ஒயிட்பால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டி20, ஒருநாள் உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராஃபினு ஐசிசி நடத்துற 3 கோப்பைகளையும் வென்றவர் கேப்டன் தோனி. அதேபோல், ஒயிட் பால் கிரிக்கெட்ல சக்ஸஸ்ஃபுல் கேப்டனாவும், ஃபினிஷராவும் கொண்டாடப்படுற தோனி, டெஸ்ட் கிரிக்கெட்லயும் விக்கெட் கீப்பர் batter-ஆ சில,பல மாஸான சம்பவங்களைப் பண்ணியிருக்கார்னே சொல்லலாம். கேப்டன் பொறுப்பைத் தவிர்த்து ஒரு விக்கெட் கீப்பர் batter-ஆ டெஸ்ட் கிரிக்கெட்ல தோனி ஒரு Underrated Player-னு சொல்வாங்க… டெஸ்ட்ல அவர் பண்ண சாதனைகள், அவரோட கரியர் கிராஃப் எப்படி இருக்குனுதான் நாம இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
தோனியோட டெஸ்ட் கரியர்னு பார்த்தீங்கன்னா, 2005ல இருந்து தொடங்கணும். இலங்கைக்கு எதிரா பெங்களூர்ல நடந்த டெஸ்ட்ல அறிமுக வீரரா 2005 டிசம்பர் 2-ம் தேதி தொடங்குன மேட்சுல களமிறங்குன தோனி, கிட்டத்தட்ட 9 வருஷம் கழிச்சு மெல்போர்ன்ல 2014 டிசம்பர் 26-ம் தேதி தொடங்குன மேட்சோட ஓய்வை அறிவிச்சார். ஆஸ்திரேலியா சீரிஸ் நடந்துட்டு இருந்தபோதே அவர், ரிட்டையர்மெண்டை அவர் செலக்ட் பண்ண கோலி இந்திய டெஸ்ட் டீமோட கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகள்ல விளையாடியிருக்க தோனி, அதுல 60 போட்டிகள்ல இந்திய அணிக்குத் தலைமை தாங்கியிருக்காரு. அதுல 27 வெற்றி, 18 தோல்வி, 15 போட்டிகள் டிரா. அவர் தலைமையில இந்தியா டெஸ்ட்ல நம்பர் ஒன் டீமா உயர்ந்துச்சு. ஆனாலும், வெளிநாடுகள்ல அதிகமான வெற்றிகள் பெறலைனு ஒரு விமர்சனம் அவர் கேப்டன்சி மேல இருக்கு. இதுதான் டெஸ்ட் மேட்ச்ல கேப்டன் தோனியோட ரெக்கார்டு.
அதேநேரம், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனா அவர் பண்ண பல தரமான சம்பவங்களைப் பார்த்தோம்னா ஏன் டெஸ்ட் மேட்ச்களில் அவரை Underrated Player-னு சொல்றாங்கனு புரியும். டெஸ்ட் போட்டிகள்ல அதிக ரன்கள் குவிச்ச விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் வரிசைல கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சருக்கு அடுத்தபடியா 4,876 ரன்களோட மூணாவது இடத்துல இருக்காரு எம்.எஸ். இந்த வரிசைல டாப் டென்ல பத்தாவது இடத்துல இருக்க பங்களாதேஷோட முஷிஃபிகூர் ரஹீம்தான் ஒரே ஆக்டிவ் பிளேயர். ஆசிய விக்கெட் கீப்பர்னு பார்த்தா தோனிக்குத்தான் முதலிடம்.
