தன்னோட தனித்துவமான நடிப்பாலும் மற்றும் முக பாவனையாலும் பிரபலமானவர் நடிகர் முனிஷ்காந்த். இவரது நிஜப்பெயர் ராமதாஸ். நடிக்க வந்த புதுசுல பல படங்கள்ல ஜூனியர் ஆர்டிஸ்டா வேலை பார்த்தவர், காய்கறி மூட்டை தூக்கும் வேலை, தங்க இடம் இல்லாமல் தவிச்சதுனு பல கஷ்டங்களுக்கு இடையில, சின்ன சின்ன குறும்படங்கள்ல நடிச்சு, இன்னைக்கு மிகப்பெரிய நடிகரா வளர்ந்திருக்கார். தன்னோட நிஜப்பெயரான ராமதாஸ்ங்குற பெயரை படத்தோட கேரெக்டருக்காகவே மாத்திட்டார். இவரோட சினிமா பயணத்தைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.
அறிமுகம்!
2002-ம் வருஷம் சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தார், முனிஷ்காந்த். ஆரம்பத்தில் ஆழ்வார், காளை, யுத்தம் செய் உள்ளிட் படங்கள்ல ஜூனியர் ஆர்டிஸ்டா நடிச்சார். அப்போ வடபழனி முருகன் கோவில் வாசல்ல ஒருமாசம் தங்க இடம் இல்லாம படுத்து தூங்கியிருக்கார். இடையே கடல், கடல், சூதுகவ்வும் படங்கள்ல கொஞ்சம் தெரியுற மாதிரி ரோல் கிடைக்க, அடுத்ததாக முண்டாசுப்பட்டி மூலம் எல்லோருக்கும் தெரிந்த பிரபலமானார். அடுத்தடுத்து குலேபகாவலி, வேலைக்காரன், ஜிகர்தண்டா, மாநகரம், மரகத நாணயம், ராட்சசனில் படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துனார். ஆரம்பக் காலக்கட்டங்கள்ல கார்கழுவுறது, கோயம்பேட்டுல காய்கறி மூட்டைத் தூக்குறதுனு சர்வைவலுக்காக பல வேலைகள் பார்த்திருக்கார்.
இயக்குநர் சுதாகொங்கரா கூப்பிட்டு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்னு கொடுக்க, கடைசி நேரத்துல அந்த படத்துல நடிக்க முடியாம போயிட்டார். அது என்ன படம்னு யோசிச்சு சொல்லுங்க அதை வீடியோவோட கடைசியில சொல்றேன்.
வில்லன் டூ காமெடியன்!
ஆரம்பத்தில் 'ரக்டு' பாயாக சினிமாவுக்குள் வர நினைத்தவர் பல ஆபீஸ்கள் ஏறி இறங்கியிருக்கிறார். தான் ஒரு மிரட்டலான வில்லனாக வர வேண்டும் என நினைத்தார், முனிஷ்காந்த். அதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டார். கழுத்து முழுக்க சங்கிலிகளுடன் ஒரு ரவுடி கெட்டப்பிலேயே சுற்ற ஆரம்பித்தார். பார்ப்பவர்கள் எல்லாம் ஏங்க இப்படி இருக்கீங்கனு கேட்டா, நாசர் மாதிரி பெரிய வில்லனா வரணும்ங்குற பதிலையே சொல்லுவாராம். சூதுகவ்வும் படத்துலகூட இவரோட கேரெக்டர் கொஞ்சம் நெகடிவ் ஷேட்லதான் இருக்கும். ஆரம்பத்துல நாளைய இயக்கநர் குறும்படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அந்த நேரத்துல முண்டாசுப்பட்டி படத்தை முதல்முதலா குறும்படமா ராம்குமார் இயக்கினார். அதில் முனிஷ்காந்த் கேரெக்டரில் நடித்தவர், திருப்பூரைச் சேர்ந்த நாடக கலைஞர். அவருக்கு டப்பிங் குரல் முனிஷ்காந்த் கொடுத்திருந்தார். இது பெரிய படமாக தயாரிக்கும்போது திருப்பூர் நாடக கலைஞர் நடிக்காமல் போக, முனிஷ்காந்தை அழைத்திருக்கிறார், ராம்குமார். ஏம்ப்பா நான் வில்லனா நடிக்கணும். நான்லாம் காமெடி பண்ணா ஒத்துக்குவாங்களானு கேட்க, அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்திருக்கிறார். இப்படித்தான் முண்டாசுப்பட்டி படத்துக்குள் முனிஷ்காந்த் வந்தார். ரிக்ஷாவுல கால்மேல கால்போட்டு கொடுத்த எண்ட்ரி சீன்ல இருந்து படம் முடியுற வரைக்கும் படம் முழுக்க காமெடி செய்து அதகளம் செய்திருப்பார். அதிலும் க்ளைமேக்ஸ்ல 'என்ன சாப்பிட வச்சு சாப்பிட வச்சு கெடுத்துட்டீங்கடா'னு முகத்துல காட்டுற ரியாக்ஷன்ல காமெடியின் உச்சம் தொட்டிருப்பார்.
