தனுஷோட the gray man படத்தில் அவரோட மல்லுக்கட்டிய அழகுப் புயல், No Time to Die படத்தில் ஜேம்ஸ் பாண்டுக்கு சமமா மிரட்டல் அடி அடிச்ச அடாவடிக்காரி, ஒரு காலத்தில் உலகத்தையே கட்டிப்போட்ட மர்லின் மன்றோவா, அந்த புகழ்பெற்ற மச்சத்தோடும், காற்றில் அலைபாயும் அந்தக் குட்டைப்பாவடையோடும், மர்லின் மறைத்துவைத்திருந்த அந்த முகத்தோடும் Blonde ஆக வரும் அனா டி அர்மாஸ் பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.
கிரேக்க புராணக்கதைகளில் வரும் அழகுக்கான தேவதையிடம் கொஞ்சம் அழகைக் கடண் வாங்கி ஒரு பெண்ணை உருவாக்கி, மின்னலுக்கான தேவனிடமிருந்து ஆயிரக்கணக்கில் மின்னல் கீற்றுகளை வாங்கி அந்தப் பெண்ணின் கண்களைச் செய்து, காதலுக்கான தேவதையிடம் இருந்து கொஞ்சம் அன்பைப் பெற்று அவளுடைய புன்னகையை உருவாக்கி…. ஏய்… போதும் போதும் நிறுத்து… சுருக்கமா சொல்லுன்றீங்களா… இதையெல்லாம் சேர்த்துச் செஞ்சா ஒரு பெண் வந்தா எப்படி இருக்கும்…? அந்தப் பெண்தான் Ana De Armas.
இவ்ளோ கூவுறீயே, யார்டா அது அனா டீ அர்மஸ்னு யோசிக்குறீங்களா? நம்ம தனுஷ் போய் ஹாலிவுட்ல நடிச்ச The Grayman படத்தில், தனுஷோட ஒரு பெண் சண்டை போடுவாங்கல அவங்கதான் அனா டீ அர்மாஸ். கடைசியா வந்த ஜேம்ஸ் பாண்ட் படமான No Time to Die படத்திலும் ஜேம்ஸ் பாண்டுக்கு இணையா அதிரடி சண்டை காட்சிகளில் மிரட்டியதும் இந்த அழகு ராட்சஷிதான். 50ஸ் கிட்ஸ்களை ஒரு காலத்துல தன் அழகால் கட்டிப் போட்ட மர்லின் மன்றோ 2K கிட்ஸ்களையும் மயக்கப் போவது அனா டீ அர்மாஸ் மூலமாகத்தான். அந்த மர்லின் மன்றோவின் புகழ்பெற்ற மச்சத்துடனும், காற்றில் அலைந்தாடும் குட்டைப்பாவடையோடும், மறைத்து வைக்கப்பட்டிந்த மர்லினின் இன்னொரு முகத்துடனும் அனா டீ அர்மாஸ், மர்லினாக அவதரிக்கப் போகிறார்.
ஒரு காலத்தில் ஸ்பெயினிலிருந்து கப்பலேறிப் போன ஆட்சியாளர்களின் அதிகாரத்துக்கு லத்தீன் அமெரிக்காவே அடிமையாகிக் கிடந்தது. லத்தின் அமெரிக்காவின் க்யூபாவிலிருந்து ஸ்பெயினுக்குக் கிளம்பிப் போன அனா டி அர்மாஸ் இன்று உலகம் முழுக்க பலரைக் கட்டிப்போட்ட கதையைத் தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
ஒரு டீனேஜ் பெண்ணாக க்யூபாவில் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். அதன் மூலம் அவர் புகழ் ஸ்பெயின் வரை பரவ, க்யூபாவிலிருந்து ஸ்பெயினுக்குக் கிளம்பிப் போன பிறகு சில குறும்படங்களிலும் சில முழுநீளத்திரைப் படங்களிலும் நடித்தார். நம்ம ஊர் கனா காணூம் காலங்கள் போல ஸ்பெயினில் ஒரு பள்ளிக்கூடத்தின் கதையில் அழகான மாணவியாக அனா தோன்ற ஒட்டுமொத்த ஸ்பெயினே Eres tan hermosa என கொண்டாடியிருக்கிறது. என்னன்னு புரியலையா, அழகைக் கொண்டாட மொழியெல்லாம் தடையா பாஸ்… அவங்க மொழில கொண்டாடியிருக்காங்க விடுங்க. அனாவோட இந்த போட்டோ பாருங்க, நீங்க கொண்டாட மாட்டீங்களா என்ன?
அனாவோட திறமையும் அழகும் அட்லாண்டிக் கடலைக் கடந்து அவரை அமெரிக்காவின் ஹாலிவுட் மலையோரம் கரைசேர்த்தது. இன்னைக்கு ஹாலிவுட்டையே கலக்கும் அனாவுக்கு அமெரிக்காவுக்கு வந்த உடன் ஒரு சிக்கலைச் சந்தித்தார், அந்த சிக்கலைச் சமாளிக்க பெரும்பாடுபட்டு பல பயிற்சிகள் எடுத்துத்தான் சமாளித்திருக்கிறார். அது என்ன சிக்கலா இருக்கும்னு யோசிங்க, கடைசியா அதற்கான பதிலைப் பார்ப்போம்.
