நடிகர் மோகனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்னு நீங்க நினைச்சீங்கன்னா, இந்த வீடியோவை முழுசா பாருங்க, உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் நிச்சயமா இருக்கும். ஆமாங்க, நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச வெள்ளிவிழா நாயகன் மைக் மோகன் இன்னைக்கு தளபதி 68-ல இருக்கார். கேரக்டர் என்னவா இருந்தாலும், அதுல ஸ்கோர் பண்ணுவார்னு நிச்சயமா நாம நம்பலாம். ஒருகாலக்கட்டத்தில் ரஜினி கமலுக்கே வசூல்ல சவால் விட்ட மோகன், 14 ஆண்டுகளுக்குப் பின்னால தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கார். என்ன பாஸ் இது எங்களுக்கே தெரியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா மோகனை பத்தி சொல்றப்போ இதெல்லாம் இல்லாம ஆரம்பிக்கவே முடியாதே.. அதுக்காகத்தான் இந்த இன்ட்ரோ.
80-களில் இளம்பெண்களின் கனவு நாயகன், தயாரிப்பாளர்களின் வசூல் மன்னன், இயக்குநர்களின் ஹீரோ, எஸ்.பி.பியின் குரல் நாயகன், வெள்ளிவிழா நாயகன் என பலராலும் கொண்டாடப்பட்டவர் ‘மைக் மோகன்’. எடுத்த உடனேயே டாப்கியர் போட்டு, புகழ் வெளிச்சத்துக்கு போகலை. கொஞ்சம் கொஞ்சமாத்தான் வளர்ந்தார். நடிகராககூட ஆசைப்படாத ஒருத்தர். பேங்க்ல வேலை கிடைச்சு அங்க போயிருக்க வேண்டியவர். தற்செயலாத்தான் நடிக்க வந்தார். அன்னைக்கு அச்சு அசலான எதார்த்த நாயகனா பிரதிபலிச்சதாலதான் இன்னைக்கும் மக்கள் மனசுல நிலையான இடம்பிடிச்சிருக்கார், மோகன். பஞ்ச் பேசுன ஹீரோக்களைத்தான் அன்னைக்கு தமிழ் சினிமா கொண்டாடின காலக்கட்டத்துல பஞ்ச்சே பேசாம வெள்ளிவிழா நாயகனாக மாறின மோகனோட சாதனையெல்லாம் தமிழ் சினிமாவின் இன்னொரு ஆச்சர்யம்தான். எம்ஜிஆர் – சிவாஜி, கமல் – ரஜினி, அஜித் – விஜய்னு ஒவ்வொரு காலக்கட்டமும் ஆண்டுக்கிட்டிருக்காங்க, இன்னமும் பண்ணிட்டிருக்காங்க. கிராமம் வரைக்கும் தங்களோட ராஜ்ஜியத்தை வைச்சிருக்கிற நடிகர்கள் ஏ சென்ட்டரை பெரிசா ஃபோகஸ் பண்ணமாட்டாங்க. ஆனா ஆல் சென்ட்டர்லேயும் தன்னோட சாம்ராஜ்யத்தை வைச்சு அதுல மன்னனாவே வலம் வந்தார் மோகன். மோகனுக்கு க்ளோசப்ல பாடுற மாதிரி காட்சிகள் எவ்ளோ நேரம் வைச்சாலும் பார்த்துக்கிட்டே இருக்கலாம். காரணம், உணர்வுப்பூர்வமா அந்த காட்சிக்கு தன் உதட்டு அசைவில உயிர்கொடுப்பார். இதை எஸ்.பி.பியே ஒரு மேடையில சொல்லி மோகனுக்கு நன்றி சொல்லியிருப்பார்.
