Instagram

கிரிஞ்சுகளுக்கு நடுவுல கோல்டு… அல்டி இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்ஸ்!

இன்ஸ்டாகிராம்ல இவங்களை இன்னும் நீங்க ஃபாலோ பண்ணலையா? அப்போ, சீக்கிரம் பண்ணுங்க. இவங்க கிரிஞ்ச் இல்லை கோல்டு.

இன்ஸ்டாகிராம்னாலே கிரிஞ்சாதான் பண்ணுவாங்கனு பொதுவான எண்ணம் இருக்கு. அதுல உண்மையும் நிறைய இருக்கு. இவங்க மத்தில சில யூஸ்ஃபுல்லான தகவல்களை ஜாலியா சொல்ற கோல்டான சில பல கிரியேட்டர்ஸ் இருக்காங்க. அப்படியான சில பேரைதான் இந்த லிஸ்ட்ல பார்க்கப்போறோம். அதுமட்டுல்ல சில விநோதமான பக்கங்களையும் பார்ப்போம்.

பிஸ்கட்ஸ் வித் டீ

உலகத்தைப் பத்தின நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கணும். அதுவும் சேலஞ்ச், ஜாலி, ஈஸியா மறக்காமல் இருக்கணும்னு நினைச்சீங்கன்னா விஷ்ணு, பிரியாவோட பிஸ்கட்ஸ் வித் டீ பேஜ் ஃபாலோ பண்ணிக்கோங்க. உலகத்துல நிறைய பேருக்கு புடிச்ச நாடுகள், புடிக்காத நாடுகள், எக்ஸ்பென்ஸான நாடுகள், தண்ணீர் அதிகம் கன்ஸ்யூம் பண்ற நாடுகள், கோல்டு மெடல் அதிகம் வாங்குன நாடுகள், பிரபலமான வெப்ஸைட்டுகள், ரெட் ஃப்ளாக்… கிரீன் ஃப்ளாக் கான்செப்ட்னு நிறைய இன்ஃபர்மேடிவான விஷயங்களை ஷார்ட்டா நறுக்கு, நச்னு சொல்லுவாங்க. குட்டி குட்டியா அப்பப்போ கேம்ஸ் பண்ணுவாங்க.

ஃபீனிக்ஸ் நவீன்

ஒரு மனுஷனுக்கு ஒரு டேலண்ட் இருக்கலாம், ரெண்டு டேலண்ட் இருக்கலாம் உடம்பு பூரா டேலண்டா இருந்தா என்ன பண்றது. அப்படியான மனிதர்தான் நவீன். படிக்கிறவங்க நிறைய பேருக்கு அதை மனசுல பதியலாம் வைக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. நம்மளே அப்படித்தான். பேசாம இதெல்லாம் சினிமா பாட்டு மாதிரி இருந்தா நல்லாருக்கும்லனு தோணும். அதை நிஜமாக்குன ஆள்தான் நவீன். ஆண்டு, பெயர்னு போட்டி தேர்வு விஷயங்களை டிரெண்டிங் பாட்டோட கனெக்ட் பண்ணி அவரே வரிகள் எழுதி, மியூசிக் போட்டு, டான்ஸ்லாம் ஆடி, ப்ராப்பர்டிலாம் யூஸ் பண்ணி வீடியோ பண்ணுவாரு. இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்.

டாப் இன்ஃபார்மர்

ஒரு தாத்தா வந்து பேசுவாரு. நம்ம கஷ்டப்பட்டு அலைஞ்சு திருஞ்சு பண்ற விஷயங்களை எளிமையா எப்படி பண்றதுனு ரொம்பவே சிம்பிளா சொல்லுவாரு. எக்ஸாம்பிள் இந்த பட்டா விஷயத்துலலாம் நம்மள அலைய வைச்சு செஞ்சுருவாங்க. ஆனால், ஆன்லைன்ல அலையாம சம்பவம் பண்ணலாம். ஸ்டெப் ஸ்டெப்பா அதை எக்ஸ்பிளைன் பண்ணுவாரு. அதேமாதிரி தெரிஞ்ச விஷயங்களுக்கு பின்னாடி உள்ள தெரியாத விஷயங்கள் எல்லாம் சொல்லுவாரு. பல வீடியோக்கள் ரொம்பவே தகவல்கள் நிறைஞ்சதா இருக்கும்.

சினிமாக்கள்னு சொன்னா அதுக்கு நிறைய பேஜ் இருக்கு, நம்ம தமிழ்நாடு நவ் பேஜ் உட்பட இண்ட்ரஸ்டுங்க் பக்கங்கள் நிறையவே இருக்கு. அதான்லே வர்கீஸ் பேஜ் தெரியுமா? கிட்டத்தட்ட 10K ஃபாலோயர்ஸ் வந்து, இன்னும் அதிகமாகிட்டே இருக்கு. ஆனால், டெய்லி அதான்லே வர்க்கீஸ் வீடியோவை மட்டும்தான் திரும்ப திரும்ப போடுவாங்க. அதுக்கும் ஃபேன்ஸ் ஃபாலோ பண்ணுவாங்க. மஸ்கிட்டோ டார்ச்சர்னு பேஜ் ஒண்ணு இருக்கு. அதாவது கொசுவை எப்படிலாம் டார்ச்சர் பண்ணலாம்னு டீட்டெயிலிங்க் பண்ணியிருப்பாங்க. டேய் யார்ரா நீங்கலாம்ன்ற மாதிரி இருக்கும். இப்படி விநோதமான ஐடிக்களும் இருக்கும்.

உங்களோட ஃபேவரைட் இன்ஸ்டா ஐடி என்னன்றதை மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க. விநோதமான ஐடியும் கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்க. 

Also Read – அதுல ஒண்ணுமில்ல கீழ போட்ரு.. சீமானிசம் சோதனைகள்!

2 thoughts on “கிரிஞ்சுகளுக்கு நடுவுல கோல்டு… அல்டி இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்ஸ்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top