அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட Franchise cricket-ஐ இங்கிருக்கும் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு பாணியில் அணுகி வருகின்றன. இதற்கு முன்புவரை 8 டீம்களாக இருந்த ஐபிஎல் தொடரின் Strength இப்போது பத்தாகியிருக்கிறது.
Franchise Cricket சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. களத்தில் வலுவான சண்டை செய்ய சரியான டீம் காம்பினேஷன்தான் அடித்தளம். அந்த டீம் எப்படிப்பட்டதுனு முடிவு பண்றதுதான் அவங்களோட சக்ஸஸையும் முடிவு செய்யும். பணம், புகழோட பயங்கரமான போட்டியும் நிறைஞ்சது ஐபிஎல்-லோட களம். இங்க நீங்க எடுத்து வைக்குற ஒவ்வொரு அடியும் முக்கியம். தப்பா ஒரு அடி எடுத்து வைச்சா, நீங்க இருக்குற இடத்துல இருந்து இரண்டு அடி கீழே இறங்கிடுவீங்க.
இப்படியான Franchise Cricket-ல் சி.எஸ்.கேவோட Strategy ரொம்பவே வித்தியாசமானது. மற்ற அணிகளுக்கு Strategy-யை அடிப்படையா வைச்சு சி.எஸ்.கே எடுத்த 6 பாடங்களைத்தான் நாம பார்க்கப்போறோம்.
வீக்னஸில் வலிமை!
பொதுவா சி.எஸ்.கேனாலே பெரும்பாலானோர் சொல்ற விமர்சனம் ‘Daddy’s Army’ என்பதாகத்தான் இருக்கும். சி.எஸ்.கேவின் முக்கியமான வீரர்கள்னு பெரும்பாலனவர்களை எடுத்துக்கிட்டீங்கன்னா, ஒண்ணு ரிட்டையர்டு ஆகியிருப்பாங்க; இல்ல அந்த வயசை ஒட்டி இருப்பாங்க. ஏலத்துல திறமையான இளம் வீரர்களை நோக்கி எல்லா டீமும் போட்டி போட்டுட்டு இருக்கப்ப, அதை கொஞ்சம் வித்தியாசமா அணுகுறது சி.எஸ்.கேவோட Strategy. வயதான வீரர்கள்னு அவங்க மேல வைக்குற அதே வீக்னஸ் பாயிண்டையே வலிமையா சென்னை டீம் பார்ப்பாங்க. இதுக்கு அவங்க சொல்ற ரீசன், ‘அனுபவத்துக்கு மாற்றுனு எதுவும் இங்க இல்லை’ என்பதுதான்.
நம்பிக்கை… அதானே எல்லாம்!
ஐபிஎல் மேட்சுகளைப் பொறுத்தவரை ஒரு சில மேட்சுகளில் நீங்க சரியா விளையாடலைன்னா, பிளேயிங் லெவன்ல உங்க இடம் கேள்விக்குறியாகிடும். ஆனா, சி.எஸ்.கே அப்படியில்லை. ஒருத்தர் கிட்ட திறமை இருக்கு அவருக்கு சரியான வாய்ப்புக் கொடுக்கப்படணும்னு நம்புற டீம் இது. ஆரம்பகாலத்தில் ஹெய்டன் தொடங்கி 2021 சீசனுக்கு முன்னாடி இருந்த ருதுராஜ் கெய்க்வாட் வரைக்கும் எத்தனையோ உதாரணங்களை இதுக்குச் சொல்ல முடியும்.
டீம் கல்ச்சர்
இது ஒரு டீம் இல்லை; ஒரு குடும்பம் – இதுதான் சி.எஸ்.கே டீமோட கல்ச்சர்னே சொல்லலாம். ’உங்களை இங்கே இன்னொரு குடும்பாகத்தான் வரவேற்பாங்க. எத்தனையோ டீம்கள் கூட நான் விளையாடியிருக்கேன். ஆனால், சி.எஸ்.கே மாதிரியான இன்னொரு டீமோ அல்லது இன்னொரு என்விரான்மென்டோ வேற எங்கயும் கிடைக்கும்னு நான் நினைக்கல’ – இது யெல்லோ ஆர்மியின் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ சொன்னது. ஃபீல்டுலயும் சரி, ஆஃப் ஃபீல்டுலயும் சரி ஒரு குடும்பம் போன்ற சூழலை ஏற்படுத்தியிருக்கதுதான் சி.எஸ்.கேவோட சக்ஸஸுக்கு முக்கியமான காரணம். ஒவ்வொரு பிளேயர்ஸும், மற்றவர்களோட வெற்றியை தன்னோடதை விட பயங்கர உற்சாகமா கொண்டாடுவாங்க.
