உங்கள் பான் கார்டில் வேறோருவர் லோன் எடுத்திருக்கிறாரா.. ஒரு நிமிடத்தில் செக் செய்வது எப்படி?

உங்கள் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் பான் கார்டு ரொம்பவே முக்கியமானது. அதேநேரம், பான் கார்டு நம்பரை வைத்து மட்டுமே சிறிய அளவில் கடன் கொடுக்கும் செயலிகள் எத்தனையோ இருக்கின்றன. அப்படியான சூழலில், உங்கள் பான் கார்டு நம்பரை வைத்து யாராவது கடன் வாங்கியிருக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பது அவசியம். அதை ஒரே நிமிடத்தில் எப்படி தெரிந்துகொள்வது?

Pan Card Frauds

Indiabulls நிறுவனத்தின் சிறு கடன் வழங்கும் செல்போன் செயலியான Dhani Services சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. தங்கள் பான் கார்டு நம்பரை வைத்து வேறொருவருக்கு கடன் அளிக்கப்பட்டிருப்பதாகப் பல்வேறு புகார்கள் எழுந்திருக்கின்றன. மோசடி நபர்கள் கடன் பெற்றுவிட்டு, அதைத் திரும்பச் செலுத்தாத நிலையில், பான் கார்டு நம்பரின் உரிமையாளரின் CIBIL ஸ்கோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.

பான் கார்டு மோசடி
பான் கார்டு மோசடி

மோசடி எப்படி நடக்கிறது?

Dhani போன்ற சில நிதிபரிவர்த்தனை தொடர்பான செயலிகள் பான் கார்டு எண் மற்றும் மொபைல் நம்பர் போன்ற தகவல்களை மட்டுமே கொண்டு small ticket loane எனப்படும் சிறிய அளவிலான கடன்களை அளிக்கின்றன. வங்கிக் கணக்கோடு செல்போன் நம்பர் இணைக்கப்பட்டிருக்கும் என்பதால், மற்றொரு பான் கார்டு உதவியோடு வேறோரு வங்கிக் கணக்குக்கு பணம் மாற்றப்படும். Quick Dispursal என்கிற பெயரில் இப்படியொரு Loop Hole-ஐ விட்டுவைத்திருக்கின்றன.

எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்ணை தெரியாத நபர்களிடமோ, ஏன் தெரிந்தவர்களாகவே இருந்தாலும் அது ரகசிய ஆவணம் என்கிற அடிப்படையில் அதைக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. அதேபோல், இந்த ஆவணங்களின் நகல்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதைத் தவிர்த்து விடுங்கள். அப்படி அனுப்பும்பட்சத்தில் அந்த ஆவணங்கள் மீது என்ன பயன்பாட்டுக்காக அனுப்புகிறீர்கள் என்பதை எழுதிவிட்டால், மற்ற இடங்களில் அது நமக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்துவிடலாம் என்கிறார்கள் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள்.

பான் கார்டு மோசடி
பான் கார்டு மோசடி

எப்படி கண்டுபிடிப்பது?

இதெல்லாம் சரி, ஏற்கனவே உங்கள் பான் கார்டைப் பயன்படுத்தி வேறொருவர் கடன் வாங்கியிருக்கிறாரா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது… அதற்கும் எளிதான வழி இருக்கிறது. பான் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் வாங்கியிருக்கும் கடன்களை உரிய இடைவெளியில் கண்காணிப்பதும், CIBIL ஸ்கோரையும் அவ்வப்போது செக் செய்வதும் அவசியம். கடன் தகவல்களைக் கொண்டிருக்கும் CIBIL, , Equifax, Experian அல்லது CRIF High Mark போன்றவற்றின் இணையதளங்களில் லாக்-இன் செய்து உங்கள் பெயரில் வாங்கப்பட்டிருக்கும் கடன்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளலாம். மேலும் Fintech எனப்படும் பணப்பரிவர்த்தனை குறித்த செயலிகளான Paytm, PolicyBazaar போன்றவற்றில் லாக்-இன் செய்தும் தெரிந்துகொள்ள முடியும். இந்த வகை செயலிகளில் உங்கள் CIBIL ஸ்கோரோடு கடன் பற்றிய விவரங்களையும் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும்.

Also Read – முப்பது வயதுக்குள் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய மூன்று நிதிப் பழக்கங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top