அதேமாதிரி, முதல் 90 டெஸ்ட்கள்ல அதிக ரன்கள் சேர்த்த விக்கெட் கீப்பர்கள்னு பார்த்தா, கில்கிறிஸ்ட் 5,353 எடுத்திருக்காரு. ரெண்டாவது இடத்துல 4,876 ரன்களோட இருக்க தோனிதான் இருக்காரு. வெளிநாடுகள்ல நடக்குற போட்டிகள்ல அதிகமுறை 50+ ஸ்கோர் அடிச்ச பிளேயர்ஸ் லிஸ்ட்ல முதல் இடத்தை ஆலன் நாட்டோட (19 முறை) தோனி பகிர்ந்திருக்கிறார். 2,800 – 4,800 ரன்கள்ங்குற மைல்ஸ்டோனை எட்டிய முதல் இந்தியன் விக்கெட் கீப்பர், 3,200 – 4,800 ரன்கள் மார்க்கைத் தாண்டுன முதல் ஆசிய விக்கெட் கீப்பர் தோனிதான். பேட்டிங் ஆவரேஸ் வைஸ் பார்த்தா, ஆசிய அளவுல 2-வது இடத்துலயும், ஓவர் ஆலா 4-வது இடத்துலயும் இருக்காரு தோனி.
டெஸ்ட் கிரிக்கெட்ல நம்பர் 8 பேட்ஸ்மேனா அதிக ஆவரேஜ் வைச்சிருக்கதோட, கேப்டன் விக்கெட் கீப்பரா அதிக ரன்கள் அடிச்சவங்க பட்டியல்ல 3,454 ரன்களோட முதலிடத்துலயும் எம்.எஸ். இருக்காரு. SENA நாடுகள்னு சொல்லப்படுற தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 1,500 ரன்களுக்கு மேல் குவித்திருக்கும் மற்றும் இங்கிலாந்தில் நடந்த ஒரே சீரிஸில் 300 ரன்களுக்கும் மேல் குவித்த ஒரே ஆசிய விக்கெட் கீப்பர்ங்குற சாதனையும் இவர்கிட்டதான் இருக்கு. இதுதவிர, தோனி டெஸ்ட் விளையாடிட்டு இருந்த சமயத்துல மூன்று முறை ஐசிசி-யோட கனவு டெஸ்ட் டீமில் விக்கெட் கீப்பரா செலெக்ட் பண்ணப்பட்டார்.
Non-Losing Cause-னு சொல்லப்படுற டீம் தோல்வியடையாத போட்டிகள்னு பார்த்தீங்கனா தோனி 66 மேட்சுகளில் விளையாடியிருக்கார். இதுல அவரோட ரன்கள் 3,624. பேட்டிங் ஆவரேஜூம் 44-க்கு மேல. இந்தப் போட்டிகள்ல 29 முறை 50+ ஸ்கோர்ஸ் அடிச்சிருக்காரு. ஒரு ஆசிய விக்கெட் கீப்பரா, உள்ளூர், Away போட்டிகள்ல அதிக ரன்கள், வெற்றிபெற்ற போட்டிகள்ல அதிக ரன்கள், டிராவான மேட்சுகளில் அதிக ரன்கள், SENA மற்றும் Over All-ஆ அதிக ரன்கள் இப்டினு ஏகப்பட்ட ரெக்கார்டுகளை வைச்சிருக்காரு தோனி. டெஸ்ட் போட்டிகள்ல கேப்டனாவே அதிகம் கவனிக்கப்பட்ட நிலையில், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனா அதிகமா தோனி கவனிக்கப்படவே இல்லைங்குறதுதான் நிதர்சனம். இதனாலதான் அவரை டெஸ்ட் போட்டிகள்ல Underrated பேட்ஸ்மேன்னு சொல்றாங்க…
2012-13 சீசன்ல சென்னை சேப்பாக்கம் கிரவுண்ட்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிரா அவர் அடிச்ச 224 ரன்கள் என்னோட பெர்சனல் ஃபேவரைட். அதேமாதிரி, தோனியோட டெஸ்ட் இன்னிங்ஸ்கள்ல உங்களோட மனசுக்குப் பிடிச்சது எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
Also Read – Popeye-க்கு லைசென்ஸ் கிடைக்காததால Mario பிறந்த கதை! #DontMissIt
m2rkfk