ராம்ராஜ்

சல்யூட் ராம்ராஜூக்கு சல்யூட் விளம்பரத்துக்குப் பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

சல்யூட் ராம்ராஜூக்கு சல்யூட் விளம்பரம் நம்ம நாஸ்டால்ஜியால எப்பவும் இருக்குற விளம்பரம். இந்த விளம்பரத்தை நல்லா கவனிச்சீங்கன்னா அதுல ஒரு செம்ம மேட்டர் இருக்கு. அது என்னனு பார்க்குறதுக்கு முன்னாடி ராம்ராஜ் அப்படிங்குற பிராண்டை நாம அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். அது எப்படி ஆரம்பிச்சது? வெறும் 15 ரூபா இல்லாததால படிக்க முடியாம மார்க்கெட்டிங் வேலை பார்த்துட்டு இருந்த ஒருத்தருக்கு எப்படி வேட்டி பிசினஸ் தொடங்கணும்னு ஐடியா வந்தது? இளைஞர்கள் மத்தில வேட்டியை பிரபலப்படுத்த ராம்ராஜ் என்னென்னலாம் பண்ணிருக்காங்க அதெல்லாம்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.  

ராம்ராஜ் நிறுவனத்தை ஆரம்பிச்சவர் கே.ஆர் நாகராஜன். இவருக்கு அவினாசி பக்கத்துல சொந்த ஊரு. அப்பா ஒரு விவசாயி. வீட்டுல ரொம்ப கஷ்டம். எந்தளவுக்குனா அந்த காலத்துல எஸ்.எஸ்.எல்.சி படிக்கிறாரு. அதுல டைப் ரைட்டிங் ஒரு சப்ஜெக்ட். அதுல பாஸ் ஆகணும்னா வெளில எதாச்சும் இன்ஸ்டியூட் சேர்ந்துதான்  படிக்கணும். ஸ்கூல்ல சொல்லித்தர மாட்டாங்க. அதுக்கு ஃபீஸ் 15 ரூவா. அது கட்டக்கூட காசு இல்ல. அந்தளவுக்கு வறுமை. எஸ்.எஸ்.எல்.சி முடிக்கிறாரு மத்த எல்லா சப்ஜெக்ட்லயும் ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ். டைப் ரைட்டிங்ல மட்டும் ஃபெயில். சின்ன வயசுல இருந்தே வேலைக்கு போகணும்ங்குறதைவிட வியாபாரம் செய்யணும்ங்குறதுதான் அவருக்கு ஆர்வம். அதுக்கு ஒரு சம்பவத்தை உதாரணமா சொல்லலாம்.

கே.ஆர்.நாகராஜன்
கே.ஆர்.நாகராஜன்

நாகராஜன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்போ அவங்க வீட்டு பக்கத்துல ஒருத்தர் நியூஸ் பேப்பர் ஏஜெண்டா இருக்காரு. இவருக்கு இந்த வேலை நம்மளும் பண்ணலாமேனு ஐடியா வருது. அப்போ பாலமித்ரா அப்படினு குழந்தைகளுக்கு ஒரு மேகசீன் புதுசா தொடங்குறாங்கன்ற செய்தி இவருக்கு தெரிய வருது. அந்த பாலமித்ராவுக்கு இவர் ஒரு கடிதம் எழுதுறாரு. அதுல அவரை பத்தி சொல்லிட்டு இந்த பத்திரிகையோட டிஸ்ட்ரிபியூசன் அவினாசில நான் பண்ணித் தர்றேன். எனக்கு ஒரு 100 பத்திரிகை அனுப்புறீங்களானு கேக்குறாரு. அவங்களும் சரினு 100 பத்திரிகை அனுப்புறாங்க. அதை பக்கத்து ஏரியாக்கள்ல வித்து மாதம் 20 ரூபாய் வரை சம்பாதிக்குறாரு. இப்படி தன்னோட 13 வயசுலயே வியாபாரத்தை தொடங்கிடுறாரு நாகராஜன். எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சு பக்கத்துல இருந்த ஹிந்துஸ்தான் யுனிலிவர் ஏஜென்சில சோப்பு டிஸ்டிரிபியூட் பண்ற வேலை பார்க்குறாரு. அப்பறம் ஏபிடி பார்சல் சர்வீஸ், விஜயலட்சுமி காதி டிரேடர்ஸ்னு மார்க்கெட்டிங் ரெப் வரைக்கும் வளர்றாரு. அடுத்து திருப்பதி காதி டிரேடர்ஸ் அப்படிங்குற நிறுவனத்துல பார்ட்னர்ஷிப்ல வேலை பார்க்குறாரு. இப்படியே 7 வருசம் வேலை பார்க்குறாரு.

