2003-04 ஆஸ்திரேலியா டெஸ்ட் சீரிஸ் சச்சின் கரியரில் ரொம்பவே முக்கியமானது. காரணம், 2003 டிசம்பர்ல நடந்த 3 டெஸ்ட்ல மொத்தமே 82 ரன்ஸோட மோசமான ஃபார்ம்ல இருந்த சச்சின் 4-வது டெஸ்ட்ல பண்ண சம்பவம் காலத்துக்கும் நின்னு பேசக்கூடியது. அதுக்குப் பின்னாடி ஒரு முக்கியமான சென்டிமென்டும் இருந்துச்சு…

அதை சொன்னால் உங்களால நம்ப முடியாது. வீடியோவை முழுசா பார்த்துட்டு உங்களுக்கு இருக்க சென்டிமென்ட்களை கமெண்ட்ல சொல்லுங்க.அந்த சீரிஸோட நாலாவது டெஸ்ட் 2004 ஜனவரி 2-ல தொடங்குது. அதோட ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ்ல சச்சின் களத்துக்கு வரும்போது இந்தியாவோட ஸ்கோர் 128/2. அதுக்கு முந்துன டெஸ்டோட ரெண்டு இன்னிங்ஸ்கள்லயுமே ஆஃப் ஸ்டம்புக்கு வெளில போற பாலை டிரைவ் பண்ண டிரை பண்ணியே அவுட் ஆகியிருப்பாரு சச்சின். இதனாலேயே ஆஃப் சைட் கவர் டிரைவ் பண்ணணும்ங்குற தன்னோட ஆசையை முழுசா கட்டுப்படுத்திக்கிட்டாரு. இன்னும் சொல்லப்போனா அந்த டெஸ்ட் மேட்சுக்கு முதல் நாள் டின்னர் ஆஸ்திரேலியால இருக்க ஒரு மலேசியன் ரெஸ்டாரெண்ட்ல ஃபேமிலியோட போய் சாப்டிருக்காரு சச்சின். அடுத்த நாள் அவரோட ஃபேமிலி இந்தியா திரும்பிட, முதல் நாள்ல சச்சினோட ஸ்கோர் 73*. அந்த சென்டிமென்ட்ல அடுத்த நாளும் அதே ரெஸ்டாரெண்டுக்குப் போய் ஃபேமிலியோட அமர்ந்திருந்த அதே டேபிள்ல உக்காந்து முதல் நாள் ஆர்டர் பண்ண அதே சாப்பாடை சாப்பிட்டிருக்கார். அடுத்த நாள் முழுக்கவே பேட் பண்ண அவரை ஆஸ்திரேலியர் பௌலர்ஸால அவுட் ஆக்க முடியல. அந்த நாள் முடிவுல அவரோட ஸ்கோர் 220*. இதனால சென்டிமென்ட் அதே ஹோட்டலுக்குப் போய் சாப்டிருக்கார்.

ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ்ல கிட்டத்தட்ட 436 பால்ஸ், 10 மணி நேரம் களத்துல நின்ன சச்சின் 241 ரன்னோட நாட் அவுட்டா களத்துல நின்னாரு. இதுல லக்ஷ்மண் கூட சேர்ந்து பாட்னர்ஷிப்பா அடிச்ச 383 ரன்ஸும் முக்கியமானது. ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் மட்டுமில்ல செகண்ட் இன்னிங்ஸ்லயும் 60 ரன்னோட நாட் அவுட்டாதான் களத்துல இருந்தாரு சச்சின்.சச்சின் எத்தனையோ டெஸ்ட் இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும் அதுக்கெல்லாம் ஒருபடி மேல இந்த இன்னிங்ஸ்னு எத்தனையோ ஜாம்பவான்களால் புகழப்பட்ட இன்னிங்ஸ் அது!
2zcj89
3v2g2f
I like this website very much, Its a rattling nice situation to read and obtain info.Blog money
Piece oof writijng writing iss alswo a fun, iff you bee acquainted with after that youu
caan wrikte oor else it is complicated tto write.