ஒருத்தரு தன்னோட வாழ்நாள்ள 15000 பாட்டு எழுதுறதெல்லாம் சாதாரண விஷயமில்லை. 60’sல அவர் பண்ண பாட்டும் ஹிட்டு.. 2014ல பண்ண பாட்டும் ஹிட்டு.. ஜப்பானின் ஹைக்கூவா, ரஷ்யாவின் வோட்காவா.. மின்வெட்டு நாளில் மின்சாரம்போல வந்தாயே, மச்சி ஓபன் தி பாட்டில்…ன்னு காலத்துக்கு ஏற்ப ஆடியன்ஸோட பல்ஸ் பிடிச்சு பாட்டு எழுதுன ஒரே மனுஷன் வாலி! எம்.ஜி.ஆர் சொல்லியும் அதை மதிக்காம போனது, ரஜினி கேட்டும் பண்ண முடியாம தக் லைஃப் கொடுத்ததுன்னு வாலி சம்பவங்களை பண்ணிருக்காரு. அப்படி வாலி பண்ண வம்பு தும்பான விஷயங்களைத்தான் பார்க்கப் போறோம்.
வெங்கட் பிரபுவுக்கு மங்காத்தாவுல ஆடாம ஜெயிச்சோமடா பாட்டு எழுதுறாரு. அதுல `முன்னேறும் படிக்கட்டு நம் வாழ்வில் உண்டாச்சு கிரிக்கெட்டு’ அப்டின்னு ஒரு லைன் எழுதுறாரு. வெங்கட்பிரபுவுக்கு பெரிய ஹிட் சென்னை 28. கிரிக்கெட்தான் இவருக்கு சினிமால லைஃப் கொடுத்துச்சு.. அதை நியாபகம் வெச்சி இந்தப் பாட்டுல மென்ஷன் பண்ணிருப்பாரு. அதே மாதிரி, வெங்கட்டோட 3-வது படம் கோவா.. அதுனால, கோவா பாட்டுல ‘வெற்றிக்கொடி தட்டி ஹாட்ரிக் அடி’ அப்டின்னு ஒரு லைன் எழுதிருப்பாரு. யோசிச்சிப் பாத்த இந்த மாதிரி எக்கச்சக்கமான பாட்டு மண்டைக்குள்ள ஓடுது.. உங்களுக்கு அப்படி எதாச்சும் தோணுச்சுன்னா கமெண்ட் பண்ணுங்க!
எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டு எழுதிட்டு இருக்காரு வாலி. மும்பை வரைக்கும் அவசர வேலையா போக இருந்தாரு வாலி. அதனால ஏவிஎம் புரொடக்ஷன்ல 5000 ரூபாய் அட்வான்ஸ் கேட்குறாரு. பொண்ணு பாக்க பாம்பே போறேன். அதுக்காகன்னு சொன்னதும் உடனடியா பணமும் வீட்டுக்கு வருது. இந்த விஷயம் ரிப்போர்ட்டர்கள் காதுக்கு போக, பெண் பார்க்க பாம்பே சென்றார் வாலின்னு நியூஸ் பேப்பர்ல வந்திடுது. அதை பார்த்த எம்.ஜி.ஆர். இவரைக் கூப்பிட்டு விடுறாரு. பொண்ணு பிடிச்சிருக்கா, என் தலைமையில தான் கல்யாணம் நடக்கணும்னு சொல்லுறாரு. ஆனா.. 5000 காசு தேவைப்பட்டதுனால தான் பொய் சொல்லி பணம் வாங்கியிருப்பாரு. இதை எம்.ஜி.ஆர்கிட்ட சொல்ல முடியாதேன்னு பொண்ணைப் பிடிக்கலைனு சொல்லிருக்காரு. சீக்கிரமா வேற பொண்ண பாருங்க. என் தலைமையில தன் கல்யாணம் நடக்கணும்னு சொல்லி அனுப்புறாரு. அடுத்த சில நாட்கள்லயே திருப்பதில காதலிச்ச பொண்ண கைபிடிக்கிறார் வாலி. இந்த விஷயத்துலான எம்.ஜி.ஆருக்கு செம கடுப்பு. நான் அவ்ளோ சொல்லியும் என்கிட்ட சொல்லலையேன்னு.. இனிமேல், எம்.ஜி.ஆர். படத்துல வாலி இருக்க மாட்டார்னே முடிவு பண்ணிட்டாரு. நான் அவ்ளோ சொல்லியும் என்னை மதிக்கலைலன்னு எம்.ஜி.ஆர். யோசிக்கலை. கொஞ்ச நாள்லயே, எம்.ஜி.ஆர். வீட்டுல இருந்து கார் வருது வாலி வீட்டுக்கு. சின்னவர் கூப்பிடிறாருன்னு அழைப்பு. வாலி போறாரு.. நான் கோச்சிட்டு இருக்குறதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். அடுத்த படத்துல நீ தான் பாட்டு எழுதணும். அப்படித்தான் தாளம்பூ வாய்ப்பு கிடைக்கிது. அதுல ஒரு லைன் எழுதிருப்பாரு, `எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும். கொஞ்சம் இதயத்தை திறந்தால் அது உன்னை என்னையும் வாழ வைக்கும்’னு அந்த சம்பவத்தை நியாபகம் வச்சி எம்.ஜி.ஆருக்காகவே எழுதுனாரு.