காதி நிறுவனங்கள்ல வேலை பார்க்குறப்போதான் நெசவாளர்களோட அறிமுகம் கிடைக்குது நாகராஜனுக்கு. அவங்க படுற கஷ்டங்களையெல்லாம் பார்க்குறாரு. சரியான கூலி இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டம்னு அவங்க நிலைமை இவரை ரொம்ப யோசிக்க வைக்குது. நம்மளே ஒரு நிறுவனத்தை தொடங்கி இவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைக்குறாரு. நமக்குதான் நல்லா மார்க்கெட்டிங் பண்ணத் தெரியுமே இவங்களோட வேட்டியை நல்லா மார்க்கெட்டிங் பண்ணி வேட்டிக்கான டிமாண்டை அதிகரிக்கலாம். இவங்களோட கூலியை அதிகரிக்கலாம்னு நினைக்குறாரு. அப்போ ஒரு மீட்டர் வேட்டிக்கான நெசவுக்கூலி 2 ரூபாயா இருந்தது. இவர் நாலு ரூபா கொடுத்து நெசவாளர்கள்கிட்ட வேட்டி வாங்கிக்குறேன்னு சொல்றாரு. அப்படி செப்டம்பர் 9,1983-வது வருசம் ஆரம்பமானதுதான் ராம்ராஜ் காதி டிரேடர்ஸ். அப்பா பேரு ராமசாமி இவரோட பேரு நாகராஜ் ரெண்டையும் சேர்த்து ராம்ராஜ்னு பேரு வைக்கிறாரு. காதி டிரேடர்ஸா இருந்தது 4 வருசத்துக்கு பிறகு ராம்ராஜ் காட்டன்னு மாறுது. கொஞ்சம் கொஞ்சமா இவங்களோட வேட்டி பிரபலமாகுது. அதுக்கு முக்கியமான காரணம் இவரோட மார்க்கெட்டிங் யுக்திதான். சல்யூட் ராம்ராஜூக்கு சல்யூட் அப்படிங்குற விளம்பரத்தை நம்மால மறக்கவே முடியாது. அந்த விளம்பரத்துக்குப் பின்னால ஒரு சுவாரஸ்யமான கதையும் ஐடியாவும் இருக்கு.

