1994 காலக்கட்டம் அது. தியேட்டர்ல உலகநாயகன் படம் ஒண்ணு ரிலீசாகுது. படம் பார்த்துட்டு வெளிவந்த மக்கள் எல்லோரும் கமல் நடிப்பு பத்தி பேசுறாங்க. அதோட இன்னொருத்தர் நடிப்பை பத்தி புகழ்ந்து பேசுறாங்க. அவர்தான் நம்ம ஸ்ரூவ்வ்வ் புகழ் கரண். “யார்யா அந்த பையன், கமலுக்கே டப் கொடுக்குறான். நல்லா நடிச்சிருக்கான்’னு புகழ்ந்தாங்க. கமல் வார்த்தையில டயலாக்க கன்வே பண்ணா, நம்மாளு கண்பார்வையிலயே டயலாக்க கன்வே பண்ணியிருப்பார். இதுதான் இளைஞனா பெரிய திரையில அவரோட முதல்படம்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. அந்த அளவுக்கு நடிப்பை கொடுத்திருப்பார், கரண். நம்மவர் தொடங்கி பல படங்கள் இவர் பண்ணின சம்பவங்கள் ஏராளம். அதைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.
குழந்தை நட்சத்திர அறிமுகம்!
கரணோட நிஜப்பெயர் ரகு கேசவன். குழந்தை நட்சத்திரமாகத்தான் அறிமுகமானார் ரகு. அப்போ இவர் மாஸ்டர் ரகுனு அறிமுகம் ஆனார். முதல்முதலா மலையாளப் படங்கள்லதான் குழந்தை நட்சத்திரமா அறிமுகமானார். ஒரு வருஷத்துல இவரோட நடிப்புல மாசத்துக்கு ஒரு படம் ரிலீசாகின காலக்கட்டம் அது. குழந்தை நட்சத்திரமாவே நம்ம கரண் பீக்லதான் இருந்தார். 1974, 1975னு தொடர்ந்து ரெண்டு வருஷம் கேரள மாநிலத்தோட சிரந்த குழந்தை நட்சத்திர விருதுகள் வாங்கியிருக்கார். குழந்தஹ் நட்சத்திரமா 8 வருஷத்துல அவர் நடிச்ச மொத்த படங்களோட எண்ணிக்கை மட்டும் 42. அப்போ குழந்த நட்சத்திரமா அவருக்கு மார்க்கெட் உச்சத்துல இருந்ததுனு கூட சொல்லலாம்.
பெஸ்ட் வில்லன்!
காலங்கள் ஓடி, வயசும் கூடிச்சு. வாலிபப் பருவத்துல மறுபடியும் நடிக்க வந்தார். அண்ணாமலைல சின்ன கேரெக்டர் ஒண்ணு பண்ணி, தமிழ்ல முதன்முதலா வில்லன் கேரெக்டர்ல நடிக்கிறார். அதுவும் எதிர்ல கமல். முதல் படத்துலயே கமல் படத்துல வாய்ப்பு, அவருக்கே வில்லன். எதிர்ல கமல் முன்னாடி நடிக்குறப்போ, சில நடிகர்களுக்கே உதறல் இருக்கும். அதுவும் இளைஞனா முதல் பெரிய படம், கரணோட மனநிலை எப்படி இருக்கும். ஷூட்டிங் ஆரம்பிக்குது முதல் நாள் கமல்கூட மல்லுக்கு நிற்க வேண்டிய காட்சி. முதல்முதலா கமலை பிரேம்ல எதிர்கொள்றார், கரண். தான் பேச வேண்டிய வசனங்களை கமல் பேசுறார், அடுத்ததா கரணோட டர்ன் வருது. கண்பார்வையில அனல் தெரிக் ஒரே டேக்ல டயலாக் பேசுறார். ஷாட் ஓகே ஆகுது. இதை நல்லா கூர்ந்து கவனிச்சா ஒரு விஷயம் தெரியும். ‘கமலா இருந்தாலும் சரி, அது யாரா இருந்தாலும் சரி. நான் பேசுற டயலாக், இது என்னோட நடிப்பு, நான் நடிக்க வந்திருக்கேன், யாருக்கு பயப்படணும்’ங்குர ரேஞ்சுலதான் கரண் நடிச்சிருப்பார். இந்த படத்துலதான் இவருக்கு கரண்னு பேர் மாற்றப்பட்டது. கரண் நடிப்பைத் தாண்டி, அவரோட ஹேர்ஸ்டைல், ட்ரஸ்ஸிங், ஆட்டிட்யூட்னு ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்தது. கமல் காலேஜ் பையன் கேரெக்டர்க்கு நீங்களே தயாராகிடுங்கனு சொல்ல, தலையில கோடு, டீசர்ட் அண்ட் ஷார்ட்ஸ், தலையில முன்னாடி இருக்குற சுருள்முடினு ஏகப்பட்ட மாற்றங்களை கரணே செய்துகிட்டு போய் கமல்கிட்ட காட்டுறார். கமல் இதுதான்யா வேணும்னு சொல்லிட்டு, இப்படியே நடினு உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினார் கரண்.1990-கள்ல, காதல், நட்பு, காதலையும் நட்பையும் இணைச்சுனு பலபடங்கள் ரிலீசான காலக்கட்டம் அது. நல்ல நண்பனா இருந்தா கலங்க வைப்பார். கெட்ட நண்பனா இருந்தா கலக்கியெடுப்பார். அதுக்கு நம்ம கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஸ்ரூவ் கரணே சாட்சி. இதுபோக காதல் மன்னன் தொடங்கி அடுத்து வந்த பக்தி படங்கள் அனைத்துக்கும் வில்லன் கேரெக்டர் கரண் மட்டும்தான்.
சாயல் இல்லாத நடிப்பு!
நடிப்பிலும் உச்சரிப்பிலும் வேறு எந்த நடிகரின் சாயலும் இல்லாத நடிகர்களை மக்கள் எப்போதுமே கொண்டாடுவது வழக்கம். அப்படித்தான் கரணையும் கொண்டாடினார்கள். கரணோட நடிப்புல வேற எந்த நடிகரோட சாயலையும் பார்க்கவே முடியாது. அந்த கதாபாத்திரத்துக்கு இவர் கொடுக்குறதுதான் நடிப்பு, இவர் போடுறதுதான் எல்லை. மிகை நடிப்புங்குறது இல்லாத நடிகர்கள்ல இவரும் ஒருத்தர். ஸ்கிரீன்ல வலிஞ்சு எந்த சீனும் நடிக்க மாட்டார். அழுகுறது, சிரிக்கிறது, கோவப்படுறதுனு பார்க்க எல்லாமே அசால்ட்டாவே இருக்கும். இப்படித்தான் நம்மவர்ல தொடங்கி உச்சத்துல சிவா வரைக்குமே நடிச்சிருப்பார். படத்தில் கரண் நடிக்கிறார் என கூட்டம் கூடிச்சோ இல்லையோ…. கரண் நடிச்சா சிறப்பா நடிச்சிருப்பார்னு மக்கள் கரண் மேல ஒரு நம்பிக்கையை வச்சிருந்தாங்கனுகூட சொல்லலாம்.
Also Read: சிங்கர் ஹரிஹரன் ஏன் ‘Rare Piece’ தெரியுமா?!
பெஸ்ட் நண்பன்!
‘காதல் கோட்டை’ படத்தில், அஜித்தோட மிக இயல்பான, நாகரிகமான நண்பனா நடிச்சிருப்பார். பலரையும் கவர்ந்தது. ‘காதல் கோட்டை’யில் அஜித், தேவயானி, ஹீராவுக்கு அடுத்து கரண் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. ‘கோகுலத்தில் சீதை’யில அப்பாவித்தனமும் யதார்த்த மனசோட ஆசைப்படற குணமும் கொண்ட, பயந்த சுபாவம் கொண்ட மிடில்கிளாஸ் இளைஞனா நடிப்புல மிரட்டியிருப்பார். முகபாவனைகள்லேயும், வசன உச்சரிப்புலேயும், குரல் தழுதழுப்பிலும் என நடிப்பில் தன் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினார். அதேபோல ‘லவ் டுடே’ படத்துல விஜய் நண்பனா வருவார். படத்தோட ஹீரோ விஜய். அவரை சில நபர்கள் சேர்ந்து அடிச்ச உடனே ஜிம்ல இருக்க கரண்கிட்ட வருவாங்க. பீட்டர்னு கூப்பிட்டதும், தோள்பட்டை ரெண்டையும் உயர்த்திகிட்டு நடந்து வர்ற சீனும், நண்பனை அடிச்சவங்களை அடிக்க போறப்போ விஜய் முதல்ல முந்திகிட்டு போவார், அப்போ அவர் கைய பிடிச்சு நிப்பாட்டிட்டு, கண்லயே நான் இருக்கேன் பார்த்துக்குறேன்ங்குற மாதிரி சைகை ஒண்ணு செய்வார். கிட்டத்தட்ட ஹீரோவுக்கு நிகரான காட்சியாவே அது இருக்கும். அதே மாதிரி க்ளைமேக்ஸ்ல விஜயோட அப்பா இறந்த சடலத்துக்கு கொள்ளி வைக்க ஆள் இருக்காது. அப்போ கரண் சட்டையை கலட்டிட்டு, கழுத்துல போட்டிருக்க சிலுவையும் அத்துபோட்டுட்டு, சடலத்துக்கு கொள்ளி வைக்கிற சீனும் ரொம்பவே எமோசலான நடிப்பைக் கொடுத்திருப்பார், கரண். அதே இயக்குநர் பாலசேகரன் ‘துள்ளித்திரிந்த காலம்’ படத்துல கரணுக்கு வேலை தேடுற கதாபாத்திரம் கொடுத்தார். இங்கதான் இந்தக் கதாபாத்திரத்தை கரண் தன்னைத்தவிர வேற யாரும் பண்ண முடியாதுனு நிரூபிச்சார்.
