கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து மாறும் ஹோம்லோன் வட்டி விகிதம்… உங்களுக்குத் தெரியுமா?

கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது உங்களின் கிரெடிட் ஸ்கோர் ரொம்பவே முக்கியம். ஹோம்லோன் போன்றவைகளுக்காக நீங்கள் விண்ணப்பிக்கும்போது, கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து அதன் வட்டி விகிதம் மாறும்… ஏன்?

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ரிப்போர்ட்
கிரெடிட் ரிப்போர்ட்

ஹோம்லோன் மட்டுமல்ல, எந்தவொரு கடனுக்காகவும் நீங்கள் வங்கிகளையோ அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களையோ நீங்கள் அணுகும்போது ஹெல்தியான கிரெடிட் ஸ்கோர் என்பது ரொம்பவே முக்கியம். ஹோம்லோனுக்கான வட்டி விகிதம் என்பது இப்போது மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால், இந்த வட்டி விகிதம் பாலினம், Loan to Value (LTV) எனப்படும் மொத்த சொத்து மதிப்பில் கடன் தொகை எவ்வளவு மற்றும் கடன் பெறுபவரின் கிரெடிட் ஸ்கோர் ஆகிய இந்தக் காரணிகளைக் கொண்டு மாறுபடும்.

கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தில் இந்த வட்டி விகிதம் பெரும்பாலும் (நிலையான வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருந்தால்) மாறாது. ஆனால், உங்கள் கிரெடிட் ஸ்கோரில் இந்த காலத்தில் மாறுபாடு ஏற்பட்டால், அது நிச்சயம் வட்டி விகிதத்தையும் பாதிக்கும்.

வட்டி விகிதம் எப்படி கணக்கிடுகிறார்கள்?

ஹோம்லோனைப் பொறுத்தவரை கிரெடிட் ஸ்கோரை வைத்து வட்டி விகிதம் கணக்கிடும் முறை வங்கிக்கு வங்கி மாறுபடும். இதற்கென தனி பாலிசியையும் பெரும்பாலான வங்கிகள் வைத்திருக்கின்றன. உதாரணத்துக்கு உங்களின் கிரெடிட் ஸ்கோர் 800-க்கும் மேல் இருந்து, நீங்கள் வாங்கும் கடன் தொகை ரூ.30 லட்சத்துக்குக் கீழே இருந்தால், வங்கி உங்களுக்கு 6.70% என்ற ஆண்டு வட்டியில் கடன் வழங்கும் என்று சொல்லலாம். அதேநேரம், நீங்கள் வாங்கும் கடன் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே என்றால், அதே வங்கி உங்களுக்கு 7.50% வட்டியில் கடன் கொடுக்கும்.

கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து வங்கிகளின் வட்டி விகிதம் எப்படி மாறுபடும்?

கிரெடிட் ஸ்கோர்
கிரெடிட் ஸ்கோர்

கடன் பெற்றவர்களின் வட்டி விகிதத்தை கிரெடிட் ஸ்கோர் எப்படி பாதிக்கும்?

நீங்கள் ஹோம்லோன் பெற்ற பிறகு அதனைத் திரும்பச் செல்லும் காலத்தில் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மாறுபாடு ஏற்பட்டால், வங்கிகள் அதற்கேற்ப வட்டி விகிதத்தை மாற்றுகின்றன. பெரும்பாலும், ஆண்டுக்கு ஒருமுறை கடன் பெற்றவர்களின் கிரெடிட் ஸ்கோரில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி வங்கிகள் ஆய்வு செய்கின்றன. இந்த ஆய்வின்போது உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்திருந்தால், அதற்கேற்ப வட்டி விகிதம் கூட்டப்படும். அதேநேரம், உங்கள் கிரெடிட் ஸ்கோர் உயர்ந்திருந்தால் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ஹோம்லோன்
ஹோம்லோன்

உதாரணமாக, நீங்கள் வங்கியில் கடன்பெறும்போது கிரெடிட் ஸ்கோர் 800-க்கும் மேல் இருந்தால், 6.70% என்ற வட்டி விகிதத்தில் வங்கிகள் உங்களுக்குக் கடன் அளிக்கும். அதுவே, திரும்பச் செலுத்தும் காலத்தில் அது குறைந்தால், அடுத்த கட்டமாக 7% என்கிற வட்டி விகிதம் உங்கள் கடன் தொகைக்கு விதிக்கப்படும். ஹோம்லோனைப் பொறுத்தவரை, நீங்கள் திரும்பச் செலுத்தும் காலத்திலும் ஹெல்தியான கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

Also Read – ஹோம் லோன் வட்டி விகிதங்கள் குறைவு… இப்போது வீடு வாங்குவது சிறந்ததா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top