ஜெப்டோ

Zepto: 10 நிமிட டெலிவரி ஐடியா ஜெயிச்சது எப்படி?

ஸ்டான்போர்டு டிராப் அவுட் ஆன 19 வயது இளைஞர்கள் இரண்டு பேர் சேர்ந்து உருவாக்கிய Zepto, வளர்ந்தது எப்படி… 10 நிமிட டெலிவரினு அவங்க ஐடியா புடிச்சதுக்கு பின்னாடி இருக்க காரணம் தெரியுமா… இதெல்லாம் விடுங்க எந்த அடிப்படைல அந்த கம்பெனிக்கு Zepto-னு பேர் வைச்சாங்க தெரியுமா.. இப்படி Zeptoவோட சக்ஸஸ் ஸ்டோரியப் பத்திதான் நாம இந்த வீடியோல பார்க்கப் போறோம்.

Zepto

மும்பையைச் சேர்ந்த Aadit Palicha மற்றும் Kaivalya Vohra – இவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஒண்ணா வளர்ந்த திக் ஃபிரண்ட்ஸ். அமெரிக்காவுல இருக்க பிரபலமான ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டில கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ரெண்டு பேருக்கும் வாய்ப்பு கிடைக்குது. அங்க போய் காலேஜ்ல சேர்ந்தாலும், பிஸினஸ் பண்ணனும்ங்கிற தங்களோட கனவு மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்க, ஒரு கட்டத்துல படிப்பை பாதியிலேயே விட்டுட்டு இந்தியா திரும்புறாங்க…

இந்தியா வந்ததும் பல ஸ்டார்ட் அப் ஐடியாக்களை யோசிச்சு டிரை பண்ணி பாக்குறாங்க. பள்ளிக்கூடம் போற பசங்க ஷேர் பண்ணி ஆப் மூலமா டிராவல் பண்ற ஐடியாவைப் பின்னணியா வைச்சு ஒரு ஸ்டார்ட் அப் தொடங்க, அது பிக் அப் ஆகவே இல்ல. தொடர்ந்து ரெண்டு பேரும் டிராவல் பண்ணிட்டு இருக்கப்ப கொரொனா லாக்-டவுன் வருது. அது இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்குது. அத்தோட, மும்பைல தனித்தனியா இருந்த இரண்டு டீனேஜர்களுக்கு உணவு, மளிகைப் பொருட்கள் கிடைக்குறதுலயும் சிக்கல் வருது. அப்போதான் யோசிக்க ஆரம்பிக்குறாங்க ரெண்டுபேரும். நம்மள மாதிரியே இந்த சிக்கல்ல தவிக்குறவங்களுக்கு உதவுறதையே நம்ம பிஸினஸ் மாடலா மாத்தலாம்னு ஒரு ஐடியா புடிக்குறாங்க.

அப்போதைய காலகட்டத்துல மளிகை பொருட்கள் ஆர்டர் பண்ணா இரண்டு நாள் டைம் எடுத்துகூட டெலிவரி பண்ற சிஸ்டம்ல சில ஆப்கள் இருந்துச்சு. ஆனா, குவிக் டெலிவரியை எந்தவொரு நிறுவனமும் கொடுக்கல. அந்த கேப்தான் நம்மளோட குறினு களமிறங்குனாங்க ரெண்டு பேரும். அப்படி அவங்க ஆரம்பத்துல தொடங்குனது Kiranakart-னு ஒரு கம்பெனி. அது சூப்பர் மார்க்கெட்கள்ல இருந்து வாடிக்கையாளர்களுக்கு மளிகைப் பொருட்களை ஆர்டர் எடுத்து டெலிவரி பண்ற கம்பெனி. தொடக்கத்துல அது நல்லா போனாலும், எதிர்பார்த்த இலக்கை நோக்கிப் பயணிக்க இது சரியான வழி இல்லைனு யோசிச்ச அவங்க, அடுத்து எடுத்து வைச்சதுதான் மிகப்பெரிய மூவ்.

