கீழ இருக்க லிஸ்ட்ல உங்களோட ஃபேவரைட் A-வா.. B-யானு செலக்ட் பண்ணி வைச்சுக்கோங்க. கடைசில உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் சீக்ரெட் சொல்றேன்.
A. பூஸ்ட்
B. ஹார்லிக்ஸ்
A. குர்குரே
B. Lays
A. க்ளோஸ்-அப்
B. பெப்சோடெண்ட்
இதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பிராண்டும் அதோட காம்படிடரும் வந்ததா நீங்க நினைப்பீங்க. ஆனா இதுல வந்த A, B ரெண்டுமே ஒரே கம்பெனியோட ப்ராடகட்தான். நம்மளை ட்விஸ்ட் பண்றதுக்காக இந்த கம்பெனிகள் பண்ற டெக்னிக்தான் இந்த Multi Branding. இதனால என்னாகும்னா அந்த கம்பெனிக்கு காம்படிசனே இருக்காது. இந்த மாதிரி நம்ம போட்டி பிராண்டுனு நினைக்குற எதெல்லாம் ஒரே கம்பெனினுதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
* FMCG பிராடக்ட்ஸ்னு சொல்லப்படுற நாம தினசரி வீட்டுல யூஸ் பண்ற பெரும்பாலான பிராடக்ட்ஸ் ஒரு சில கம்பெனிகள்தான் தயாரிக்குறாங்க. அதுல முக்கியமானது P & G. துணி துவைக்கிற பவுடர்ல ஏரியல், Tide இது ரெண்டுமே இவங்களோட பிராடக்ட்தான். ஷாம்பு எடுத்துக்கிட்டா Head & Shoulders – pantene இது ரெண்டும் இவங்களோடதுதான். விக்ஸ்ல இருந்து விஸ்பர் வரைக்கும் ஏகப்பட்ட பொருட்கள் தயாரிக்குது இந்த கம்பெனி.
* FMCG-ல இந்தியால பெரிய கம்பெனினா Hindustan Unilever. பூஸ்ட், ஹார்லிக்ஸ் இது ரெண்டுமே இவங்களோட பிராடக்ட்தான். இது மட்டுமில்ல, 3 Roses, Red Label, Taj Mahal, Bru இந்த எல்லா டீ தூளுமே இவங்க கம்பெனியோடதுதான். ஹமாம் சோப், லக்ஸ் சோப், லைஃப் பாய் சோப், டவ் சோப், பியர்ஸ் சோப் இந்த எல்லா சோப்பும் இவங்க தயாரிக்குறதுதான். க்ளோஸ் அப், பெப்சோடெண்ட் இந்த ரெண்டு டூத் பேஸ்ட்டுமே இவங்களோடதுதான். ரின், சர்ஃப் எக்ஸெல் இதுவும் இவங்களோடதுதான். ஆச்சர்யமா இருக்குல.
* சன்ஃபீஸ்ட் பிஸ்கட்டும், க்ளாஸ்மேட் நோட்டும் ஒரே கம்பெனிதான்னு சொன்னா நம்புவீங்களா? ஆமா ITC கம்பெனியோடதுதான் இந்த ரெண்டுமே. கேண்டிமேன் சாக்லேட், எங்கேஜ் பெர்ஃப்யூம், மங்கல்தீப் அகர்பத்தி இது எல்லாமே இவங்களோடதுதான்.
* நம்ம ஊர் பக்கம் வந்தோம்னா மீரா சீயக்காய், கார்த்திகா சீயக்காய் இது ரெண்டுமே ஒரே கம்பெனியோடதுதான். கெவின்கேர் நிறுவனத்தோட தயாரிப்புதான் இந்த ரெண்டுமே. ஊறுகாய்ல சின்னிஸ் ஊறுகாயும், ருச்சி ஊறுகாயும் இந்த கம்பெனியோடதுதான். இண்டிகா ஹேர் டை, சிக் ஷாம்பு இரண்டும் இவங்களோடது.
* கோல்டு வின்னர், எல்டியா, கார்டியா இந்த எண்ணெய் எல்லாமே காளீஸ்வரி நிறுவனம்தான் தயாரிக்குறாங்க.
* Godrej-னு சொன்னாலே நமக்கு பீரோ ஞாபகம் வரும் இல்ல ஹேர் டை ஞாபகம் வரும். ஆனா குட் நைட், ஹிட், சிந்தால் சோப் இது எல்லாமே இவங்களோட பிராடக்ட்தான்.

ஆக மொத்தத்துல நீங்க காலைல எழுந்திருக்கிறதுல தொடங்கி நைட் தூங்கப் போற வரைக்கும் யூஸ் பண்ற எல்லா பிராடக்டுமே தயாரிக்குறது 10-15 கம்பெனிகள்தான்.
இப்ப நான் சொன்னதுல எது புதுசாவும் ஆச்சர்யமாவும் இருந்ததுனு கமெண்ட்ல சொல்லுங்க. உங்களுக்குத் தெரிஞ்சு வேற எந்த ரெண்டு பிராண்டு ஒரே கம்பெனியை சேர்ந்ததுனு கமெண்ட்ல சொல்லுங்க.
0 Comments