கார்

இயர் எண்டில் கார் வாங்குவது சிறந்ததா… பிளஸ், மைனஸ் என்னென்ன?

சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது இந்தியர்கள் பெரும்பாலானோரின் கனவுகளில் ஒன்று. சொந்த வீடு போல சொந்த கார் வாங்குவதையும் லட்சியமாகக் கொண்டிருப்பவர்கள் நிறையப் பேரை நாம் பார்க்க முடியும். அப்படியான முக்கியமான முடிவை எடுத்து வருடக் கடைசியில் கார் வாங்குவதில் என்னென்ன பிளஸ், மைனஸ் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோமா?

கார்

இயர் எண்டில் கார் வாங்குவதுதான் நல்லது…. இல்லை இல்லை இயர் எண்டில் கார் வாங்கவே வாங்காதீங்க என பல அட்வைஸ்களை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் கார், பைக் உற்பத்தியாளர்கள் பெரிய அளவுக்கு சலுகைகள் கொடுப்பார்கள் என்பதுதான் உண்மை. ஸ்டாக்கில் இருக்கும் வாகனங்களை விற்றுத் தீர்க்க அவர்கள் இதுபோன்ற சலுகைகள், தள்ளுபடிகளை அறிவிப்பார்கள்.

இயர் எண்டில் கார் வாங்குவதில் பிளஸ்கள், மைனஸ்கள் என்னென்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாமா?

கார்
கார்

பிளஸ்

இயர் எண்டில் கார் வாங்குவதால், விற்பனையாளரிடம் பல சலுகைகளைக் கேட்டுப் பெற முடியும்.

சலுகைகள்

புத்தாண்டு மாடல் கார்களை வாங்கவே புதிய ஆண்டில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள் என்பதால், தங்களிடம் இருக்கும் ஸ்டாக்கை கிளியர் செய்ய உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தரப்பில் பல்வேறு சலுகைகளை அள்ளி வீசுவார்கள். தள்ளுபடி விலை, அக்சசரீஸ் தொடங்கி நீடிக்கப்பட்ட வாரண்டி வரை இந்தப் பட்டியல் கொஞ்சம் நீளம். இந்த நேரத்தில் கார்களை வாங்கும்போது விலை குறைவாகவும், கூடுதல் சலுகைகளையும் பெற முடியும் என்பது சாதகமான அம்சம்.

விலை

ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் பல்வேறு உற்பத்தியாளர்கள், கார்களின் விலையில் சிறிய அளவுக்கேனும் ஏற்றம் செய்வது வாடிக்கை. ஜனவரியில் இந்த விலை மாற்றம் நடைமுறைக்கு வரும். இதனால், டிசம்பரில் கார் வாங்கும்போது, குறைந்தது சில ஆயிரங்கள் உங்களுக்கு மிச்சமாகும்.

கார்
கார்

எக்ஸ்சேஞ்ச்

உங்கள் பழைய கார் அல்லது டூவீலரை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அதைச் செய்ய டிசம்பர் மாதம்தான் சரியான நேரம். ஏற்கனவே இருக்கும் தள்ளுபடியோடு, டீலர்கள் உங்கள் வாகனத்தை இந்த ஆண்டைக் கணக்கில் கொண்டே மதிப்பிடுவார்கள். இதனால், கொஞ்சம் கூடுதல் தொகை உங்கள் பழைய வாகனத்துக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. அதேநேரம், ஜனவரியில் எக்ஸ்சேஞ்சுக்காக நீங்கள் போனால், கூடுதலாக ஓராண்டு பழைய வாகனமாகவே மதிப்பிடப்படும்.

மைனஸ்

டிசம்பரில் கார் வாங்குவதில் பாசிட்டிவ் விஷயங்கள் இருப்பதைப் போலவே, சில நெகட்டிவ்களும் இருக்கின்றன.

ரீ-சேல் மதிப்பு

இயர் எண்டில் நீங்கள் வாங்கும் கார் அந்த ஆண்டு மாடலாகவே இருக்கும். இதனால், அடுத்த மாதமான ஜனவரி தொடங்கிய பிறகே உங்கள் வண்டி ஓராண்டு பழைய மாடலாகவே கணக்கிடப்படும். இது வாகனத்தின் ரீ-சேல் மதிப்பைக் குறைக்கும். இதைத் தவிர்ப்பதற்காக சிலர், டிசம்பரில் தற்காலிகப் பதிவெண் பெற்றுவிட்டு, ஜனவரியில் வாகனப் பதிவை வைத்துக் கொள்ளுமாறு டீலர்களிடம் கோரிக்கை வைப்பதுண்டு.

கார்
கார்

மாடல்

இயர் எண்டில் கார் வாங்கும்போது, புத்தாண்டில் புதிய டிசைன் அல்லது மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு வரும் புதிய மாடலை நீங்கள் மிஸ் செய்ய நேரிடும். அதேபோல், அடிக்கடி தங்கள் கார்களை மாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இயர் எண்டில் கார் வாங்குவது ஏற்றதல்ல. ஜனவரியில், நீங்க கார் வாங்கி ஒரு மாதத்தில் உங்கள் கார் டீலர்ஷிப் காலண்டர்படி ஓராண்டு பழைய மாடலாகவே கணக்கிடப்படும். இது உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதினால், கார் வாங்குவதை ஒரு மாதம் தள்ளிப்போடுவது நல்லது.

Also Read – Electric Car: எலெக்ட்ரிக் கார் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 7 அம்சங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top