1958 முதல் 2014-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 56 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சாலைகளை அலங்கரித்த அம்பாஸிடர் கார் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் விலை என்ன தெரியுமா… அதேபோல், 2014-ல் கடைசி காரை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் விற்றபோது, என்ன விலைக்கு விற்றது?… இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தபோது, அம்பாசிடர் இல்ல அதோட பேரு.. அதோட முதல் பேரு என்ன தெரியுமா.. இப்படி 1980ஸோட பாதி வரைக்கும் இந்திய சாலைகளோட ராஜாவா வலம்வந்த அம்பாசிடர் காரைப் பத்திதான் நாம இந்த வீடியோல பார்க்கப் போறோம்.
2003-ல் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் எடுத்த முடிவு பரவலாக விவாதிக்கப்பட்டது. என்ன முடிவுன்னு கேக்குறீங்களா. அவர் யூஸ் பண்ணிட்டு இருந்த அம்பாசிடர் காரை மாத்திட்டு, பாதுகாப்பு வசதிகள் கூடுதலா இருக்க பி.எம்.டபிள்யூ காருக்கு மாறுனார். அதுக்கு முன்னாடியே இதுபத்தி பல வருஷங்களா விவாதிக்கப்பட்டு வந்தாலும், பிரதமர் அம்பாசிடர் காரை மாத்துனது ஒரு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துச்சு. ஏன்னா, அந்த அளவுக்கு மக்கள் மனசுல அம்பாசிடர் கார் இடம்பிடிச்சிருந்தது. அப்போதைய காலகட்டங்கள்லாம் அரசு அதிகாரிகள்னாலே வெள்ளை கலர் அம்பாசிடர் கார், அதுக்கு மேல ஒரு சிவப்பு விளக்கு – இதுதான் டிரேட் மார்க் சிம்பல். பிரதமர்கள், அரசியல்வாதிகள், ஏன் மிடில் கிளாஸ் மக்களும் எப்படியாவது தங்கள் வீட்டில் ஒரு அம்பாசிடர் காரை நிறுத்திவிட வேண்டும் என்று நினைத்ததுண்டு. அது ஸ்டேட்டஸுக்கான அடையாளமா பார்க்கப்பட்டது. அதோட ஸ்பேஸியான இண்டீரியர், ஒரு பெரிய குடும்பமும் அதுல பயணிக்க முடியும்ன்ற வசதியைக் கொடுத்துச்சு. அதேபோல, டாக்ஸி டிரைவர்களோட ஆதர்ஸமான காராவும் நம்ம ‘Amby’ இருந்துச்சு. காரணம், அதோட லோ மெயிண்டனன்ஸ். சரி அம்பாஸிடர் எப்படி இந்தியாவுக்கு வந்துச்சு?
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்
நாம பார்க்குற அம்பாசிடர் கார், இங்கிலாந்துல Morris Oxford Series – III-ன்ற பேர்ல 1956-1959 விற்பனையான சேம் கார்தான். இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் Pioneer-கள்ல ஒருத்தரான சி.கே.பிர்லா, இந்தியா சுதந்திரமடையுறதுக்கு முன்னாடியே, அதாவது 1942ல ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்ன்ற கம்பெனிய குஜராத்தோட சின்ன துறைமுக நகரமான Port Okha-ல தொடங்குனாரு. ஆரம்பத்துல மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார்களை அசெம்பிள் பண்ற இடமா இது இருந்துச்சு. பின்னாடி, நாமளே இந்த கார்களை ஏன் தயாரிக்கலாம்னு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் முடிவெடுத்து, மோரிஸ் கம்பெனியின் கார்களுக்கான உரிமையை 1956-ல் கைப்பற்றுகிறது. அதன்பின்னர், கல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான உத்தர்பாராவில் தொழிற்சாலையை அமைத்து உற்பத்தியைத் தொடங்கியது. லேண்ட்மாஸ்டர் என்கிற பெயரில்தான் முதன்முதலில் அம்பாசிடர் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர்தான், கிளாசிக்கான அம்பாசிடர் என்கிற பெயரில் கார்களை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது. Mk I தொடங்கி Encore வரையில் ஏழு தலைமுறைகளாக அம்பாசிடர் கார்கள் இந்திய சாலைகளில் வலம் வந்தன.
அதிலும் குறிப்பாக 1980-களின் மத்தியில் வரை இந்தியாவில் கார்கள் என்றாலே, அது அம்பாசிடரைத்தான் குறிக்கும் என்கிற நிலை இருந்தது. 1958 தொடங்கி 2014 வரையில் கிட்டத்தட்ட 56 ஆண்டுகள் இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனையில் இருந்தது அம்பாசிடர். இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் நீண்ட நாட்கள் உயிரோடு இருந்த கார் மாடல்களில் இதுதான் முதலிடம். மாருதியின் ஆம்னி, 30 ஆண்டுகளோடு, இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
எங்கே வீழ்ந்தது?
இந்திய சாலைகளில் ராஜாவாக வலம்வந்த அம்பாசிடரின் வீழ்ச்சிக்கு இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, டெக்னிக்கலாகவும் டிசைன் வைஸும் பெரிதாக எந்தவொரு அப்டேட்டையும் செய்யாமல் இருந்தது. மற்றொன்று, 1991 தாராளமயமாக்கல் கொள்கைகளுக்குப் பிறகு ஏற்பட்ட போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது எனலாம். 1980-களின் இறுதிக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் விற்பனை குறையத் தொடங்கியது. அதிலும், குறிப்பாக 20011 ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொல்கத்தா உள்பட இந்தியாவின் 11 நகரங்களில் BS IV விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அந்த விதிமுறைகளுக்கு அப்கிரேட் ஆக முடியாமல் தடுமாறியது அம்பாசிடர். இறுதியாக 2014 செப்டம்பரோடு விற்பனையை இந்தியாவில் நிறுத்திக் கொண்டது ஹிந்துஸ்தான் நிறுவனம். கிட்டத்தட்ட 9,00,000 என்கிற அளவில் அம்பாசிடர் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். ஆனால், இன்று சில ஆயிரம் கார்களே இந்திய சாலைகளில் டாக்ஸிகளாகவும் பெர்சனல் பயன்பாட்டிலும் மீதமிருக்கின்றன.
2017 பிப்ரவரியில் அம்பாசிடர் காரின் உரிமையை பிரெஞ்சு கார் உற்பத்தி நிறுவனமான PSA-விடம் ரூ.80 கோடிக்கு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்தது. Peugeot மற்றும் Citroen போன்ற கார்களை இந்த நிறுவனம்தான் உற்பத்தி செய்துவருகிறது. விரைவில், புதிய டிசைனில் அம்பாசிடர் கார்கள் வரலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. வி ஆர் வெயிட்டிங் பாஸ்!
முதல்ல கேட்டிருந்தேன்ல… அந்த கேள்விகளுக்கான பதிலை நானே சொல்றேன். அம்பாசிடர் கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதோட விலை ரூ.14,000. அதுவே, 2014 காலகட்டத்துல கடைசி ஜெனரேஷன் கார்களை ரூ.5.22 லட்சம் என்கிற விலையில் விற்றது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம்.
சரி, முதன்முதல்ல அம்பாஸிடர் கார்களை உங்களோட எந்த வயசுல பார்த்தீங்க… உங்க அனுபவங்களை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
Also Read – டெஸ்ட் கிரிக்கெட்டில் Underrated Wicket Keeper batter தோனி… ஏன்?
c8tje7