கரண் ஸ்பெஷாலிட்டி!
கரண்கிட்ட இருக்குற ஸ்பெஷல் கிராமத்து இளைஞனா இருந்தாலும், நகரத்து இளைஞனா இருந்தாலும் அதுக்கு ஏத்தமாதிரி தன் உடல்மொழியை மாத்திக்கிற வித்தை தெரிஞ்சவர். முக்கியமா கண்ணெதிரே தோன்றினாள் படத்துல சிம்ரனோட அண்ணனாவும், பிரசாந்தோட உயிர் நண்பனாவும் அட்டகாசமான ரோல் ஒண்ணு பண்ணியிருப்பார். குறிப்பா க்ளைமேக்ஸ்ல ஹாஸ்பிட்டல் சீன்ல வெளுத்து வாங்கியிருப்பார். ஒரு கதையை உருவாக்குறப்பவே, ‘இதுக்கு ரங்காராவ் தான் நல்லாருக்கும்’, ‘இதுக்கு ரகுவரன் தான் நல்லாருக்கும்’னு டிஸ்கஷன்ல சொல்லி, அதிகமா மெருகேத்துவாங்க. அதேபோல, கதை பண்ணுறப்பவே ‘இந்தக் கேரக்டர் கரண் பண்ணினாத்தான் நல்லாருக்கும்’னு யோசிச்சு பண்ணின படங்களும் இருக்கு. இதுதான் கரண்ங்குற நடிகனோட வெற்றி.
‘திருநெல்வேலி’ படத்தில் பிரபுவுக்கு இணையான கேரக்டர். ‘கண்ணுபடப் போகுதய்யா’ வில் விஜயகாந்துக்கு சமமான கதாபாத்திரம். இப்படியாக நடிப்புல வளர்ந்துப்புகிட்டே இருந்தவருக்கு படங்கள் வரிசையா இருந்துச்சு. கொக்கி, கருப்பசாமி குத்தகைதாரர்னு என படங்கள் வெளியாகி, நாயகனா அவரை இன்னும் ஒருபடி மேல கொண்டுபோச்சு. ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்துல கேரக்டருக்கு வலு சேர்க்குற விதமா, மொத்தப் படத்தையும் தோள்ல சுமந்திருப்பார், கரண். தீ நகர், காத்தவராயன், கனகவேல் காக்க உள்ளிட்ட பல படங்கள் இறங்குமுகமா மாறிச்சு. ஆனா நடிப்புல எங்கயுமே கரண் தோற்கலை. நடிப்பு மெருகேறிக்கிட்டேதான் இருந்தது.
இன்னைக்கும் நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்தால், தனக்கே உரிய பாணியில் இன்றைய காலகட்டத்துக்குத் தகுந்தது மாதிரி, ஸ்டைலாகவும் இயல்பாகவும் தனித்துவமாகவும் நடிச்சுக் கலக்குவார் கரண்.
எனக்கு கரண் நடிப்புல பிடிச்சது கண்ணெதிரே தோன்றினாள் ஷங்கர் கேரக்டர்தான்… உங்களுக்கு என்ன கேரக்டர் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.