ஹாலிவுட்டில் நுழைந்ததும் துவக்கத்தில் அனா கொஞ்சம் தடுமாறவே செய்தார். முதல் படமே, பிரபலமான இயக்குநர் எலி ரோத், பிரபலமான நடிகர் கியானு ரீவ்ஸ் உடன் என அதகளமாக ஆரம்பித்தாலும் அவருக்குக் கிடைத்தது என்னமோ சின்ன சின்ன வேடங்களிலும் பெரிதாக கவணம் பெறாத படங்களிலுமே நடித்துக்கொண்டிருந்தார். Blade runner 2049 படத்தில் ஒரு ஹாலோகிராம் AI கதாபாத்திரத்தில் அனா நடித்த பிறகுதான் பிரபலமாகத் தொடங்கினார். அதன் பிறகு அவருக்கான பெரிய புகழைப் பெற்றுத்தந்தது The Knivesout படம் தான். அதன் பிறகுதான் அவருக்கென பிரத்தியேக கதாபாத்திரங்களும் புகழும் வந்து சேர்ந்தது.
இந்த வீடியோ முழுக்கவே அனாவின் அழகைப் புகழ்ந்தாலும் கூட, அந்த அழகைத்தாண்டி அவருடைய நடிப்புத் திறமையும் அசாத்தியமானது. Hands of Stone படத்தின் விமர்சனத்தில் புகழ்பெற்ற பல விமர்சகர்களும் குறிப்பிட்டது, “அனாவின் அழகையும், கவர்ச்சியையுமே காட்டும் வேடங்களாகவே வழங்கப்படுகிறதே, இந்தப் பொண்ணுக்குள்ள ஒரு திறமை இருக்கு, அதை வெளிக்கொண்டு வாங்க” என்பதாகவே இருந்தது.
அனாவும் அதைப் புரிந்து வைத்தே இருந்தார். அவருக்குப் பெரிய புகழ் வெளிச்சத்தைத் தந்த The knives out படத்தில் நடிப்பதற்கு முதலில் அனா மறுத்திருக்கிறார். அதற்குக் காரணம் முதலில் அந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் குறித்து அவரிடம் சுருக்கமாக “ஒரு லத்தின் அமெரிக்கப் பெண், அழகான பெண்…” என குறிப்பிட்டிருக்கிறார்கள். அனா இது மட்டுமே இல்லை என அவர் போர்க்கொடி தூக்க, கொஞ்சம் பொறுமா என முழு திரைக்கதையையும் படிக்கக் கொடுத்த பிறகு அவருக்கு அதில் நடிக்க இருக்கும் வாய்ப்பயும் புரிந்துகொண்ட பிறகே நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அனா வெறும் அழகுப் பதுமை மட்டுமே அல்ல. அது அவருக்கே நன்றாகத் தெரியும் என்பதைத் தான் அவருடைய அடுத்தடுத்தப் படங்களும் நமக்குச் சொல்கிறது. 14 வயதிலேயே நடிகையாவதற்காக கியூபாவின் நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து படித்த அழகிய நடிப்பு ராட்சஷி அனா.
அமெரிக்காவுக்கு வந்த புதிதில் அனா சந்தித்த முக்கியப் பிரச்சினை ஆங்கிலம். கியூபாவில் பிறந்த அனாவுக்குத் தெரிந்தது ஸ்பானிஷ் மட்டும் தான், ஸ்பெயினிலும் அவருக்கு ஆங்கிலத்துக்கான தேவை இல்லாமல் இருந்தது. ஆனால், அமெரிக்காவும் ஆங்கிலமும் முதலில் அவருக்கு பிரமிப்பையே தந்தது. அப்போது தன்னிடம் என்ன சொல்கிறார்கள், நடிக்கும் போது என்ன பேசுகிறோம் என்பதே அவருக்குப் புரியாமல் இருந்திருக்கிறது. ஆங்கிலம் கற்க அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார். இன்றளவும் பல பேட்டிகளில் “நான் எதாவது வித்தியாசமாவோ, வில்லங்கமாவோ பேட்டியில் சொன்னால் கோவிச்சுக்காம திரும்ப கேளுங்க…” என்ற ரீதியில் தான் கொஞ்சி கொஞ்சி ஆங்கிலம் பேசுகிறார். அனா டீ அர்மாஸ் தப்பா இங்கிலீஷ் பேசினா இப்போ என்ன குறைஞ்சிடப்போகுது இங்கிலாந்துல பாட்டிமாவே செத்துட்டாங்க போங்க…
அனா டி அர்மாஸோட அழகைப் பார்த்த உடனே உங்களுக்கு எந்த ஒரு பாடல் வரி உங்களுக்குத் தோணுதுன்னு கமெண்ட்ல சொல்லுங்க. “அழகே பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன்…” பாட்டு தான் எனக்குத் தோணுது… என்னமோ போடா பிரம்மா…