பாட்ஷா, அண்ணாமலை, வீரா, ஆளவந்தான் மற்றும் பாபா போன்ற திரைப்படங்களின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் பிறந்தநாள் இன்று. இவர் இயக்கிய படங்களில் வரும் வசனங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றன. அவ்வகையில், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சுரேஷ் கிருஷ்ணா படங்களில் வரும் மாஸான வசனங்களின் தொகுப்பு இங்கே…
* இன்னைக்கு பணம், பேரு, புகழ், அந்தஸ்து இருக்குன்ற திமிர்ல என் வீட்டை இடிச்சு என் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து எனக்குள்ள தூங்கிட்டு இருக்க சிங்கத்தை தட்டி எழுப்பிட்டீங்க. அசோக்.. நீ இதுவரைக்கும் இந்த அண்ணாமலைய நண்பனாதான் பாத்துருக்க. இனிமேல் நீ இந்த அண்ணாமலைய விரோதியா பாக்கப் போற. இந்த நாள்… உன்னுடைய காலண்டர்ல குறிச்சி வச்சுக்கோ. இன்னைல இருந்தே உன்னுடைய அழிவுகாலம் ஆரம்பம் ஆயிடுச்சு. எனக்கும் உனக்கும் தர்ம யுத்தம் தொடங்கிடுச்சு. இந்த யுத்தத்துல.. நான் உன்னைவிட பணம், பேரு, புகழ், அந்தஸ்தை சம்பாதிச்சு.. பல அடுக்குமாடி ஹோட்டல்களைக் கட்டி.. உன்னுடைய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி.. உன்னுடைய பண வெறிய ஒழிச்சுக் கட்டி.. நீ எப்படி என் வீட்டை இடிச்சு என் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தியோ அதே மாதிரி நானும் உன் வீட்டை இடிச்சு.. உன் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வர்ல.. என் பேரு அண்ணாமலை இல்லைடா!
* ஏதோ பெருசா கணக்கு கணக்குனு பேசுறாங்க. இந்த அண்ணாமலை கணக்கு கொஞ்சம் கேக்கட்டும். ஆம்பளைங்க போடுறது இன்றைய கணக்கு. பொம்பளைங்க போடுறது நாளைய கணக்கு. பையனுங்க போடுறது மனக்கணக்கு. பொண்ணுங்க போடுறது திருமணக் கணக்கு. ஏழைங்க போடுறது நாள் கணக்கு. பணக்காரங்க போடுறது பணக்கணக்கு. அரசியல்வாதி போடுறது ஓட்டுக் கணக்கு. ஜனங்க போடுறது நம்பிக்கை கணக்கு. மனுஷன் போடுறது தப்புக்கணக்கு. ஆண்டவன் போடுறது பாவக்கணக்கு. இந்த அண்ணாமலை போடுறது எப்பவுமே நியாயக் கணக்கு. கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா இருக்கும். எங்கிட்டயே கணக்கு பேசுறாங்க. எடு வண்டி!
* நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!
* ஒண்ணு சொல்றேன் நல்லா தெரிஞ்சுக்கோ.. நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா, கை விட்டுடுவான்.
* ஐயா.. என் பேரு மாணிக்கம். எனக்கு இன்னொரு பேரு இருக்கு!
* போற காலத்துல நம்மள காப்பாத்துறது நாம சேத்து வச்சிருக்குற சொத்து இல்லை. நாம பெத்து வச்சிருக்குற புள்ளைங்க. இனிமேலாவது சொத்த சேக்குறத நிறுத்திட்டு.. புள்ளைய ஒழுங்கா வளர்க்க கத்துக்கங்க.. ஹௌவ் இஸ் இட்!
* கண்ணா.. எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க.. `வீரா நீ வாழ்க்கைல நிம்மதியா இருக்கனும்னா.. அடுத்தவங்களோட பொன் மேலயும். பொருள் மேலயும், பெண் மேலயும் கை வைக்கக்கூடாது. கண்ணு வைக்க கூடாது’னு. நீ கண்ணு மட்டும் வைக்கல.. கையே வச்சிட்ட.. அனுபவிச்சே ஆகணும்.
* கத்தி புத்தி மாதிரி.. இதுலாம் சும்மா வச்சிட்டு இருந்தா பத்தாது. எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சுக்கனும்.
* பெண்ணை நம்பி பிறந்தபோதே தொப்புள் கொடிகள் அறுபடுமே. மண்ணை நம்பும் மாமரம் ஓர்நாள் மாபெரும் புயலில் வேரருமே. உன்னை நம்பும் உறுப்புகள் கூட ஒருபொழுதுன்னை கை விடுமே. இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் பிணநாள் வரையில் பின்வருமா?
* கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான். வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான். மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன். ஆனால், கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.
* உருமினாதான் சிங்கம்.. உருண்டாதான் பூமி.. உதவினாதான் கடவுள்!
* நான் யோசிக்காம பேச மாட்டேன். பேசின பிறகு யோசிக்க மாட்டேன். கதம்! கதம்!
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படங்களில் வரும் வசனங்களில் உங்க ஃபேவரைட் எது என்பதை கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!
Also Read : அஜித் – சிறுத்தை சிவா… எப்படி நெருக்கமானார்கள் தெரியுமா?!