நிர்வாகத்தின் ‘Unconditional Support’
சி.எஸ்.கேவோட ஹிஸ்டரில மறக்கக் கூடிய சீசன்னா 2020-தான். அந்த ஒரே ஒரு சீசன்லதான் சி.எஸ்.கே இல்லாம பிளே ஆஃப் நடந்துச்சு. அந்த சீசனப்ப கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. அதுக்கப்புறம் நிச்சயம் ரீசெட் பட்டனை சென்னை டீம் மேனேஜ்மெண்ட் தட்டும். அடுத்த சீசன்ல பல அதிரடியான மாற்றங்கள் வரும்னு வானிலை மாதிரி கணிக்க ஆரம்பிச்சாங்க. ஆனால், அப்படியான அதிரடி முடிவுகள் எதுவும் எடுக்கப்படலை. முந்தின சீசன்ல விளையாடுனது மாதிரியான பிளேயிங் லெவனோடையே களமிறங்குன சி.எஸ்.கே, 2021 விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கி கப் அடிச்சது. இதுக்கு முக்கியமான காரணம் டீம் மேனேஜ்மெண்ட், கேப்டன் தோனி, கோச் ஸ்டீஃபன் பிளமிங் உள்ளிட்ட தலைமையை நம்பி கொடுத்த Unconditional Support-னே சொல்லலாம். இன்றைக்கான ஐபிஎல் சூழலில் இப்படியொரு சப்போர்ட் எல்லா டீம் லீடர்ஸுக்கும் கிடைக்குமான்றது கேள்விக்குறிதான்.
Co-Ordination
2009 சீசனில் சி.எஸ்.கேவுக்காக 10 மேட்சுகள் விளையாடியவர் ஸ்டீஃபன் ஃபிளமிங். அந்த சீசன் முடிந்ததும் அவரை கோச்சாக நியமித்தது நிர்வாகம். இவருக்கும் தோனிக்குமான ‘Rapo’ ரொம்பவே ஸ்பெஷலானது. கேப்டனின் ஆன்ஃபீல்டு முடிவுகளில் கோச் தலையிட மாட்டார். அதேபோல், ஆஃப் ஃபீல்டில் கோச்தான் மாஸ்டர். சி.எஸ்.கே கல்ச்சரின் முக்கியமான பாலபாடம். அதேபோல், பேட்டிங் கோச்சான மைக்கல் ஹஸி, பௌலிங் கோச்சான பாலாஜி போன்றோரும் வீரர்களாக இருந்து அந்த பொசிஷனுக்கு வந்தவர்கள்தான். டீமில் இருக்கும் எல்லாருடனுமே நட்பாகப் பழகக் கூடியவர்கள். இவர்களுக்கு இடையிலான Co-Ordination இயல்பாகவே அமைந்தது.
Grooming
அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேநேரத்தில், இளம் வீரர்கள் பலரையும் வளர்த்தெடுத்திருப்பது சி.எஸ்.கேவின் வொர்க்கிங் ஸ்டைல். அனுபவசாலிகளின் நேரடி கண்காணிப்பில் இவர்கள் கிரிக்கெட் பாடம் கற்றுக்கொண்டனர். இப்போதைய கேப்டன் ஜடேஜா தொடங்கி, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார், ஷ்ரதுல் தாக்குர் என சி.எஸ்.கே வளர்த்தெடுத்த இளம் வீரர் படை சர்வதேச போட்டிகளிலும் இந்தியாவுக்காக ஜொலித்தனர். இவர்கள் தவிர சாம் கரண், சாம் பில்லிங்ஸ், மிட்செல் சாட்னர், லுங்கி இங்கிடி, ஜேசன் ஹோல்டர் என வெளிநாட்டு வீரர்கள் லிஸ்டும் பெருசு.
Also Read – ‘ஜெயிச்சாலும் தோத்தாலும் சண்ட செய்யணும்’ – ஐபிஎல்-லின் டாப் 5 ’போராட்ட’ இன்னிங்ஸ்கள்!
47mu2t
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?