பழைய ஆப் அனுபவத்துல இருந்து பாடம் கத்துக்கிட்ட ஆதித் – வோரா ஜோடி, 10 நிமிஷத்துல உங்க வீட்ல மளிகைப் பொருட்களை டெலிவரி பண்றோம்னு அறிவிச்சு 2021 ஏப்ரல்ல தொடங்குனதுதான் Zepto. பத்து நிமிஷம்தான் நம்மளோட பிரைம் டைம், டார்கெட் எல்லாமே. டெக்னாலஜியைத் துணைக்குக் கூப்பிட்டுக்கிட்டதோட, டார்க் ஸ்டோர்ஸ்னு அழைக்கப்படுற பிஸினஸ் மாடலோட களமிறங்குனாங்க. அதாவது, ஒவ்வொரு ஏரியாலயும் இருக்க சின்ன சின்ன கடைகள்தான் இந்த டார்க் ஸ்டோர்ஸ். அந்தக் கடைகளுக்கு கஸ்டமர்ஸ் நேர்ல போய் பொருட்களை வாங்க முடியாது. ஆனா, ஆன்லைன்ல ஆர்டர் பண்ணா, இந்தக் கடைகள்ல இருந்து டெலிவரி பண்ணுவாங்க. அதேபோல், டெக்னாலஜியை யூஸ் பண்ணி, ஒவ்வொரு ஏரியாவோட பேக்ரவுண்ட், அங்க இருக்க டிராஃபிக், டெலிவரி பண்ற டைம்னு கால்குலேட் பண்ணி, கடையையும், டெலிவரி எக்ஸிகியூட்டிவையும் ஒதுக்குறது இவங்களோட மாடல்.

Zepto அப்டின்றதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா.. அதுக்கும் இந்த கம்பெனிக்கு என்ன சம்மந்தம் தெரியுமா… பதிலைப் பின்னாடி சொல்றேன்.

ஒரு கஸ்டமர் ஆப்ல தங்களோட ஆர்டரை பிளேஸ் பண்ணின அடுத்த 60 செகண்ட்ஸுக்குள்ள அந்த ஆர்டர் பேக் பண்ணி, டெலிவரிக்குத் தயாராகிடும்னு சொல்றாரு ஜெப்டோ சி.இ.ஓ ஆதித். அதே மாதிரி, சராசரியா ஒரு டெலிவரிக்கு எடுத்துக்குற டைமிங் 8 நிமிஷம் 47 செகண்ட்னும் சொல்றாங்க. தொடங்கப்பட்ட முதல் 5 மாதத்துக்குள் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னைனு இந்தியாவோட முக்கியமான நகரங்கள்ல சேவையைத் தொடங்குச்சு ஜெப்டோ. கொரோனா கால சூழல், டைட்டான வொர்க்கிங் ஷெட்யூல்னு இன்னைக்கு இருக்க சூழலைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டு, குவிக் ஆன்லைன் டெலிவரியோட வளர்ச்சியையும் சரியாக் கணிக்கவே, இவங்க எடுத்து வைச்ச ஒவ்வொரு அடியும் புலிப் பாய்ச்சல்தான். Month to Month வளர்ச்சியா பாக்குறப்போ ஜெப்டோவோட வளர்ச்சி 200 மடங்குனு சொல்றாங்க. அதாவது போன மாசம் இருந்தத விட ஒவ்வொரு மாசமும் இரண்டு மடங்கு வளர்ச்சி. ஒரு ஸ்டார்ட் அப்பா பார்க்கையில் இது பிரமிக்கக் கூடிய வளர்ச்சி. இவங்களோட வளர்ச்சி முதலீட்டாளர்களையும் பாசிட்டிவா பார்க்க வைச்சிருக்கு. இதனாலேயே இந்த கம்பெனி, சமீபத்தில் சேர்த்த 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டையும் சேர்த்து மே 3, 2022 தேதியில் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த மதிப்பீட்டைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.6,800 கோடி. மெர்சலா இருக்குல நம்பரைப் பார்க்குறப்ப..

ஒரு செகண்டோட 21-ல ஒரு பங்கு zeptosecond-னு சொல்வாங்க. அதாவது 0-க்கு அப்புறம் புள்ளி வைச்சு 21 ஜீரோக்களுக்கு அப்புறம் 1 போட்டா 10⁻²¹ (0.000000000000000000001) வர்ற டைமிங்தான் ஜெப்டோ செகண்ட். இதுதான் கணக்கா பார்த்தா ரொம்ப குறைவான டைமிங். இதை அடிப்படையா வைச்சுதான் தங்களோட கம்பெனிக்கு ஜெப்டோனு பேர் வைச்சிருக்காங்க.

ஜெப்டோவோட வளர்ச்சி மற்ற நிறுவனங்களையும் குவிக் டெலிவரி பக்கம் கவனத்தைத் திரும்ப வைச்சிருக்கு. ஜெப்டோவோட வளர்ச்சில எது முக்கியமான பங்கு வகிச்சதுனு நீங்க நினைக்கிறீங்க… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க… 

Also Read – Yahoo வீழ்ந்தது ஏன்… எங்கே சறுக்கியது அதன் பிஸினஸ்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top