நலம் தரும் Joint Venture திட்டம்… நில உரிமையாளர்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

கட்டுமானத் துறையில் நில உரிமையாளர்களுக்கு நன்மை பயக்கும் முக்கியமான திட்டம் கூட்டுக் கட்டுமானத் திட்டம் (Joint Venture) ஆகும். அந்தத் திட்டம் பற்றியும், அதற்காக கட்டுமானம் செய்பவரோடு ஒப்பந்தம் செய்யும்போது நில உரிமையாளர்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் பற்றியும்தான் நாம இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப் போறோம்.

House
House

Joint Venture திட்டம் என்றால் என்ன?

நில உரிமையாளர் மற்றும் கட்டுமானம் செய்பவர் இடையே போடப்படும் ஒப்பந்தத் திட்டம்தான் Joint Venture திட்டம். இதன்படி, காலி மனை அல்லது பழைய குடியிருப்பைச் சொந்தமாக வைத்திருக்கும் நில உரிமையாளர், கட்டுமான நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, அந்த இடத்தில் புதிய குடியிருப்பையோ அல்லது வணிக வளாகத்தையோ கட்டலாம். நில உரிமையாளருக்கு நிலம் சொந்தம் மற்றும் அதில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்போ அல்லது வணிக வளாகமோ கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தம் என்ற அடிப்படையில் கூட்டுக் கட்டுமானத் திட்டம் (Joint Venture) செயல்படுத்தப்படுகிறது.

கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நில உரிமையாளருக்கு, அவரது பங்காக அளிக்கப்பட்ட வீடுகள் தவிர, மற்ற வீடுகளை கட்டுமான நிறுவனங்கள் விற்பனை செய்யும். அதில், 40:60 என்ற வகையில் நில உரிமையாளர் – கட்டுமான நிறுவனத்துக்கான லாபப்பங்கு இருக்கும். இது நிலத்தின் அமைவிடம் உள்ளிட்ட சில காரணிகளால் மாறுபடலாம்.

House
House

Joint Venture – நில உரிமையாளர்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

  • இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை நில உரிமையாளருக்கும் கட்டுமான நிறுவனத்துக்கும் இடையே போடப்படும் Joint Venture Agreement ரொம்பவே முக்கியமானது. ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் இருக்கும் வரிகளைக் கவனமாகக் கட்டமைக்க வேண்டியது அவசியம்.
  • நில உரிமையாளருக்கு கட்டுமான நிறுவனம் சார்பில் முன்பணம் கொடுக்கப்பட்டிருந்தால், அதைப் பற்றியும் திரும்ப அளிக்க வேண்டும் என்றால் அதுகுறித்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டியது அவசியம். அதேபோல், கட்டுமானத்தைக் கட்டி முடிக்க வேண்டிய கால அளவு, ஒருவேளை இதில் தாமதம் ஏற்பட்டால் நில உரிமையாளருக்குக் கட்டுமான நிறுவனம் தரப்பில் தர வேண்டிய வாடகை உள்ளிட்ட விவரங்களும் ஒப்பந்தத்தில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • குடியிருப்பாகவோ அல்லது வணிக வளாகமாகவோ கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அதில் நில உரிமையாளருக்குப் பங்காகக் கொடுக்க வேண்டிய வீடுகள்/கடைகள் பற்றிய விவரங்கள், மீதமிருக்கும் வீடுகளை விற்பதில் இருவருக்கும் சேர வேண்டிய பங்கு என்ன என்பதையும் முன்பே பேசி ஒப்பந்தத்தில் இறுதி செய்துகொள்ளுங்கள்.
House
House
  • கட்டுமானம் தொடங்கும் முன்னர் கட்டுமானம் குறித்த அனுமதிகள் பெறுவதற்காக கட்டுமான நிறுவனத்துக்கு நிலத்துக்கான Power of Attorney உரிமையை நில உரிமையாளர் எழுதிக் கொடுக்க வேண்டும். அதேபோல், கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு Possession Handover Certificate மற்றும் நில உரிமையாளருக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள்/இடம் பற்றிய சான்றிதழ்களையும் கட்டுமான நிறுவனம், நில உரிமையாளரிடம் வழங்க வேண்டும்.
  • கட்டுமானத்தை ஒப்படைக்கும்போது கட்டுமான நிறுவனம், நில உரிமையாளருக்கு அளிக்க வேண்டிய பிரிக்கப்படாத இடம் (UDS) பற்றிய தகவல்கள், கட்டுமானத்தின் மொத்த இடம், பயன்படுத்தப்படும் பொருட்கள், அளிக்கப்படும் வசதிகள் என தெளிவாக அனைத்துத் தகவல்களும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். இது, எதிர்காலத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.

Also Read – Home Loan: வீட்டுக் கடன் வாங்கத் திட்டமிடுகிறீர்களா… இதையெல்லாம் மறக்காம செக் பண்ணிடுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top