Monisha Nelson

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை.. பின்னணி என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். பின்னணி என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை


பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, அவரின் தம்பி பொன்னை பாலு, ராமு உள்பட 24 பேரை போலீஸார் இதுவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

மேலும், தலைமறைவாக இருக்கும் சீசிங் ராஜா, சம்போ செந்தில் உள்ளிட்டோரைக் கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சம்போ செந்திலின் நெருங்கிய கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனையும் போலீஸார் தேடி வரும் நிலையில், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

நெல்சன் மனைவி மோனிஷாவிடம் விசாரணை

இந்தநிலையில், மொட்டை கிருஷ்ணனின் செல்போன் ரெக்கார்டுகளை ஆய்வு செய்த போலீஸார், அவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷாவோடு போனில் பேசியிருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதையடுத்து, சம்மன் அனுப்பி மோனிஷாவிடம் விசாரணை நடத்தினர்.

மொட்டை கிருஷ்ணன் வழக்கறிஞர், அதேபோல் மோனிஷாவும் வழக்கறிஞர். இதனால், வழக்கு தொடர்பாக அவரிடம் போனில் பேசியதாக மோனிஷா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, இயக்குநர் நெல்சனிடமும் போலீஸார் விசாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Also Read – Kolkata Doctor Case – கொல்கத்தா போலீஸுக்கு குட்டு… உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

2 thoughts on “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை.. பின்னணி என்ன?”

  1. Batida magnífica, gostaria de aprender enquanto você altera seu site, como posso me inscrever em um blog? A conta me ajudou a um acordo aceitável. Eu estava um pouco ciente disso, sua transmissão ofereceu uma ideia brilhante e clara

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top