இசைஞானி இளையராஜா இசையமைச்சாலும், எஸ்.பி.பி குரல் வந்தாலும் பேமஸ் ஆனது என்னமோ மோகன் பாடல்களாகத்தான். அதிகமான பட வசனங்கள் நிறைஞ்ச ஆடியோ கேசட் விற்பனையான முதல் படம் மோகனோட விதிதான். நடிகர் கமலுக்கு கன்னடத்துல கோகிலாதான் முதல் படம். அதை இயக்கினது இயக்குநர் பாலுமகேந்திரா. அந்தப்படம்தான் மோகனுக்கு முதல் படம். முதல் முதலா கமலோடதான் இவருக்கு அறிமுகமே இருந்தது. ஒரு சில நடிகர்களுக்கு சினிமாவுல இல்லைன்னா, ஃபேன்ஸ் இல்லாம போய்சுவாங்க. ஆனா இத்தனைக்கும் தமிழ் சினிமாவுல 20 வருஷமா அதிகமான படங்கள் இல்லாம, இருந்தாலும் இன்னைக்கும் மிகப்பெரிய ஃபேன்பேஸ் இருக்கு. ரசிகர் மன்றங்கள் இயங்கிட்டும் இருக்கு.
Also Read – மன்சூர் அலிகான் அளவுக்கு இல்லை.. ஆனால், ரஜினி.. பார்த்திபன் சேட்டை இருக்கே!
சினிமாவுல இருந்தாலும், இல்லைனாலும் இன்னைக்கும் ரசிகர் மன்றங்களை கவனிச்சுக்கிட்டிருக்கார், மோகன். மோகன் சினிமாவுக்கு வந்த பின்னால தடாலடியாலாம் பெரிய நடிகராக மாறலை. தன்னோட தனித்துவமான நடிப்பால மக்கள் மனசுல நிறைஞ்சார்னுதான் சொல்லணும். அப்படி மக்கள் மனசுல நிறைஞ்சிருக்கதாலயோ என்னமோ இன்னைக்கும் மோகன்னா மக்கள் கொண்டாடுறாங்க. இதுதான் அவரோட ஸ்பெஷல்னுகூட சொல்லலாம். தொழிலதிபரா, வேலை தேடி அலையுற நபரா, ரேவதியைக் கொல்லபோற கேரக்டர், ரேவதியால் குத்துப்படுற ஹீரோ, ரெண்டுபொண்டாட்டினு எல்லா கேரக்டர்களையும் மக்கள் கொண்டாடுனாங்க. அதுலயும் மனைவி கேட்குற விவாகரத்தை கொடுக்கும் ‘மெளனராகம்’ கணவனையும் சேர்த்துதான். இதுதான் நான் பண்ணுவேன்னு இல்லாம, எல்லா கேரக்டர்களையும் பண்ணுவேன்னு நடிச்சார்.
இவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது எஸ். என் சுரேந்தர்ங்குற விஜயோட மாமாதான். ஒரு காலக்கட்டத்துல ரெண்டுபேருக்கும் இருந்த நட்பு பிரிய, மோகனே வாய்ஸ் கொடுத்து நடிக்க ஆரம்பிச்சார். ஆனால் மக்கள் மத்தியில வாய்ஸ் எடுபடாம போனதுதான் மோகனோட வீழ்ச்சிக்கு காரணமாவும் சொல்லப்படுகிறது. அதேபோல மோகனுக்கு உடல்ரீதியான பிரச்னை இருக்கிறதாவும் கிளப்பி விட்டாங்க. ஆனாலும் சில வருஷ இடைவெளிகள்ல படங்கள் பண்ணிட்டுதான் இருந்தார் மோகன். ஆனா கடந்த 15 வருஷ காலமா படங்கள் பெரிசா ரிலீஸ் ஆகலை. ஹரா படத்தை நடிச்சுட்டு, இப்போ தளபதி 68-ல கமிட் ஆகியிருக்கார். நெகட்டீவ் கேரக்டர்னு சொல்லப்படுது. மோகனுக்கு நெகட்டீவ் கேரக்டரானு நினைக்கலாம். ஆனா அந்த காலக்கட்டத்துலயே நெகட்டீவ் கதாபாத்திரத்துல கத்தியோட அலைஞ்சதெல்லாம் உண்டு. அதேபோல மோகன் திரைத்துறை சார்ந்த எந்த விழாக்களுக்கும் இதுவரைக்கும் அதிகமா வந்ததில்லை. சுக்கமா சொல்லணும்னா இன்னைக்கு இருக்கிற அஜித் வெர்ஷனுக்கு இவர் முன்னோடினும் சொல்லலாம்.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.