ஒஸ்தி படத்துல கலாசலா கலாசலா பாட்டு வாலி தான் எழுதுறாரு. ஐட்டம் சாங் அப்டிங்கிறதுனால யாரு ஆடப்போறதுன்னும் முன்னாடியே கேட்டுக்குறாரு. மல்லிகா ஷெராவத் அப்டின்னு சொன்னதும் அவரோட லைஃப், படம்னு எல்லாத்தையும் ரிசெர்ச் பண்ணுறாரு. ஏன் ரிசர்ச் பண்றார்ன்னு சொல்லுறேன்னா.. பாட்டுல ஒரு லைன் வரும்.. எவனும் ஏறலாமா கோடம்பாக்கம் பஸ்ஸுனு.. இவதான் ராஜநாகம் சீறிடுவா..ஹிஸ்ஸுனு..
HISS’ அப்டிங்கிறது மல்லிகா நடிச்சு ஹிட்டான இந்திப் படம். அதுல இச்சாதாரி பாம்பா நடிச்சிருப்பாங்க. அதை, இங்க கனெக்ட் பண்ணிருப்பாரு. இந்த பாட்டு எழுதும்போது அவருக்கு வயசு 70+ .
வாலி – இளையராஜா கம்போசிங் அப்டிங்கிறது ஒரு டீ டைம்ல முடியுற வேலை. அது இரண்டு இந்த இரண்டு பேரோட காம்போவுக்கு இருக்குற மேஜிக். அதுக்கு ஒரு சாம்பிள் சொல்லுறேன். பொதுவா.. சிம்பிளான மெட்டுக்கு பாட்டு எழுதுறது ரொம்ப ஈஸி. அதுக்கேத்த வார்த்தைகள் மனசுக்குள்ள இருக்கும். ஆனா.. கஷ்டமான மெட்டுக்கு வார்த்தைக்ளை போடுறது தான். சிங்கார வேலன்ல – ககககீகீகுகு.. பாட்டு, போட்டு வெச்ச காதல் திட்டம், வலையோசை கலகலகலவென கவிதைகள்.. இந்த பாட்டுக்கான ட்யூன் மொதல்ல ராஜா சொல்லிடுறாரு.. இந்த பாட்டுக்கான லிரிக்ஸ் அடுத்த 15 நிமிஷத்துக்குள்ள முடிச்சி கொடுக்குறாரு வாலி. சில மணி நேரங்கல்ல கம்போசிங்கே முடிஞ்சிடுமாம்.
