GOAT விஜய்

`தி கோட்’ விஜய்… ஆடியோ லாஞ்சை ஏன் மிஸ் பண்றோம்?

கோட் படம் இன்னும் சில நாள்கள்ல ரிலீஸ் ஆகப்போகுது. பாட்டுலாம் நல்லால்லன்றது பரவலா ரசிகர்கள் மத்தில விழுந்த பெரிய அடியா இருந்தாலும், ஆடியோ லாஞ்ச் இல்லைன்றதுதான் அதைவிட மிகப்பெரிய இடி. ஏன், இந்த கோட் ஆடியோ லாஞ்ச்சை ரொம்பவே மிஸ் பண்றோம். 4 கிரேட் காரணங்களைதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

விஜய் இன்னும் சில படங்கள்தான் நடிக்கப்போறாருன்றது உறுதியாயிடுச்சு. நான் அரசியலுக்கு வர்றேன், அப்படி, இப்படி கெத்தாலாம் வசனம் பேசமல், அமைதியா 2026தான் என்னோட இலக்குனு தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த பிப்ரவரில ஆரம்பிச்சு தமிழ்நாட்டையே அலற விட்டாரு. லியோ படத்துக்கும் ஆடியோ லாஞ்ச் நடக்கலை. அதுவே ரொம்ப பெரிய ஏமாற்றம். ஆனால், சக்ஸஸ் மீட் வைச்சு சமாளிச்சுட்டாங்க. ஆடியோ லாஞ்ச்ல இருந்த அந்த வைப் மிஸ்ஸிங்க். 2,3 படத்துக்கு அப்புறம் ஆடியோ லாஞ்ச், அரசியல் கட்சி தலைவரா முதல் ஆடியோ லாஞ்ச்… அப்போ தி கோட் ஆடியோ லாஞ்ச்… உண்மையிலேயே தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைமா இருக்கும்னு நினைச்சோம். அந்த மொமண்ட மிஸ் பண்றோம்.

வெங்கட் பிரபு கரியர்ல ரொம்ப மாஸா எந்தப் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் நடந்துச்சுனு யோசிச்சா எதுவுமே இல்லை. மங்காத்தாவுக்குக்கூட பெருசா இல்லை. வெங்கட்பிரபுவோட மொத்த கேங்கும் வந்து ஸ்டேஜ்ல சும்மா அப்படி நின்னாலே அலறும். அன்லிமிட்டெட்ல காமெடி கலாட்டாவா இருக்கும். ஒவ்வொருத்தரும் தளபதிக்கூட நடந்த மொமண்ட்ஸ் ஷேர் பண்றது, ஆஃப்லைன் கலாட்டா, ஃபேன் மொமண்ட் எல்லாமே சொல்லியிருப்பாங்க. படம் வந்தப்புறம் அதை மையமா வைச்சுப் பேசுவாங்க. ஆனால், ஆடியோ லாஞ்ச்ல பேசுறது தனி வைப்… அது நினைச்சாலே சிரிக்க தோணுது. குறிப்பா எல்லாரும் ஒரே மாதிரி டீ ஷர்ட் போட்டு வர்றது, ஜெய் பாட்டு, ஷிவா டான்ஸ், பிரேம்ஜி ஸ்டைல் எல்லாமே மிஸ் பண்றோம்.

பணமதிப்பிழப்பு தொடங்கி எடப்பாடி ஆட்சி வரைக்கும் பல அரசியல் விமர்சனங்களை பேசிருக்காரு. தலைவன் எப்படி இருக்கணும், லோகேஷுக்கு அமைச்சர் பதவினு ட்ரோல் கண்டெண்டும் கொடுத்துருவாரு. அப்பவே அப்படினா… அரசியல் கட்சி தொடங்குனதுக்கு அப்புறம் என்னலாம் ஆடியோ லாஞ்ச்ல பேசுவாருனு எதிர்பார்த்தோம். காக்கா… கழுகு… கதை மாதிரி அரசியல்ல யாரு காக்கா… யாரு கழுகுனு பேசுவாருனுலாம் யோசிச்சு வைச்சுருந்தேன். இப்போ ஒண்ணுமில்லை. இப்போதான் அரசியல் பேச எனக்கு களம் கிடைச்சுது, அதுனால அங்கப் போய் பேசிக்கிறேன். இங்க வேணாம்னு சொல்லியிருக்கவும் வாய்ப்புகள் அதிகம். யூகமே நமக்கு அவ்வளவு கண்டண்ட் கொடுக்குது. அப்போ நேர்ல பேசிருந்தா… மிஸ் பண்றோம்.

குட்டிக்கதை, பஞ்ச் லைன், டயலாக் எல்லாமே அவரோட பேச்சுல இருந்து மிஸ் பண்றோம். அதுக்கு முன்னாடி அவரோட எண்ட்ரி செம மாஸா இருக்கும். அதுலயே குறிப்பிட்டு சில மீம் கண்டென்லாம் போற போக்குல கொடுப்பாரு. மாஸ்டர்ல மனைவிட்ட எங்க உட்காரணும்னு கேட்ட மாதிரி. அப்புறம் ஸ்டேஜ்ல ஏறுனதும் டான்ஸ் திடீர்னு ஆடுவாரு… பாட்டு ஜாலியா பாடுவாரு… மைக் முன்னாடி நின்னு பேசுறது… அந்த நிகழ்ச்சியோட ஹோஸ்ட் விஜய்க்கு என்ன இண்ட்ரோ கொடுக்கப்போறாங்கன்றது, அவர் டைரக்டர்ஸ் பத்தி சொல்ற பஞ்ச் விஷயங்கள், குறிப்பா யுவன் ஷங்கர் ராஜா பத்தி அவர் பேசுற விஷயம். கேள்விகளுக்கு அவர் ஸ்டைல்ல சொல்ற பதில், தலயை ரெஃபர் பண்ணியிருப்பாரு… இப்படி எல்லாமே மிஸ் பண்றோம்.

ஆயிரம்தான் சக்ஸஸ் மீட்டா இருந்தாலும்… ஆடியோ லாஞ்ச் மாதிரி வருமா? அதுவும் இப்படியான தருணம், ரொம்பவே மிஸ் பண்றோம். 

Also Read – சூர்யாவுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது?!

11 thoughts on “`தி கோட்’ விஜய்… ஆடியோ லாஞ்சை ஏன் மிஸ் பண்றோம்?”

  1. Its like you read my mind You appear to know so much about this like you wrote the book in it or something I think that you can do with a few pics to drive the message home a little bit but other than that this is fantastic blog A great read Ill certainly be back

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top