சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும் ஐபிஎல், அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் உள்பட உலக அளவில் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பவர்தான் ஃபாஃப் டூப்ளசி. ஐபிஎல்லில் பெங்களூரு டீமின் கேப்டனான இவர், அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட்டில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் டீமின் கேப்டனாக கலக்கி வருகிறார்.
டூப்ளசி பற்றிய 5 சுவாரஸ்ய தகவல்கள்!
ரக்பி லவ்வர்:
பள்ளி காலங்களில் டூப்ளசி ரக்பி விளையாட்டில் தீவிர ஈடுபாடு கொண்டவராகவே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டின் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபாட்டை இழந்த அவர் கிரிக்கெட் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார். 16 வயதில் கை எலும்பு முறியவே கிரிக்கெட் பிராக்டீஸ் இரண்டு மாதங்கள் தடைபட்டிருக்கிறது. அந்த சமயத்தில் டூப்ளசி, கிரிக்கெட்டை விட ரக்பி விளையாடுவதிலேயே அவரது தந்தைக்கு ஈடுபாடு இருந்திருக்கிறது. ஆனால், டூப்ளசி கிரிக்கெட்டையே தனது ஆதர்ஸமாக்கிக் கொண்டார்.
தோஸ்த் டிவிலியர்ஸ்:
டூப்ளசியும் டிவிலியர்ஸும் பள்ளிக்காலம் முதலே நெருங்கிய நண்பர்கள். பள்ளி நாட்களில் ஒரே டீமுக்காக விளையாடியதோடு மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்காவின் பிரிடோரியா Affies Boys School-ல் படிக்கும் காலங்களில் மாணவர் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்த ஜிகிரி தோஸ்த்கள்.
இங்கிலாந்து வாய்ப்புக்கு நோ!
டூப்ளசிக்கு 21 வயதாக இருந்தபோது இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம்ஷைர் அணி அவருக்கு கோல்பாக் ஒப்பந்தம் வழங்க முன்வந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட அணிக்காக விளையாடும்போது தேசிய அணிக்காகக் கூட விளையாட முடியாது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் எதிர்காலத்தில் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியும் என்றெல்லாம் நாட்டிங்ஹாம்ஷைர் காட்டிய ஆசை வார்த்தைகளுக்கு டூப்ளசி மசியவில்லை. தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் என்கிற ஆசையில் அதைத் தவிர்த்துவிட்டார்.
டி20 பௌலிங் சாதனை!
பேட்டிங்கில் அவரின் மாஸ்டர் கிளாஸ் நமக்கெல்லாம் தெரியும். ஆனால், பௌலிங்கிலும் ஒரு அபூர்வமான சாதனை அவரிடம் இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அடுத்தடுத்த மேட்சுகளில் 5 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர். 2011 மைவே டி20 சேலஞ்சில் டைட்டன்ஸ் அணிக்காக லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த போட்டியில் 2012 சீசனில் நார்தனர்ஸ் அணிக்காக ஈஸ்டனர்ஸ் அணிக்கெதிராக 5 விக்கெட் வீழ்த்தினார்.
சமையல் கில்லாடி!
கிரிக்கெட் தவிர்த்து சமையல் கலையும் கில்லாடி நம்ம டூப்ளசி. ஓய்வு நேரங்களில் எல்லாம் வீட்டில் அவரின் சமையல்தானாம். கிரேக்க உணவு வகைகள் தவிர மற்ற உணவு வகைகளை சமைத்து வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாராம்.
Also Read – ஆன்ஃபீல்டு; ஆஃப்ஃபீல்டு கில்லி.. சேவாக்கின் Thug Life Moments!
Vitazen Keto Very well presented. Every quote was awesome and thanks for sharing the content. Keep sharing and keep motivating others.
This is some awesome thinking. Would you be interested to learn more? Come to see my website at QH8 for content about Airport Transfer.
Appreciating the dedication you put intto ylur siute and in dpth information you offer.
It’s god too come across a blog every onfe in a while tyat isn’t the same outdated rehashed
information. Fatastic read! I’ve saqved your site and I’m includiong your RSS feeds tto mmy Google account.