உங்கள் வங்கிக் கணக்கோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதுவரை நீங்கள் இணைக்கவில்லை என்றால், உடனே இணைத்து விடுங்கள். ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் மிக எளிதாக எப்படி இணைப்பது என்பது பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க..
ஆதார் எண்
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஆதார் எண் என்பது அவசியமானதாகி இருக்கிறது. ஆதார் எண் இருந்தால் மட்டுமே அரசின் பல திட்டங்களின் கீழ் பயன்பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. வருவாய்த் துறையின் அறிவிப்பின்படி, உங்கள் வங்கிக் கணக்கோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அப்படி, வங்கிக்கு நேரில் சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ உங்கள் வங்கிக் கணக்கோடு ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம்.
ஆன்லைன்
உங்கள் வங்கிக் கணக்கோடு ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைக்க வேண்டும் என்றால், நீங்கள் இன்டர்நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். உங்கள் வங்கியின் மொபைல் ஆப் மூலமாகவே எளிதாக இதை நீங்கள் செய்ய முடியும். எப்படி செய்ய வேண்டும்.. ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள் என்னென்ன?
- மொபைல் ஆப்பில் லாக்-இன் செய்து
My Account' செக்ஷனின் கீழ் இருக்கும்
Services’ ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். - அதன்பின்னர், `View/Update Aadhaar card details’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.
- திரையில் தோன்றும் பாக்ஸ்களில் இரண்டு முறை உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு `Submit’ பட்டனைத் தட்டவும்.
- அதன்பின்னர், உங்கள் வங்கிக் கணக்கோடு ஆதார் எண் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது குறித்து உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
ஆஃப்லைனில் செய்வது எப்படி?
உங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று ஆஃப்லைனில் ஆதார் எண் இணைப்பைச் செய்யலாம். உங்கள் வங்கிக் கணக்கி டிஆக்டிவேட் செய்யப்படாமல் இருக்க ஆதாரை இணைப்பது அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- வங்கிக் கணக்கோடு ஆதாரை இணைப்பதற்கான விண்ணப்பப் படிவம், உங்கள் வங்கியின் இணையதளத்தில் கிடைக்கும். இல்லையென்றால், நேரடியாக உங்கள் வங்கிக் கிளைக்குச் சென்றும் இந்தப் படிவத்தை நீங்கள் வாங்கலாம்.
- அந்த விண்ணப்பப் படிவத்தில், வங்கிக் கணக்கு எண், ஆதார் விவரங்கள் போன்றவற்றை நிரப்பவும்.
- வங்கிக் கிளையின் கவுண்டரில் உங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, கையொப்பமிட்ட ஆதார் கார்டு நகல் ஒன்றையும் இணைத்து கொடுக்க வேண்டும்.
- உங்கள் ஆதாரைப் பரிசோதிக்க, ஒரிஜினல் ஆதார் கார்டைக் கேட்பார்கள். அதை வங்கி அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும்.
- உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுவிட்டால், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் ஆதார் எண் வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டுவிடும்.
- உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு இதுபற்றி தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.