• பான் கார்டு முதல் வருமான வரித் தாக்கல் வரை… மார்ச் 31-க்குள் இதையெல்லாம் முடிச்சுடுங்க!

    வங்கிக் கணக்குகளுக்கான கே.ஒய்.சி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியாக மார்ச் 31-ம் தேதியை அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. 1 min


    Pan Card - Aadhar Card
    Pan Card - Aadhar Card

    பான் கார்டு – ஆதார் இணைப்பு, வங்கிகளில் கே.ஒய்.சி ஆவணங்கள் சமர்பிப்பு – இப்படி மார்ச் 31-க்குள் நீங்கள் முடிக்க வேண்டிய நிதி சேவைகள் தொடர்பான வேலைகள் என்னென்ன?

    நிதியாண்டு முடிவு

    ஆண்டுதோறும் மார்ச் மாதம் 31-ம் தேதியோடு நிதியாண்டு முடிவுக்கு வரும். அப்போது, பல சேவைகளுக்கான காலக்கெடுவும் முடிவுக்கு வரும். அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிதி பரிவர்த்தனை, வங்கி தொடர்பான சில ஆவணங்களை நீங்கள் அப்டேட் அல்லது சமர்ப்பிக்கத் தவறினால், அபராதம்/நிதி சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். அப்படி, இந்த மார்ச் 31-ம் தேதிக்குள் நீங்கள் முடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.

    பான் கார்டு - ஆதார் கார்டு
    பான் கார்டு – ஆதார் கார்டு

    பான் கார்டு – ஆதார் எண் இணைப்பு

    பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2022 மார்ச் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், உங்கள் பான் கார்டு செல்லாததாகவும் வாய்ப்பிருக்கிறது.

    எப்படி இணைக்கலாம்?

    • ஆன்லைனில் வருமான வரித் தாக்கல் செய்யும் இ-ஃபைலிங் இணையதளம்.
    • ’UIDPAN’ என்று உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.
    • ஆஃப்லைனில் பான் கார்டு சேவை மையங்கள் அல்லது NSDL மற்றும் UTIITSL அலுவலகங்களுக்கு நேரில் சென்று இணைக்கலாம்.

    கே.ஒய்.சி

    வங்கிக் கணக்குகளுக்கான கே.ஒய்.சி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியாக மார்ச் 31-ம் தேதியை அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீங்கள் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்றால், உங்கள் வங்கிக் கணக்கு பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படலாம்.

    வருமான வரிக் கணக்குத் தாக்கல்
    வருமான வரிக் கணக்குத் தாக்கல்

    வருமான வரிக் கணக்குத் தாக்கல்

    கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21 நிதியாண்டு வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடுவை மத்திய அரசு பல்வேறு முறை நீட்டிப்பு செய்தது. அந்த வகையில் கடைசி தேதியாக மார்ச் 31, 2022 அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், தாமதமாக வரிக் கணக்குத் தாமதமாக தாக்கல் செய்யும்போது குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டி வரும்.

    வீட்டு மானியம்

    பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (PMAY) மூன்று தவணைகளில் கடைசி தவணைக்கான காலக்கெடு 2022 மார்ச் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. நகர்ப்புறங்களில் வீடு கட்டுவோருக்கு PMAY திட்டத்தின் கீழ் மானியம் பெறும் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    Also Read – CIBIL Score என்றால் என்ன… அது ஏன் முக்கியம்?


    Like it? Share with your friends!

    554

    What's Your Reaction?

    lol lol
    36
    lol
    love love
    32
    love
    omg omg
    24
    omg
    hate hate
    32
    hate

    0 Comments

    Leave a Reply

  • Choose A Format
    Personality quiz
    Series of questions that intends to reveal something about the personality
    Trivia quiz
    Series of questions with right and wrong answers that intends to check knowledge
    Poll
    Voting to make decisions or determine opinions
    Story
    Formatted Text with Embeds and Visuals
    List
    The Classic Internet Listicles
    Countdown
    The Classic Internet Countdowns
    Open List
    Submit your own item and vote up for the best submission
    Ranked List
    Upvote or downvote to decide the best list item
    Meme
    Upload your own images to make custom memes
    Video
    Youtube and Vimeo Embeds
    Audio
    Soundcloud or Mixcloud Embeds
    Image
    Photo or GIF
    Gif
    GIF format
    ‘லாங் டிரைவ் போலாமா… பெட்ரோல் போட்றியா ஜெஸ்ஸி!’ – வேறலெவல் பெட்ரோல் Price Hike மீம்ஸ் வாரணாசி முதல் மதுரை வரை – நாட்டின் 10 வரலாற்று நகரங்கள்! எம்.ஜி.ஆர் – சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி வரை… இது கோலிவுட் நட்பு ஆங்கிலேயர்கள் கட்டமைத்த இந்தியாவின் 10 ஹில் ஸ்டேஷன்கள்! சாக்லேட் தெரியும்… அதுல இந்த வெரைட்டியெல்லாம் தெரியுமா?