கேப்டன், ஆல்ரவுண்டர், ஃபினிஷர்னு பல பட்டங்களோட இருக்க ஹர்மன்ப்ரீத் கவுரை ஏன் இந்திய மகளிர் அணியின் ’தோர்’னு சொல்றோம் தெரியுமா… பஞ்சாப்ல இருக்க ஒரு சின்ன கிராமத்துல இருந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கத்துக்கு அவங்களோட பயணம் எப்படி இருந்துச்சுன்னுதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
பாரம்பரிய சீக்கிய குடும்பம் ஹர்மன்ப்ரீத்தோடது. சின்ன வயசுல இருந்தே தீவிரமான சேவாக் ஃபேன் நம்ம கேப்டன். அப்பா ஹர்மந்தர் சிங் புல்லார் செம ஸ்கிரிட்க். வீட்டுல சாமி படங்கள் வைச்சிருக்க சுவர்கள்ல புளோ அப் மாதிரியான ஸ்டார்களோட போட்டோவை ஒட்ட சம்மதிக்கவே மாட்டாங்க. அப்படியான சூழல்ல ஒரு திருவிழாவுக்குப் போன ஹர்மன்ப்ரீத், சேவாக்கோட பெரிய ஃப்ளோ அப்பைத் தன்னோட சேமிப்புல இருந்து வாங்கிருக்காங்க. தன்னோட ரூம்ல அதை ஒட்ட ஆசைப்பட்ட அவங்க, அதுக்கு அப்பாகிட்ட பெர்மிஷன் கேக்க தைரியம் இல்லாம, பல மாசங்களா தன்னோட பெட்டியிலேயே பாதுகாப்பா வைச்சிருக்காங்க. டெய்லி அந்த ஃப்ளோ அப்பை எடுத்து ஒரு தடவை பார்த்துட்டு யாருக்கும் தெரியாம வைச்சிருவாங்களாம். இந்த விஷயம் அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்சப்ப என்ன ரியாக்ஷன் கொடுத்தாருன்னு தெரியுமா? வீடியோவை முழுசா பாருங்க… அதப்பத்தி சொல்றேன்.
சின்ன வயசுல இருந்தே பொருளாதார ரீதியாக கஷ்டத்துல இருந்த ஹர்மன்ப்ரீத்துக்கு வடக்கு ரயில்வேயில வேலை கிடைக்க ஒரு பிரபலமான கிரிக்கெட் நட்சத்திரம் ரொம்பவே உதவி பண்ணிருக்காரு… அவர் யாரு… அந்த சம்பவத்தப்ப என்ன நடந்துச்சுனு தெரியுமா?
பஞ்சாப் மோகா மாவட்டத்துல இருக்க ஒரு சின்ன கிராமம்தான் இவங்களோட சொந்த ஊர். அப்ப ஹர்மந்தர் சிங் புல்லார் – அம்மா சல்விந்தர் கவுர். சின்ன வயசுலயே கிரிக்கெட்தான் என்பதை முடிவு பண்ண அவங்க, கிரிக்கெட் பிராக்டிஸுக்காக 30 கி.மீ தூரத்துல இருக்க Gian Jyoti School Academy-ல சேர்ந்து படிச்சிருக்காங்க. ஆரம்ப நாட்கள்ல கஷ்டப்பட்ட இவருக்கு கோச் Kamaldish Singh Sodhi நிறைய வகைகள்ல உதவியிருக்கார்.
படு சுட்டியான ஹர்மன்ப்ரீத், ஆரம்ப நாட்கள்ல ஏரியா பையன்களோடு கிரிக்கெட் விளையாடத் தொடங்கிருக்கார். கோபமும் பயங்கரமா வரும். அப்படித்தான் ஒரு மேட்ச் நடந்துட்டு இருந்தப்ப, பக்கத்துல ஃபுட்பால் விளையாடிட்டு இருந்த பாய்ஸ் கேங் இவங்களை டிஸ்டர்ப் பண்ணவே, கையில இருந்த பேட்டால அந்த கேங்ல இருந்த பையனை அடிச்சுட்டாங்களாம். 20-25 பேரோட அவங்க நிக்க, இவங்க டீம் ரொம்பவே கொஞ்ச பேர்தான் இருந்திருக்காங்க. அப்புறம் ஒருவழியா தன்னோட பிரதர் உதவியால அந்த பிரச்னையை சமாளிச்சிருக்காங்க. அதேமாதிரி, ரொம்பவே டிரெடிஷனலா இவங்க குடும்பத்தினர்கிட்ட தன்னோட டாட்டூவை மறைக்க இவங்க பண்ண ஐடியா ஒரு இடத்துலா Bust ஆகியிருக்கு. இடது கை பின்புற மணிக்கட்டில் தன்னோட அம்மாவுக்காக இவங்க டாட்டூ போட்டிருப்பாங்க. அந்த டாட்டூ போட்ட ஆரம்ப நாட்கள்ல, அதை மறைக்குறதுக்காக தன்னோட கைல பிளாஸ்டர் போட்டு, அடிபட்டிருக்கதா சொல்லி சமாளிச்சிருக்காங்க. ஒரு நாள் ப்ரண்ட்ஸ் எல்லாரும் வீட்டுக்கு வந்திருந்தப்ப, பிளாஸ்டர் இல்லாம சாப்பாட்டு டேபிளுக்குப் போயிட்டாங்களாம். அங்க அப்பா, அம்மா முன்னாடியே ப்ரண்ட்ஸ் அந்த டாட்டூ பத்தி கேக்கவும், அது Temporary டாட்டூனு சொல்லி சமாளிச்சிருக்காங்க. அப்புறம் சில நாட்களுக்குப் பிறகு அம்மாகிட்ட உண்மையைச் சொல்லி அப்பாலஜி கேட்டிருக்காங்க. இதேமாதிரிதான் முதல்முறையா முடியை ஷார்டா வெட்டும்போதும் ஒரு ஜாலி கலாட்டாவே அவங்க வீட்ல நடந்திருக்கு.
