கட்டுமானத் துறையில் பணியாற்றும் இன்ஜினீயரா நீங்க… அல்லது கட்டுமானத் துறை சார்ந்த பிற வேலைகளில் இருக்கீங்களா… அப்படின்னா நாணயம் விகடன் வழங்கும் `GBR TMT பில்டர்ஸ் வொர்க்ஷாப்’ – இலவச ஆன்லைன் பயிற்சிப் பட்டறையை மிஸ் பண்ணிடாதீங்க!!
என்ன சொல்லித் தருவாங்க?
கட்டமானத்துக்கான தொடக்கநிலை திட்டம் தொடங்கி பிளான்/வரைபடம் தயாரிப்பது முதல் கட்டடத்தை கட்டி முடிச்சு பெயிண்ட் பண்ணி அதோட உரிமையாளர்கிட்ட ஒப்படைக்குற வரை படிப்படியா என்னென்ன வேலைகள் செய்யணும், அதற்கான ஒவ்வொரு ஸ்டேஜ் பத்தியும் ரொம்ப டீடெய்லா உங்களுக்கு இதுல சொல்லித் தருவாங்க. அந்தத் துறையில் ஜாம்பவான்கள்கிட்ட இருந்து அதைப்பத்தி இந்த வொர்க்ஷாப்ல நீங்க கத்துக்க முடியும்.
வொர்க்ஷாப்பால என்ன பலன்?
கட்டுமானத் துறை சார்ந்த பணிகள்ல இருக்கவங்களுக்கும் சரி, புதுசா இந்த ஃபீல்டுக்கு வர நினைக்குறவங்களுக்கும் சரி இன்றைக்கு இருக்க தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சியும் தொழிற்பயிற்சியும் (Vocational Training) ரொம்பவே அவசியாமனதுனு சொல்றாங்க. அதப்பத்தின விழிப்புணர்வும் இப்போ மக்கள் மத்தியில வரத் தொடங்கிருக்கு.
சிவில் இன்ஜினீயர்கள் மட்டும் இல்லை, கார்பெண்டர், பெயிண்டர், எலெக்ட்ரீஷியன், மேசன், வெல்டர், பிளம்பர், கான்கிரீட் மிக்ஸர் ஆபரேட்டர் தொடங்கி கட்டுமானத் துறை சார்ந்து இயங்குற எல்லாருக்குமே இது ஒரு வரப்பிரசாதமான நிகழ்வு. ஒவ்வொரு இன்ஜினீயரும் கட்டத்தின் பிளான் தொடங்கி ஹேண்ட் ஓவர் வரை ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் என்ன செய்யணும்.. எதையெல்லாம் கவனிக்கனும்னு ஒரு தெளிவான புரிதல் கிடைக்கும். `நான் கட்டுமானத் துறை சார்ந்து பணியாற்றல.. ஆனா புதுசா ஒரு வீடு கட்ட நினைக்குறேன்’னு சொல்றவரா நீங்க? உங்களுக்கும் நிச்சயம் இந்த வொர்க்ஷாப் பயனுள்ளதா இருக்கும். கட்டடம் கட்டும்போது எந்த விஷயங்கள்ல எல்லாம் கவனமா இருக்கணும். எதெல்லாம் அவசியம் தேவைனு எல்லா விஷயங்களையும் நீங்க தெரிஞ்சுக்க முடியும்.
`நான் கட்டுமானத் துறை சார்ந்த தொழில் பண்ணிட்டு இருக்கேன். நான் கலந்துக்கலாமா’ – இது உங்க கேள்வியா இருந்தா… நிச்சயம் உங்களுக்கு இந்த வொர்க்ஷாப் நிறைய விஷயங்கள்ல ஐ ஓபனரா இருக்கும். கட்டுமானத்துறை பத்தி கூடுதல் தகவல்களைத் தெரிஞ்சுக்கிறது உங்க போட்டியாளர விட நீங்க ஒரு படி மேல இருக்க எப்பவுமே கைகொடும்ல… உங்க பிசினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போக துறை சார்ந்த வல்லுநர்களோட ஐடியாஸ்/ அறிவுரைகள் நிச்சயம் கைகொடுக்கும்.
எல்லாருக்குமான இந்த வொர்க்ஷாப்ல இலவசமா நீங்க கலந்துக்க முடியும்!
GBR TMT பில்டர்ஸ் வொர்க்ஷாப் – நிகழ்ச்சி நிரல்
முழுக்க முழுக்க ஆன்லைனில் நடக்கப்போகும் இந்த வொர்க்ஷாப்பை நீங்க உங்க மொபைல் மூலமாகவே பார்க்க முடியும்!
வொர்க்ஷாப் வீடியோ தலைப்புகள்:
- கட்டுமானத்துக்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் – வழங்குபவர், கணேஷ் – மாநிலச் செயலாளர் – FACEAT & P.
- கட்டுமானத்தின்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் (2 பாகங்கள்) – வழங்குபவர், குமார், நிர்வாக இயக்குநர், நவின்ஸ் ஹவுசிங்.
- கட்டுமானப் பணியாளர்களைக் கையாளும் முறை – வழங்குபவர், மணிசங்கர், தலைவர், தமிழ்நாடு ஃபிளாட் புரோமோட்டர்ஸ் சங்கம்.
- கட்டுமான மூலப்பொருள்களை கையாளும் முறை – வழங்குபவர் M. சரவணன், மாநிலத் தலைவர், FACEAT & P.
சான்றிதழ் – பரிசு!
ஒவ்வொரு வீடியோவுக்கு பின்னரும், வீடியோவில் விளக்கப்பட்ட தலைப்புகள் பற்றி கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகளுக்குப் பதிலளித்து GBR TMT பில்டர்ஸ் வொர்க்ஷாப்பில் கலந்துகொண்டதற்கான டிஜிட்டல் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்! இந்த டிஜிட்டல் சான்றிதழை உங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி GBR TMT- யின் அஃபிஷியல் பக்கத்தை டேக் (tag) செய்யுங்க! Tag செய்யும் அனைவருக்கும் GBR TMT வழங்கும் அட்டகாசமான மெர்ச்சண்டைஸ் பரிசு காத்துள்ளது!
இன்னும் GBR TMT பில்டர்ஸ் வொர்க்ஷாப்-ல கலந்துக் ரிஜிஸ்டர் பண்ணலையா? இந்த லிங்க்கை கிளிக் பண்ணி உடனே வொர்க்ஷாப்ப்புக்கு வாங்க! அனைவருக்கும் அனுமதி இலவசம்! – https://gbrtmtbuildersworkshop.com/