ஒருமுறை சென்னைல நண்பர் வீட்டு திருமண விழாவுக்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்திருக்காரு நாகராஜன். இவரோட வந்த எல்லாரையும் உள்ளே விட்டுட்டாங்க. இவரு மட்டும் வேட்டி கட்டி வந்ததால டிரெஸ் கோட் இல்லைனு உள்ளே விடல. இந்த சம்பவம் அவர் மனசை பாதிக்குது. மறுநாள் ஆபிஸூக்கு வந்து விளம்பர நிறுவனங்களை கூப்பிட்டு ஒரு ஐடியா சொல்றாரு. இதுவரைக்கும் வேட்டியால எனக்கு என்னெல்லாம் அவமானங்கள் வந்ததுதுனு சொல்றேன். அதையெல்லாம் பாசிட்டிவா மாத்தி எடுப்போம். யாரெல்லாம் வேட்டியை இழிவா நினைப்பாங்களோ அவங்கள்லாம் கொண்டாடுற மாதிரி எடுக்கலாம்னு சொல்றாரு. அப்படித்தான் அந்த விளம்பரம் உருவாகுது. ஜெயராம் வேட்டி கட்டிட்டு பென்ஸ் கார்ல வந்து இறங்கும்போது அதே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல சல்யூட் அடிச்சு உள்ளே கூப்பிடுவாங்க. இவரு மீட்டிங் ஹால்ல நுழைஞ்சதும் கோட் சூட் போட்டவங்க எந்திரிச்சு வணக்கம் வைப்பாங்க. அவங்க வீட்டுல சின்ன பிள்ளைங்க ஏன் வேட்டியெல்லாம் கட்டுறீங்கனு கேப்பாங்களாம் அதுக்காக ஜெயராம்க்கு ஒரு குழந்தை பூ கொடுக்கிற மாதிரி வைப்பாரு. காலேஜ் பசங்க சல்யூட் அடிப்பாங்க. கடைசியா யானை சல்யூட் வைக்கும். பொதுவா யானைக்கு வெள்ளைக்கலர் பிடிக்காதுனு கிராமத்துல சொல்வாங்களாம். அதை உடைக்கிற மாதிரிதான் இந்த சீன் வச்சதா சொல்லிருக்காரு.

Also Read – தொடக்கமே அதிரிபுதிரிதான்… செஃப் தாமு-வின் பயணம்

நாகராஜன் காலேஜ்க்கெல்லாம் போய் ஸ்பீச் கொடுக்கும்போது அந்த இளைஞர்கள் நிறைய பேர் சொல்ற விஷயம், எங்களுக்கும் வேட்டி கட்டணும்னு ஆசையா இருக்கு. ஆனா இடுப்புல நிக்க மாட்டேங்குது, எப்படி கட்டுறதுனு தெரில, அதுமட்டுமில்லாம வேட்டி கட்டுனா மொபைல், பர்ஸெல்லாம் வைக்க முடியாதுனு சொல்லிருக்காங்க. இதுக்காக ஒரு வருசம் ரிசர்ச் பண்ணி ஒரு ஐடியா பண்றாங்க. அதுதான் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி. அந்த கான்சப்ட் செம்ம ஹிட் அடிக்குது. அது மட்டுமில்லாம பாக்கெட் வச்ச வேட்டியும் வந்ததும் இளைஞர்களை வெகுவா கவருது. குழந்தையில இருந்தே வேட்டி கட்டி பழக்கணும்னு முடிவு பண்ணி சின்ன சைஸ் வேட்டிகளையும் அறிமுகப்படுத்துனாங்க. இப்போ ஒரு வயசு குழந்தைக்குக்கூட வேட்டி கிடைக்குது. 2015-ல சகாயம் ஐ.ஏ.எஸ் கோ-ஆப் டெக்ஸ் பாத்துட்டு இருந்தப்போ ஜனவரி 6-ஆம் தேதி வேட்டி தினமா அறிவிச்சு வேட்டியை பிரபலப்படுத்தலாம்னு சொல்லிருக்காரு. இந்த ஐடியா நாகராஜனுக்கு பிடிச்சு அதுல இருந்து ஒவ்வொரு வருசமும் ஜனவரி முதல் வாரத்தை வேட்டி வாரம்னு கொண்டாடுறாங்க ராம்ராஜ்.

ராம்ராஜ் நிறுவனம் தொடங்கி 40 வருசம் ஆகப்போகுது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தில வேட்டியை பிரபலப்படுத்துனதுல ‘ராம்ராஜ்’ கே.ஆர்.நாகராஜனுக்கு ஒரு பங்கு நிச்சயம் இருக்கு. இவருக்குப் பிடிச்ச ஹீரோ யாரு தெரியுமா? நம்ம தல அஜித். ஏன்னா அவரு வேட்டி கட்டு பாட்டு போட்டாருல. அவரு சொன்னா எத்தனை இளைஞர்கள் கேப்பாங்க அதனாலதான் அப்படினு சொல்றாரு. 

1 thought on “சல்யூட் ராம்ராஜூக்கு சல்யூட் விளம்பரத்துக்குப் பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top