நீங்கள் ஏற்கனவே வீடு ஒன்றை வாங்கியிருக்கும் நிலையில், முதலீடு என்கிற வகையில் புதிய வீடு வாங்கத் திட்டமிடுகிறீர்களா… அதற்கு முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

முதலீடு
கொரோனோவுக்கு முந்தைய நிலையை நோக்கி மெல்ல மெல்ல பொருளாதார சூழல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், ரியல் எஸ்டேட் துறையும் மெல்ல எழுச்சி நடைபோடத் தொடங்கியிருக்கிறது. நீங்கள் ஏற்கனவே சொந்த வீட்டில் இருப்பவராக இருக்கும் நிலையில், அடுத்தகட்ட முதலீட்டு ஆலோசனையில் இருக்கிறீர்களா?… முதலீடாக இன்னொரு வீடு வாங்கலாம் என்று நினைப்பவரா நீங்கள்… உங்கள் பதில் ஆம் என்றால், உங்களுக்கான பயனுள்ள தகவல்களைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
முதலீடாக வீடு வாங்கும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

ஒரே இடத்தில் கவனம் வேண்டாம்
ஒரு சின்ன கால்குலேஷன் மூலம் இந்த உதாரணத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். ஒருவரின் மொத்த சொத்து மதிப்பில் ரியல் எஸ்டேட்டில் மட்டும் அவர் 75% முதலீடு செய்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அத்தோடு, பொருளாதாரரீதியாக நல்ல நிலையில் இருக்கும் அவரின் மொத்த முதலீடும் ஒரே ஒரு சொத்தின் மீதுதான் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். இப்படியாக, உங்களின் முதலீடு மொத்தத்தையும் ஒரே ஒரு இடத்தில் வைத்துக் கொள்வது ஆரோக்கியமானதல்ல என்கிறார்கள் முதலீட்டு ஆலோசகர்கள். உங்களது மொத்த சொத்தில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு என்பது 20-25%-க்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நல்லது என்பது அவர்களது ஆலோசனை.

Liquidity
உங்களின் நிதி திட்டமிடலில் ஒரு சொத்தை வைத்து பிளான் செய்திருந்தீர்கள் என்றால், அதை சரியான நேரத்தில் நடத்தி முடிப்பது முக்கியம். உதாரணத்துக்கு ஒருவர், தனது குழந்தையை வெளிநாட்டில் படிக்க வைக்க எண்ணுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்கான பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதை விற்று, தனது மகனையோ மகளையோ வெளிநாட்டுக்கு அனுப்பலாம் என்று அவர் திட்டமிடுகிறார். ஆனால், அந்த சரியான நேரத்தில் அவரது இடத்தை விற்க முடியாமல் போகிறது. இதனால், அவரது குழந்தையை வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாமல் போய்விடலாம். இதனால், இப்படியான சூழ்நிலைகளில் பிளான் பி எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்.

மதிப்பைக் கண்டறிவது
நீங்கள் முதலீடு செய்யும் முன்னர், குறிப்பிட்ட இடத்தின் சந்தை மதிப்பு எப்படியிருக்கிறது, அது எதிர்காலத்தில் உயருமா என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு இடத்தில் ரியல் எஸ்டேட் விற்பனை, வாங்கும் தன்மையைப் பொறுத்தே அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படும். நீங்கள் முதலீடு செய்திருக்கும் பகுதியில் நீண்டகாலமாக ரியல் எஸ்டேட் விற்பனை அல்லது வாங்குவது நடக்கவில்லை என்றால், உங்கள் இடத்தின் மதிப்பு சுமார் 30% அளவுக்குக் குறைய வாய்ப்பிருக்கிறது.

மறைமுகக் கட்டணங்கள்
மேலே குறிப்பிட்ட காரணங்களையெல்லாம் ஓரளவுக்கு அலசி ஆராய்ந்து நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் வீட்டைக் கண்டறிந்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வீட்டை வாங்கும்போது மறைமுகக் கட்டணங்கள் என்கிற பெயரில் சில லட்சங்களை நீங்கள் இழக்க வேண்டி வரலாம். பெரும்பாலானோர் இந்த பாயிண்டைக் கருத்தில் கொள்வதில்லை. கேட்டட் கம்யூனிட்டி வீடு என்றால், அதற்கான பராமரிப்புக் கட்டணம் என்கிற வகையில் முன்பணமாகவே சில ஆண்டுகளுக்கு லட்சங்களைக் கொடுக்க வேண்டி வரும். இதையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
Also Read: சென்னை வீடு/இடம் வாங்குவதற்கு முன்னர் செக் பண்ண வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?




Tham gia cộng đồng game thủ tại Go88 để trải nghiệm các trò chơi bài, poker phổ biến nhất hiện nay.