இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம். கேவலமா நடிச்சிருந்த. அதுவே மக்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இன்னும் நீ நல்லா நடிச்சிருந்தா இன்னும் கொண்டாடிருப்பாங்க” அப்டினு. மெட்ராஸ் படம் பார்த்துட்டு இருக்கும்போது, ரொமான்ஸ் சீன் வந்தப்போ தியேட்டர்ல திடீர்னு அழுகை சவுண்ட் வந்துச்சாம். யாருனு பார்த்தா கலையரசனோட மனைவியாம். என்ன, இப்படிலாம் நடிச்சிருக்கீங்கனு அழுதுட்டாங்களாம். அப்புறம் மனைவிகிட்ட இதெல்லாம் நடிப்புதான்னு பேசி எடுத்து சமாதானப்படுத்துனாராம்.
கலையரசனுக்கு சின்ன வயசுல இருந்து ஒரு கனவு இருந்துச்சு. அவரு ஒரு அத்லெட். அதனால, இந்தியா சார்பா விளையாடி ஒலிம்பிக்ஸ்லலாம் கோல்ட் வாங்கணும்னு நினைச்சிருக்காரு. ஸ்கூல்ல யாராவது கேட்டா ஒலிம்பிக்ல கோல்ட் வாங்கணும்னுதான் சொல்லுவாராம். அது சம்பந்தமா கதைலாம்கூட எழுதி வைச்சிருக்காராம். ஒருவேளை அத்லெட் ஆகியிருந்தா கலையுலகம் ஒரு தரமான நடிகரை இழந்துருக்கும்.
கலையரசன் நடிச்சதுல உங்களோட ஃபேவரைட் கேரக்டர் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!