UPSC

கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய மத்திய அரசு… Lateral Entry என்றால் என்ன?

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் உயர் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முடிவை கைவிட்டிருக்கிறது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு.

Lateral Entry

மத்திய அரசின் துறைகளில் காலியாக இருக்கும் பதவியிடங்களுக்கு ஏற்கனவே பதவியிலிருக்கும் அதிகாரிகள் பதவி உயர்வு மூலம் வருவது வழக்கமான நடைமுறை. ஆனால், இந்தத் துறைகளில் சீனியாரிட்டி அடிப்படையில் Mid-level, Higher Level என இரண்டு படிநிலைகளில் வழக்கமான நடைமுறை அல்லாமல் வெளியிலிருந்து ஆட்களை ஒப்பந்தம் மூலம் நேரடியாக நியமிப்பது Lateral Entry, அதாவது நேரடி நியமனம் என்று அழைக்கப்படுக்கிறது.

தற்போதைய பாஜக அரசு ஆட்சியில் இருக்கும்போது, இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, முதல்கட்ட காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த 2018-ல் வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கான ஒப்பந்தங்கள் மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரையில் இருக்கும். அதேபோல், பணியில் குறிப்பிட்ட நபர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து இது நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அரசின் துறைகள் தாண்டி வெளியிலிருந்து வரும் நிபுணர்கள் உதவியோடு தீர்ப்பதற்காகவே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்தத் திட்டத்தை கடந்த 2005-ம் ஆண்டே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த ஆணையம் (ARC) பரிந்துரை செய்திருந்தது. அரசின் நிர்வாக சிக்கல்களுக்கு அரசு துறைகளின் வெளியிலிருக்கும் வல்லுநர்கள் உதவியை நாடலாம் என்ற கருத்தை அந்த ஆணையம் வலியுறுத்தியிருந்தது.

யுபிஎஸ்சியின் அறிவிப்பும் மத்திய அரசின் ரியாக்‌ஷனும்..!

இந்தநிலையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 45 இணை செயலர், இயக்குநர்கள், துணை செயலர்கள் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதிவாய்ந்த நிபுணர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசின் மத்திய பணியாளர் தேர்வாணயம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த அறிவிப்பு சமூக நீதிக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் குவிந்தது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போது அமைச்சராக இருக்கும் சிராக் பஸ்வானும் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இந்த விவகாரத்தில் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, `பாஜகவின் ‘Lateral Entry’ போன்ற அனைத்து சதிகளையும் முறியடிப்போம். எந்தவொரு சூழலிலுல் அரசியலமைப்புச் சட்டத்தையும், இடஒதுக்கீட்டு முறையையும் நாங்கள் பாதுகாப்போம். 50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை உடைத்து, சாதிவாரியான மக்கள்தொகை அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்’ என்று குரல் கொடுத்திருந்தார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இது சமூகநீதிக் கோட்பாட்டுக்கே எதிரானது என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நேரடி நியமன முடிவை மத்திய அரசு கைவிட்டிருக்கிறது. இதுகுறித்து யுபிஎஸ்சியின் தலைவர் ப்ரீதா சுதனுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதியிருக்கும் கடிதத்தில், `மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். நேரடி நியமனத்தால் சமூகநீதி பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார்.

Also Read – பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசு… ஒரே நாளில் திமுக, அதிமுக கூட்டங்களில் கண்டனத் தீர்மானம்!

3 thoughts on “கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய மத்திய அரசு… Lateral Entry என்றால் என்ன?”

  1. Ny weekly naturally like your web site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth on the other hand I will surely come again again.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top