குணச்சித்திர கலைஞன்!
முண்டாசுப்பட்டி வெற்றிக்குப் பின்னால் கொஞ்ச காலம் காமெடியாக வலம் வந்து கொண்டிருந்தார், முனிஷ்காந்த். அவரை குணசித்திரத்திற்கும் சரியாக இருப்பார் என காட்டியது, மாநகரம்தான். தான் ஆரம்பமாகும் காட்சியில் இருந்தே காமெடியாக வந்தாலும், பிகே பாண்டியனுக்கு போன் செய்யும் காட்சியில் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தினார். க்ளைமேக்ஸ் காட்சியிலும், வில்லன் கொடுத்த பணப்பையை ரோட்லயே வச்சிட்டு தூரத்துல முனிஷ்காந்த் நடந்துபோற ஒரு காட்சியில் தன் நடை மற்றும் உடல் பாவனையில் கைதேர்ந்த நடிகராக மாறினார். அடுத்த வருடமே வந்த ராட்சசன் படத்தில் இறந்த தன்மகளை நினைத்து அழும்போதும், தன் மைனைவி வரும்போது நர்மலாக மாறி பேசுவதும் என கண்கலங்கும் நடிப்பைக் கொடுத்திருந்தார், முனிஷ்காந்த்.
அசால்ட்டான உடல்மொழியும், வித்தியாசமான குரலும்!
முனிஷ்காந்தின் முழுமையான பலம் பாடிலாங்வேஜூம், அவரது குரலும் தான். அந்த குரலில் இருக்கும் தனித்துவம்தான் மற்ற நடிகர்கள்ல இருந்து அவரை விலக்கி காட்டிச்சு. கரகரப்பு கலந்த குரலில் கொடுக்கும் ஏற்றமும், இறக்கமும் மூலம் கேரெக்டருக்கு உயிர்கொடுக்கிறார், முனிஷ்காந்த். அதேபோல உடல்மொழியும் இஅவர்து கேரெக்டருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அதை போறபோக்குல அசால்ட்டா பண்றது முனிஷ்காந்தோட பலம்னுகூட சொல்லலாம். இப்போ வந்த சர்தார் வரைக்கும் அவர் காமெடியும், குணச்சித்திரமும் கலந்து கொடுத்துக்கிட்டே வர்றார்.
Also Read - இயக்குநர் ஹரியின் 5 கமர்சியல் பார்முலாக்கள்!
விக்கிபீடியாவால் வந்த சிக்கல்!
இவருக்கு திருமணத்துக்காக ஏற்பாடு நடந்துக்கிட்டிருக்கும்போது இவரது வருங்கால மனைவி இவரது விக்கிப்பீடியாவை செக் பண்ணியிருக்கார். அப்போ முனிஷ்காந்தோட வயசு 56-னு காட்டியிருக்கு. அதனால ரொம்பவே அதிர்ச்சியாகியிருக்கிறார். அவரது மனைவி அதை முனீஷ்காந்திடமே கேட்க, அய்யோ யாரோ தப்பா கிளப்பிவிட்டிருக்காங்கனு சொல்லி ஸ்கூல் டிசியை எடுத்துக் காட்டி 36 வயசுனு சொல்லி சம்மதிக்க மனைவியை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்திருக்கிறார். அதனை யார் மாற்றியது என செக் செய்து பார்த்த முனிஷ்காந்த் விடைகிடைக்காமல் கைவிட்டுவிட்டார்.
சுதா கொங்கரா இயக்கின இறுதிச்சுற்று படத்துல முதமுதலா நாசர் ரோல்ல நடிக்க இருந்தது, முனிஷ்காந்த். சில காரணங்களால அதை அவரால பண்ண முடியலை.
எனக்கு இவர் நடிப்புல பிடிச்சது, முண்டாசுப்பட்டி, மாநகரம்தான். உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.