உங்க குடும்பத்துக்குப் பெண்களுக்கு Financially Secure என்கிற நிலையை எப்படிக் கொடுக்கலாம்… 5 டிப்ஸ்களைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க..
வீடோ அலுவலகமோ பெண்கள், தங்கள் வேலை – வீடு வொர்க் பேலன்ஸை சரிக்கட்ட கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அதற்கான அங்கீகாரம் என்பது அரிதாகவே அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், அதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து செல்வார்கள். நவீன காலத்தில் பெண்கள் வாழ்வு என்பது அவர் வேலை பார்த்து வந்தாலோ அல்லது House maker-ஆக இருந்தாலும் கொஞ்சம் சிக்கலானதுனே சொல்லலாம். ஒரு தாயாக, மனைவியாகவோ அல்லது ஒரு மகளாகவோ அவர்கள் ஒரு குடும்பத்துக்காக செய்யும் தியாகங்கள் சொல்லப்படாத கதைகளாகவே பெரும்பாலும் திகழ்கின்றன.
அப்படி உங்க குடும்பத்தில் இருக்கும் பெண்களை, அவர்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு Financially Secure என்கிற நிலைக்கு வர வேண்டும். அதற்கான 5 டிப்ஸ்களைத்தான் இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.
பட்ஜெட்
உங்கள் வருமானம் எதற்கு அதிகம் செலவாகிறது.. எந்தப் புள்ளியில் நீங்கள் சேமிக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பட்ஜெட் போடுவது முக்கியம். குழந்தைகளின் கல்வி, புதிய வீடு, ஆட்டோமொபைல் என முக்கியமான செலவுகளைத் திட்டமிட பட்ஜெட் என்பது அவசியம். சேமிப்பு – செலவு இடையிலான விகிதங்களைக் கணக்கிட்டு, அதற்கேற்ப எதிர்காலத் திட்டமிடலை சரிசெய்யவும் பட்ஜெட் உங்களுக்கு உதவும்.
சேமிப்பை முதலீடு செய்யுங்கள்
சேமிப்பு சிறந்த பழக்கம்தான் என்றாலும், அந்த சேமிப்பு வளர்வதற்கு, அதை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது அவசியம். முதலீடு செய்வதன் மூலம் உங்கள் சேமிப்பைப் பன்மடங்காக வளர்த்தெடுக்க முடியும். முதலீடு செய்வதற்கு முன்னர், எந்த மாதிரியான விஷயங்களில் முதலீடு செயலாம் என்பது குறித்து புரஃபஷனல்களின் ஆலோசனை கேட்பதும் உங்களுக்கு உதவலாம். இதற்காகத் தனியே ஒரு சேமிப்புக் கணக்குத் தொடங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் அல்லது காப்பீடு ஒன்றை வாங்கலாம்.
நிதி திட்டமிடல்
உங்கள் குடும்பத்துக்கான நிதி திட்டமிடலை, குடும்பத் தலைவிகள் செய்வது கைமேல் பலனைக் கொடுக்கும். இது உங்கள் குடும்பத்தின் நிதி நிலைமையை வலுப்படுத்தும். அதேபோல், அவர்களுக்கான இலக்குகள், லட்சியங்களை அடையவும் இது வழிவகுக்கும்.
அவசர நிதி
எந்தவொரு சரியான நிதி திட்டமிடலிலும் நிச்சயமாக இடம்பெற வேண்டிய அம்சம் இது. கடினமான காலங்களைக் கஷ்டமில்லாமல் கடக்க அவசர நிதி சரியான சமயத்தில் கைகொடுக்கும். உங்கள் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடியவர்களின் எண்ணிக்கை, தற்போதைய வருமானம் மற்றும் சொத்து ஆகியவற்றின் அடிப்படையில் தொடக்கத்தில் சிறிய தொகையை அவசர நிதியாக ஒதுக்கி வையுங்கள்.
காப்பீடு முக்கியம் பாஸ்
வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. நிதி விவகாரத்தில் நீங்கள் பல்வேறு விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஆனால், உங்கள் மற்றும் உங்கள் அன்பானவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை விட வேறெதுவும் முக்கியமில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு காப்பீடு என்பது கடினமான சூழலில் கைகொடுக்கும்.
Also Read – பெண்களுக்கு ஏன் நிதி சுதந்திரம் அவசியம் – 5 காரணங்கள்!
0 Comments