Tune Short Film

ஏலியன் இளையராஜா இசை கேட்டால், என்ன ஆகும்?! `ட்யூன்’ மினி சினிமா

லாக்டவுனில் வீட்டில் இருக்கும்போது என்னங்க உருப்படியா பண்ண முடியும்!?’ என்று கேட்பவர்களுக்கு,சினிமாவில் ஒரு புதுவித பரிசோதனையை செய்யலாம்!’ என செய்து காட்டியிருக்கிறார் கலைஞன் சந்தோஷ் நாராயணன். Home Craft Cinema என வசீகரமான அடையாளத்துடன் தன் குழந்தைகளை வைத்தே ஒரு க்யூட் முயற்சியை முன்னெடுத்திருக்கிறார் சந்தோஷ்.

Tune

குழந்தைகளை வைத்து குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட மியூஸிக்கல் – சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஷார்ட் ஃபிலிம் இந்த `ட்யூன்’.

  • வேற்று கிரகத்தில் இருந்து மனிதர்களை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு குட்டி ஏலியன், ப்ளூடூத் ஸ்பீக்கர் போன்றதொரு உருவத்தில் பூமிக்கு வருகிறது. இரண்டு குட்டீஸ்களிடம் அந்த ஸ்பீக்கர் வந்தடைகிறது. அந்த ஸ்பீக்கரை செக் செய்வதற்கு அம்மா மொபைலில் இருந்து ப்ளூடூத் வாயிலாக பாடல் ஒன்றை ப்ளே செய்கின்றனர். முதலில் இசைஞானி இளையராஜாவின் பாடல். எஸ்பிபி பாடி கமல் நடித்த மேகம் கொட்டட்டும்' பாடல் முதலில் ஒலிக்கிறது.
  • அதைத் தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஊர்வசி பாடல் ஒலிக்கிறது. நம்ம கிரகத்துல எல்லாம் எமோஷனுக்கு இடமே இல்லை. போன வேலையை மட்டும் பார்' என்று கட்டளையிடுகிறார் குட்டி ஏலியனின் அப்பா. எமோஷனே இல்லாமல் தரையிறங்கிய ஏலியனுக்கு, இசையில் நனைந்ததும் எமோஷன் ஏற்படுகிறது. கொண்டாடும் மனப்பான்மை வருகிறது. அப்படியே சின்னச் சின்ன ரசனை தருணங்களும், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுமாக நிறைவடைகிறது இந்த 15 நிமிட மினி சினிமா.
  • இசை எங்கு வேண்டுமானாலும் இருக்கும், அதை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம், அதன் உருவம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதுதான் ட்யூன்' ஷார்ட் வீடியோவின் சாரம்.Love is the ultimate tool for humans’ என்ற கோட்பாட்டை இசையை வைத்து உணர்த்தி இருக்கிறார்கள்.
  • இசை பல கலைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், அந்த இசையே கொண்டாடும் சில கலைஞர்கள்தான் மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி,இசைஞானி’ இளையராஜா, `இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான். இவர்களைப் போல் உலகில் பல்வேறு கலைஞர்கள் பரவி கிடக்கிறார்கள்.
  • முதலில் ஏலியன் குட்டி ப்ளூடூத் ஸ்பீக்கராக வருகிறது. அடுத்ததாக கமாண்டர் என்று ஒரு எமர்ஜென்சி லைட் வருகிறது. இறுதியாக அதிபர் என்று ஒரு கொசு பேட் வருகிறது. கருவிகளுக்கு உயிர் கொடுத்து இசையைக் கருவியாக்கி ரசிக்கும்படியான ஒரு கான்செப்ட்டை வைத்து இந்த ட்யூன் எடுக்கப்பட்டிருக்கிறது. பெரியவர்கள் பார்ப்பதோடு, வீட்டில் இருக்கும் குட்டி குட்டி நண்பர்களுக்கும் இதைப் போட்டுக் காட்டினால் சந்தோஷப்படுவார்கள்!

வெல்டன் சந்தோஷ்!

Also Read – மலையாள விசாரணை ‘நாயாட்டு’… படத்தின் கதை என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top