புது டைரக்டர் வாலிட்ட பாட்டு எழுதணும்னு போறாரு. யார் அசிஸ்டெண்டுன்னு கேட்டதும் எஸ்.ஜே.சூர்யாட்ட ஒர்க் பண்ணேன். அஜித்துக்கு இண்ட்ரோ பாட்டுன்னு கேக்குறாரு. ஒரு வாரத்துல வான்னு சொல்லிட்டு அதே மாதிரி ஒரு வாரத்துல கூப்பிடுறாரு.. அந்த பாட்டு தான் வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து ஒரசுர வரையில.. அந்தப் படம் தீனா.. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.. இந்தப் பாட்டை படிச்சிட்டு அமைதியா இருந்திருக்காரு.. இதுக்குதான்யா புது இயக்குநர்களுக்கு பாட்டு எழுதுறதுல இல்லை.. அப்போ… முருகதாஸ் சொல்லுறாரு.. இல்லைசார்.. ‘படம் முழுக்க ஹீரோ வாய்ல வத்திக்குச்சி வச்சிருப்பாரு.. உங்களுக்கு எப்படி தெரியும்னு ஷாக் ஆகிட்டேன்னு சொல்லிருக்காரு..
இளையராஜாவின் மோதிரம் அப்டின்னு ஒரு கதை.. இளையராஜாட்ட சொல்லுறாரு.. அவருக்கும் பிடிச்சிடுது. அவரே தயாரிக்கவும் ரெடியாகிட்டாரு. வடிவேலு ஹீரோ.. காமெடி கதை. எஸ்.பி.முத்துராமன் டைரக்டர்.. இளையராஜா கேமியோ.. கடவுள் வெங்கடாஜலபதி பூமிக்கு வர்ரமாதிரி ஒரு கதை. Initial-ஆ 25 லட்சம் வரைக்கும் செலவு பண்ணிருக்காங்க. அப்புறம், திடீரென ஸ்டாப் ஆகிடுச்சு. ஆனா.. இந்த கதை ரஜினி காதுக்கு போகுது. இளையராஜாவுக்கு பதில் அந்த கேமியோல ரஜினியே நடிக்கவும் ரெடியாகுறாரு.. ரஜினிகாந்தின் மோதிரம்னு படமும் மாத்திடலாம்னு முடிவு பண்ணுறாங்க. திரைக்கதை, இயக்கம் ரவிக்குமார்.. கதை, வசனம் வாலி அப்டின்னு போட்டா ஓகேவான்னு ரஜினி கேக்குறார். ஓகேன்னு வாலி சொல்லிடுறாரு.. சரி.. நீங்க பண்ணி வச்சிருக்குற திரைக்கதையும் கொஞ்சம் கொடுங்களேன்னு கேட்டிருக்காங்க ரஜினி தரப்பு. அதெப்படி, முடியாதுன்னு சொல்லிடாரு வாலி. அதுக்கு நிறைய காசு கொடுக்கவும் ரெடியா இருந்தாரு ரஜினி. இந்த பஞ்சாயத்து இளையராஜா வரைக்கும் போச்சு.. அப்பவும் விடாப்பிடியா முடியாதுன்னு வாலி சொல்லிடாரு..
ரஜினியை விட கமலுக்கு நிறைய பாடல் எழுதிருக்காரு.. படங்கள்ல நடிச்சிருக்காரு.. ஒரு சில சாம்பிள் சொல்லுறேன்.. காதலா காதலா படத்துல, ராஜலட்சுமி வீட்டுக்கதவ தட்டுகிற நேரமிது’ எழுதிருப்பாரு.. கமலோட அம்மா பெயரு ராஜலட்சுமி... அதை நியாபகம் வெச்சி எழுதிருப்பாரு. அதுமாதிரி, கமல் மொதல்ல சேர்ந்த நாடக ட்ரூப்.. கமல் நடிப்பு கத்துக்கிட்ட நபர் டி.கே.சண்முகம் அண்ணாச்சி.. அவரை ஒரு பாட்டுல மென்ஷன் பண்ணிருப்பாரு... அவ்வை ஷண்முகில..
ஷண்முகா உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணையா…’ கமலோட வளர்ச்சிக்கு ஆசானா இருந்தவரு ஷன்முகம் அண்னாச்சி அப்டின்னு சொல்லிருப்பாரு..
செமல்ல… இந்த மாதிரி உங்களுக்கு வாலி பாட்டுன்னதும் என்ன விஷயங்கள் நியாகபத்துக்கு வருதுங்கிறதை கமெண்டுல சொல்லுங்க..!
Also Read – கதறி அழுத மியூசிக் டைரக்டர்… ‘ஹிருதயம்’ ஹேஷம் அப்துல் வஹாப் சம்பவம்!