தொடக்கத்துல மீடியம் ஃபேஸ் பௌலரா இருந்த ஹர்மனுக்கு, அதைவிட பேட்டிங்தான் பெருசா கைகொடுத்திருக்கு. 2009-ல இவங்க முதன்முதலா அறிமுகமானதே பாகிஸ்தானுக்கு எதிரான ஒன்-டே மேட்ச்லதான். அந்த மேட்ச்ல 4 ஓவர் போட்டு 10 ரன்கள் விட்டுக்கொடுத்த இவங்க, இரண்டு கேட்சுகளையும் புடிச்சு அசத்துனாங்க. அதே வருஷம் டி20லயும் அறிமுகமானாங்க.முதல்முறையா இவங்க பேட்டிங் கவனிக்கப்பட்டது, 2010ல இங்கிலாந்து எதிரான மும்பைல நடந்த டி20 மேட்ச்லதான். அந்த மேட்ச்ல இவங்க அடிச்ச Quickfire 33, இந்தியாவோட வெற்றிக்கு முக்கியமான பங்காற்றுச்சு. அதுக்கப்புறம், 2012 ஆசியக் கோப்பைக்கு முன்னாடி கேப்டன் மிதாலி, துணை கேப்டன் ஜூலன் கோஸ்வாமிக்கு காயம் ஏற்படவே, கேப்டன் பொறுப்பை ஏற்றாங்க. அந்த சீரிஸோட ஃபைனல்ல பாகிஸ்தானுக்கு எதிரா வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தை அடிச்சது இந்திய மகளிர் அணி. அதுக்கப்புறம், 2014ல தென்னாப்பிரிக்க டெஸ்ட் மேட்ச்ல 9 விக்கெட் எடுத்து ஒரு பௌலராகவும் ஜொலிச்சாங்க. இவங்களோட பெர்ஃபாமன்ஸ்லயே பெஸ்ட், 2017 வேர்ல்டு கப் செமி ஃபைனல் மேட்ச்தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரா அந்த மேட்ச்ல 113 பந்துகளில் 171 ரன்கள் குவிச்சு மேட்ச் வின்னரா ஜொலிச்சாங்க. அதுவும், கடைசி 121 ரன்களை 51 பந்துகளில் எடுத்து அதிரடி ஆட்டம் ஆடியிருப்பாங்க நம்ம ஹர்மன். 1989 மார்ச் 8-ம் தேதி பிறந்த ஹர்மன்ப்ரீத், 2017-ல தன்னோட 28-வது பிறந்தநாளில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினார். இது மற்றெந்த கேப்டன்களுக்கும் கிடைக்காத பெருமை. அதேபோல், 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர், வெளிநாட்டு கிரிக்கெட் லீக்கில் விளையாடிய முதல் இந்தியர்ங்குற பெருமையும் ஹர்மன்கிட்டதான் இருக்கு. தன்னோட idol சேவாக் போலவே, Hard Hitter. இவங்களோட டீலிங் பெரும்பாலும் பவுண்டரிகள்லயேதான் இருக்கும். இதனாலேயே, இந்திய மகளிர் அணியோட தோர்னு இவங்களைச் சொல்லலாம்.
பொருளாதாரரீதியா கஷ்டப்பட்ட ஹர்மன்ப்ரீத் கவுருக்கு வடக்கு ரயில்வே ஜூனியர் போஸ்டிங் கொடுக்க முன்வந்தாங்க. ஆனா, இந்திய மகளிர் அணி முன்னாள் வீராங்கனையான டயானா எடுல்ஜி இவங்களுக்கு மேற்கு ரயில்வேயில் சீனியர் போஸ்டிங் வாங்கிக் கொடுக்க முயற்சி பண்ணாங்க. ஆனால், அவங்களோட முயற்சி தோல்வியடையவே சச்சினுக்கு இதப்பத்தி சொல்லியிருக்காங்க. அப்போ எம்.பியா இருந்த சச்சின், ஹர்மன்ப்ரீத் கவுருக்காக பரிந்துரை பண்ணி ரயில்வே அமைச்சருக்குக் கடிதம் எழுதவே, டயானா எடுல்ஜி முயற்சியால் அவங்களுக்கு மேற்கு ரயில்வேயில் வேலை கிடைத்திருக்கிறது. இது அவங்க குடும்பத்துக்கு ரொம்பவே உதவியா இருந்துருக்கு.
ஹர்மன்ப்ரீத் கவுரோட இன்னிங்ஸ்கள்ல உங்க ஃபேவரைட் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!