குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்கும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் திட்டம் செல்வமகள்/பொன்மகன் சேமிப்புத் திட்டம். அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தத் திட்டத்தில் உங்களது செல்ல மகள்/மகன் பெயரில் கணக்கைத் தொடங்கி, மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் சேமிக்கலாம். அந்தத் திட்டங்களில் யாரெல்லாம் சேரலாம்… அதற்கு என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம் தெரிஞ்சுக்கப் போறோம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
இந்தியாவில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அதிகப்படியான வட்டி விகித்தைதை தந்து பெற்றோர்களை மகிழ்சியில் ஆள்த்தியது இத்திட்டம். கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக `சுகன்யா சம்ரிதி யோஜனா’ என்ற செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் மக்களிடையே வெகுவான வரவேற்பை பெற்றது. இந்தியாவிலேயே அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கணக்கு தொடங்கலாம். இரட்டை பிள்ளைகளாக இருந்தால், அவர்களுக்குப் பின் பிறக்கும் பெண் பிள்ளையையும் சேர்த்து மூன்று கணக்குகளை தொடங்கும் சலுகைகளும் உள்ளன. இச்சேமிப்பு திட்டத்தில் பெண்பிள்ளைகள் 10 வயது நிரம்புவதற்குள் கணக்கு தொடர வேண்டும். அதாவது, பெற்றோருடனோ அல்லது பாதுகாவலருடனோ கணக்கானது, ஜாயிண்ட் அக்கவுண்டாகத் தொடரப்படும்.
இச்சேமிப்பில் மாதம் ஒரு முறை 15 வருடங்களுக்கு முதலீடு செய்தல் வேண்டும். ஒவ்வொரு மாதமும் குறந்தபட்சம் 250 ரூபாயில் தொடங்கி 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும் தொகைக்கான வட்டி விகிதம் 7.6 சதவிகிதமாக வழங்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில்தான் அதிகப்படியான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. கணக்கு முதிர்வடையும் தருவாயில் இருப்புத் தொகை மூன்று மடங்காகும். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் திருமணத்துக்காகவோ அல்லது மேற்படிப்புக்காகவோ பணத்தை கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். திருமணம் என்றால் முழு பணத்தையும், மேற்படிப்புக்காக என்றால் 50 சதவிகித பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம். விருப்பப்பட்டால் கணக்கை 18 வயதுக்குப் பிறகும் தொடர்ந்து கொள்ளலாம். சேமிப்பு மற்றும் வட்டிவிகிதம் இரண்டுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ஒருவேளை எதிபாராத விதமாக கணக்கு தொடரப்பட்ட பெண் பிள்ளை இறந்து விட்டால் இறப்பு சான்றிதழை காட்டி கணக்கை முடித்துக்கொண்டு செலுத்திய தொகையை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை பெற்றோர் இறந்துவிட்டால், பெண் குழந்தையின் பாதுகாவலர் கணக்கை தொடர்ந்து தொகையை செலுத்தலாம் அல்லது தொகையை செலுத்த முடியவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொள்ளும் வசதிகளும் உள்ளன. அவ்வாறு கணக்கு முடிக்கப்பட்டால் பணமானது குழந்தைகளிடமோ அல்லது குழந்தைக்கு பொறுப்பானவர்களிடமோ ஒப்படைக்கப்படும்.

பொன்மகன் சேமிப்புதிட்டம்
பெண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்புதிட்டம் போல, ஆண் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது இந்தத் திட்டம். இதில், முதிர்வு தேதிக்கு முன்பே பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இச்சேமிப்பு திட்டத்தில் மாதந்தோறும் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்ச ருபாய் வரை 15 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு 8.1% சதவிகிதம் வட்டி தொகையானது வழங்கப்படுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு இத்திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது. 10 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலருடன் ஜாயிண்ட் அக்கவுண்ட்டிலும் 10 வயதுக்கு மேற்பட்டோர் தானாகவும் கணக்கு தொடங்கலாம். இச்சேமிப்பு தொடங்கிய 5 வருடங்களில் தங்களுக்கு தேவையான தொகையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இதற்கும் வருமான வரி விலக்கு உண்டு.

இத்திட்டத்தில் எவ்வாறு இணைவது?
செல்வமகள்/பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் சேர தேவைப்படும் ஆவணங்கள்,
குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி சான்றாக ஆதார்கார்டு, ஐடி கார்டு அல்லது பான் கார்டு குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட சில ஆவணங்கள் தேவைப்படும். இந்த ஆவணங்களோடு அருகிலிருக்கும் தபால் நிலையங்களுக்கு சென்று குழந்தைகளின் பெயரில் கணக்கைத் தொடங்கலாம்.
ஆறு மாத குழந்தைக்கு இந்த கணக்கு தொடங்கலாமா?